சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகிணி மனோஜ் கடைக்கு வருகிறார் அப்பொழுது ரோகிணி எனக்கு பார்லரில் வேலை இருப்பதாக சொல்லிவிட்டு உள்ளே வர உடனே மனோஜ் ஒரு கிளைமேட் மீட்டிங் இருக்கிறது நான் சென்று விட்டு வருகிறேன் என வெளியே செல்கிறார் அந்த சமயத்தில் ரோகிணியை பணம் கேட்டு மிரட்ட அந்த நபர் வந்துள்ளார்.. அப்பொழுது அந்த நபரிடம் ரோகிணி இப்பொழுது என்னிடம் பணம் இல்லை எனக் கூறுகிறார்.
அதற்கு நீ பணம் காய்க்கும் மரம் நான் கேட்கும் பொழுது நீ பணம் கொடுத்து தான் ஆக வேண்டும் என மிரட்டுகிறார் அது மட்டும் இல்லாமல் பணம் இல்லை என்றால் பொருளாக எடுத்துக் கொள்கிறேன் என பேசுகிறார் நாங்களே இப்பதான் ஸ்டார்ட் பண்ணி இருக்கோம் வாழ்க்கையை இப்ப வந்து ஏன் பிரச்சனை பண்ணுற என ரோகிணி பேச உனக்கு வேற ஆப்ஷன் கிடையாது கல்யாணி என பேசுகிறார் அதற்கு ரோகிணி ஏன் இப்படி என்ன டார்ச்சர் பண்ற என பேச அந்த நபர் சரி நான் இங்கேயே வெயிட் பண்றேன் மனோஜ் வரட்டும் எல்லாத்தையும் சொல்லிடுறேன் என பேச அதெல்லாம் வேண்டாம் நீ பொருள் எடுத்துக் கொண்டு போ என்பது போல் கூறி விடுகிறார்.
பிரிட்ஜ் வாஷிங் மெஷின் ஏசி டிவி என அனைத்தையும் அள்ளிச் செல்கிறார் வண்டி போை பர்த்த னோஜ் இன்னைக்கு நல்லா சேல்ஸ் போல என ரோகினி இடம் கேட்க உடனே கல்லாப்பெட்டியை பார்க்கிறார் பணமில்லை ஒருவேளை கார்டில் பே பண்ணி இருப்பார்கள் என போனை எடுத்துப் பார்க்க பணம் ஒன்றும் வரலை ரோகினிடம் கேட்க அவர்கள் இ எம் ஐ எடுத்துள்ளார் என சமாளிக்கிறார் அது மட்டும் இல்லாமல் என்னுடைய கிளைன்ட் ஹஸ்பெண்ட் எனவும் கூறுகிறார்.
நீதானே இஎம்ஐ ல கொடுக்க வேண்டாம் என்று சொன்ன இப்ப ஏன் கொடுத்த என பேசுகிறார் மேலும் அதற்கு ரோகிணி கோவப்பட்டு எனக்கு உரிமை கிடையாதா என பேசுகிறார் ஒரு வழியாக பேசி விட்டு வெளியே வருகிறார் ரோகிணி அப்பொழுது தன்னுடைய தோழியை அழைத்து நடந்ததை கூறுகிறார் அப்பொழுது அவனை இரண்டு தட்டு தட்ட வேண்டும் எனவும் பிளான் பண்ணுகிறார்கள் அதற்கு சிட்டியை தேடி போகிறார்கள்.
மற்றொரு பக்கம் மீனா சமைத்துக் கொண்டிருக்க சுருதி இன்னைக்கு நீங்க சமைக்க மாட்டீங்க ன்னு நினைச்சன் ஆனா சமைக்கிறீங்க என பேசுகிறார் என கூற சிறிது நேரத்தில் சமையல் முடிந்துவிடும் சாப்பிட்டுவிட்டு செல்லலாம் என பேசிக் கொண்டிருக்கும் பொழுது நீங்க இவ்ளோ சீக்கிரம் கோபத்தை கண்ட்ரோல் பண்ணிக்கிட்டீங்க உங்களுக்கு பெரிய மனசு என்பது போல் பேச அதற்கு அவர் என்னை தேடி நைட்டு புல்லா அலைந்து இருக்காரு அதனால எனக்கு அது பெருசா தெரியல என மீனா கூறுகிறார்.
இதுவே ரவி இது மாதிரி பண்ணி இருந்தா இன்நேரம் கடிச்சு கொதறி இருப்பேன் என சுருதி பேசுகிறார் அதேபோல் ஆன்ட்டிக்கு கரண்டிய பழுக்க வைத்து சூடு போட்டு இருப்பேன் எனவும் கூறுகிறார். இதனை கேட்டுக் கொண்டிருந்த விஜயா அதிர்ச்சடைகிறார் ஸ்ருதி கிளம்பியதும் மீனாவிடம் விஜயா என்ன ஆள் சேக்குறியா என்ன மிரட்ட ஆள் சேக்குறியா என்பது போல் பேசுகிறார் மற்றொரு பக்கம் சிட்டி இடம் ரோகிணி சென்று இந்த நபர் என்னை மிரட்டுகிறார் இவரை தட்டி வைக்க வேண்டும் என ஹெல்ப் கேக்குகிறார்.
அதற்கு சிட்டியும் நீங்க எங்களுடைய கிளைன்ட் இத நாங்க செய்கிறோம் எனவும் பேசுகிறார் உடனே ரோகினையை மிரட்டும் அந்த நபருக்கு போன் செய்து தன்னுடைய ஆபீஸ்க்கு வர சொல்கிறார் சிட்டி அவரை பார்த்து என்ன மிரட்டரியா என வெளுத்து வாங்குகிறார் ஆனால் அந்த நபர் தப்பித்து ஓடுகிறார் மேலும் வண்டி எடுத்து செல்கிறார் அப்பொழுது எதிர்பாராத விதமாக ஒரு பாட்டி மீது இடித்துவிட்டு சென்று விடுகிறார் அதனைப் பார்த்துக் கொண்டிருந்த முத்து அவரை பின்தொடர்ந்து செல்கிறார் ்னுடைய ண்பனிடம் அந்த பாட்டியை பார்த்துக் கொள் எனவும் கூறிவிட்டு அந்த நபர துரத்துகிறார்.
அதேபோல் சிட்டியும் அந்த நபரை துரத்துகிறார். அந்த நம்பருக்கு ஏதாவது ஆனால் அந்த பழியை முத்து மீது சிட்டி போடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.