சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் பாட்டியின் பிறந்தநாளுக்காக அனைவரும் கொண்டாட்டமாக கிளம்புகிறார்கள் அது மட்டும் இல்லாமல் பலூன் கட்டி டெக்கரேஷன் செய்து கோலகாலமாக கொண்டாட ஆரம்பிக்கிறார்கள். ஆனால் முத்து இன்னும் வராமல் இருப்பதால் அனைவரும் அவருக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் அதற்குள் முத்து குடிச்சிட்டு தான் வருவான், அதுமட்டும் இல்லாமல் வருவானா இல்லையோ என விஜயா வார்த்தையை விடுகிறார்.
மீனாவின் குடும்பம் அப்பொழுது வருகிறது மீனாவின் அம்மா வந்ததும் பாட்டி வரவேற்கிறார் அதேபோல் அண்ணாமலையும் வரவேற்கிறார் அடுத்ததாக மீனாவின் அம்மா மற்றும் சீதா இருவரும் முத்து எங்கே என கேட்கிறார்கள் சவாரிக்கு போய் இருக்கிறார் கண்டிப்பாக வந்து விடுவார் எனக் கூறுகிறார். உடனே சீதாவிடம் படிப்பு முடிந்து விட்டதா என பாட்டி கேட்க இந்த வருடத்தில் முடிகிறது என கூறுகிறார்.
உடனே படிச்சு முடிச்சதும் நல்ல வரனா கிடைச்சா கல்யாணம் பண்ணி கொடுத்துடனும் என பேசுகிறார் நல்லா வரணும்னா எப்படி அதுக்கு இன்னொரு ட்ரெயின்ல யார் சாவா என விஜயா கேட்கிறார். உடனே பாட்டி கோவப்பட்டு நீ வாய மூடுரியா நானும் நல்ல நாளாச்சே என்று திட்டக்கூடாது என்று பார்த்தால் நீ ரொம்பதான் பண்ற என அதட்டுகிறார். சுருதி படிச்சு முடிச்சுட்டு வேலைக்கு போயிட்டு அப்புறமா கல்யாணம் பண்ணிக்க அப்பதான் உனக்காண மரியாதை கிடைக்கும் என பேசுகிறார் அதே போல் மீனாவும் வேலைக்கு போனா தான் உனக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கண்டிப்பா கிடைக்கும் இல்லை என்றால் என்ன மாதிரி தான் இருப்பாய் என விஜயாவை குத்தி காட்டுகிறார்.
அதேபோல் பாட்டியும் விஜயாவை குத்தி பேசுகிறார். இப்படி ஆளாளுக்கு பேச ரவி பலூனை வெடித்து விடுகிறார் உடனே நீ வாங்கிட்டு வந்த பலூன் இதுதான் நிலைமை என பேச உன்ன எல்லாம் கல்யாணம் பண்ணிக்கிட்டு எவன் கஷ்டப்பட போறானோ உன்ன எல்லாம் கல்யாணம் பண்ணிகிட்டா அவன் சீக்கிரம் ஓடிவிடுவான் என பேசுகிறார் உன்னையே ஒருத்தி கல்யாணம் பண்ணும் போது என்னையும் ஒருத்தன் கல்யாணம் பண்ணிக்க மாட்டானா என அடித்து விளையாடுகிறார்கள்.
ரூமில் இருந்து வந்த சுருதி மீது ரவி மோத உடனே என்ன நடக்குது இங்க என பேசுகிறார். உடனே நடந்ததைக் கூற அப்படி எல்லாம் அடிச்சா வலிக்காது இப்படி அடிக்கணும் என சுருதியும் அடித்து விளையாடுகிறார். ஆனால் அதற்குள் விஜயா வாய்க்கு வந்தபடி சீதாவை தவறாக பேசுகிறார். அப்பொழுது மீனா கிளாசை எடுக்க வர சுருதியின் அம்மா ரெஸ்டே கொடுக்காமல் வேலைக்கு போறாங்க முத்து ஆனா நீ இன்னும் கவரிங் நகை போட்டு இருக்கியா என மீனாவை பார்த்து கேட்கிறாள்.
அதற்கு இது கவரிங் நகை கிடையாது தங்க நகை என விஜயா கூற, சம்பந்தி இது கவரிங் நகை தான் எனக்கு தெரியாதா இதை பார்த்தாலே நான் கண்டுபிடிச்சிடுவேன் என பேசுகிறார் உடனே பாட்டியும் உனக்கு பில் எல்லாம் வாங்கி கொடுக்கணுமா என பேசுகிறார். உடனே ஸ்ருதியின் அம்மா சாரி மீனா நான் பார்க்க கவரிங் நகை மாதிரி இருக்கிறதால் கேட்டேன் என பூசி மூழ்குகிறார். விஜயாவும் மனோஜம் அதிர்ச்சியில் இருந்து வெளிய வந்து அப்பாடா என பெருமூச்சு விடுகிறார்கள்.
முத்து வராததால் வாய்க்கு வந்தபடி அனைவரும் பேசுகிறார்கள் கவரிங் நகை மேட்டர் விரைவில் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.