மீனாவின் ஆசையில் ஒரு வண்டி மண்ணை அள்ளி கொட்டிய முத்து..! க்ரிஸ்ஸிடம் ஃபோன் பேசி மனோஜிடம் மாட்டிக் கொண்ட ரோகினி.

siragadikka aasai july 31 episode
siragadikka aasai july 31 episode

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா பூ கட்டி கொண்டிருக்கும் பொழுது மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது ஒருவர் என் வீட்டுக்காரர் ரொம்ப மோசம் நான் அவ்வளவு ஆசையாக  சமைச்சு கொடுத்தன் அத நல்லா இருக்குன்னு கூட சொல்லல அந்த அளவு மோசமானவன் என பேச மீனா அப்படியெல்லாம் கிடையாது எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க என் வீட்டுக்காரர் அப்படி கிடையாது எனக் கூற.

அதற்கு மற்றவர்கள் கல்யாண புதுசுல அப்படித்தான் இருப்பாங்க போற போக்குல எல்லாமே மாறிடும் நீ வேணா பாரு நீ போயிட்டு இந்த ஆந்திரா ஸ்பெஷல் ஐட்டத்தை செஞ்சு கொடு அதை சாப்பிட்டு என்ன சொல்றாங்கன்னு பாரு அப்படி சொல்லலனா எனக்கு 50 ரூபா கொடுத்துடு  என மற்றவர்கள் பெட் கட்ட மீனாவும் என் புருஷனை நம்பி 50 ரூபாய் என்ன 5000 கூட கட்டலாம் என பேசுகிறார் மீனா.

மற்றொரு பக்கம் விஜயா மற்றும் ரோகினியை அழைத்து மனோஜ் இனிமேல் என் டிரஸ் கோட் இதுதான் போட்டுக்க போகிறேன் எனக் கூறுகிறார்கள் அதற்கு விஜயா இதை ஏன் என்கிட்ட சொல்ற என பேசுகிறார் இனிமேல் என்னுடைய உடலை நீங்கள் துவைக்க கூடாது ரோகிணி தான் துவைக்க வேண்டும் எனவும் பேசுகிறார்கள்.

மேலும் அடுத்த நாள் காலையில் மீனா பூக்கடையில் பேசிக் கொண்டது போல் புதிய ஐட்டம் ஒன்றை சமைத்து வைத்துள்ளார் அதனை சாப்பிட்டு விட்ட அண்ணாமலை பாராட்டி தள்ளுகிறார் அதேபோல் விஜயாவும் முதலில் திட்டுவது போல் பேச பிறகு சாப்பிடுவது போல் இருக்கிறது என பாராட்டுகிறார் அதே போல் சுருதி ரவி என அனைவரும் பாராட்டி பேசுகிறார்கள்.

அது மட்டும் இல்லாமல் ரோகினி மற்றும் மனோஜ் இருவரும் பாராட்டுகிறார்கள் இந்த நிலையில் முத்து போன் பேசிக்கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் ஆனால் மீனாவின் சமையலை ஒரு நிமிடம் கூட பாராட்டவில்லை இதனால் மீனா முகம் சோர்வடைகிறது கடைசியாக வெளியே கிளம்பும்போது கூட முத்து தண்ணீர் கேட்கிறார் அப்பொழுது கூட அவர் பாராட்டவில்லை அதனால் மீனாவின் சபதம் தோற்றுவிடுகிறது.

கடைக்கு சென்ற ரோகிணி மற்றும் மனோஜ் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென ரோகினிக்கு போன் வர க்ரிஷ் பேசுகிறான் பிறந்தநாள் உடை நீங்கள்தான் வாங்கிக் கொண்டு வர வேண்டும் என பேச அதற்கு நான் வாங்கிகிட்டு வரேன் செல்லம் என பேச அப்பொழுது மனோஜ் கேட்டு விடுகிறார் யாருக்கு டிரஸ் வாங்க போகிறாய் என கேட்க கிளைன்ட் ஒருவர் மகனுக்கு பிறந்தநாள் அதற்காக என கூறி சமாளிக்கிறார். இத்துடன் எபிசோட் முடிகிறது.