முத்துவுக்கு தெரியவரும் ஜீவா கொடுத்த 30 லட்சம்.. ஸ்ருதியால் சிக்க போகும் மனோஜ்.. மீனாவுக்கு சப்போர்ட்டாக பல குரல்..

siragadikka aasai july promo
siragadikka aasai july promo

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்துள்ளது எப்படி ரோகிணி மாட்டுவார் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் ஏனென்றால் ரோகிணி தான் பொய், பித்தலாட்டம் என குடும்பத்தையே ஏமாற்றி வருகிறார்.

மற்றொரு பக்கம் விஜயா ரோகினியின் முழு சுயரூபம் தெரியாமல் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார், அதேபோல் விஜயாவை எப்படியாவது கவர வேண்டும் என பல திருட்டு வேலைகளை செய்து பாராட்டுகளையும் பெற்று வருகிறார். அந்த வகையில் மனோஜ் பிசினஸ் பண்ணுவதற்கு எங்கிருந்து 30 லட்சம் வந்தது என கேள்வி வரக்கூடாது என்பதற்காக ஜீவா கொடுத்த 30 லட்சத்தை தன்னுடைய அப்பா தான் அனுப்பி வைத்தார் என அனைவரையும் நம்ப வைத்தார் ரோகினி.

என்னதான் மனோஜ் ஜீவாவிடம் ஏமாந்து போனாலும் ஆனால் ரோகினி இடமிருந்து ஜீவா தப்ப முடியவில்லை 30 லட்சம் மேட்டரை யாரிடமும் சொல்லாமல் மறைத்து கமுக்கமாக மனோஜ்க்கு பிசினஸை தொடங்கி விட்டார்கள். அனைவரும் கண்ணிலும் விரலை விட்டு ஆட்டி வருகிறார்கள் ரோகிணி ஒட்டுமொத்த குடும்பத்தையும் ஏமாற்றி வருகிறார் தற்பொழுது கையும் களவுமாக மாட்டப் போகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாட்டியின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக பூ வாங்குவதற்கு ஸ்ருதி மற்றும் மீனா இருவரும் சேர்ந்து பூக்கடைக்கு செல்கிறார்கள் அப்பொழுது மீனா பூ வாங்கிக் கொண்டிருக்கும் பொழுது சுருதி வைத்திருக்கும் பேக்கை ஒருவர் திருடி விட்டு செல்கிறார். இந்த தகவலை அறிந்த மீனா மற்றும் சுருதி இருவரும் முத்துவுக்கு போன் செய்து மேட்டர் என்ன என்பதை கூறுகிறார்கள்.

உடனே மூவரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்கிறார்கள் அப்பொழுது மனோஜ் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று கம்பளைண்ட் கொடுத்துள்ள பேப்பரை பார்க்கிறார்கள் இந்த கையெழுத்து மனோஜ் கையெழுத்தாச்சே என சுருதி பார்க்க பிறகு இதைப் பற்றி விசாரிக்கிறார்கள். அப்பொழுது ஒரு கான்ஸ்டபிள் மனோஜ் யார் என கேட்கிறார். அதற்கு முத்து என்னுடைய அண்ணன் எனக் கூறுகிறார்.

உடனே அந்த கான்ஸ்டபிள் இந்த மனோஜ் 27 லட்சம் பணத்தை ஜீவா என்ற பெண்ணிடம் ஏமாந்துள்ளார் ஆனால் அந்த ஜீவா என்ற பெண்ணை பிடித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டி வந்துள்ளார்கள் பிறகு அவரிடம் இருந்து வட்டியும் முதலுமாக முப்பது லட்சத்தை வாங்கிக் கொடுத்தோம் ஆனால் தற்பொழுது மீண்டும் ஒரு ஏமாற்ற கும்பலிடம் ஏமாந்துள்ளார் அதனால் 4 லட்சம் மதிப்புள்ள பல பொருள்களை ஏமாந்துள்ளார்.

உடனே முத்து இது அனைத்தையும் கேட்டு அதிர்ச்சி அடைகிறார் ஆவேசப்படுகிறார் ஆனால் சுருதி அமைதியாக இருங்க இதை நான் டீல் பண்ணிக் கொள்கிறேன் என வீட்டிற்கு செல்கிறார்கள் அப்பொழுது சுருதி மூலம் ரோகிணி மற்றும் மனோஜ் பண்ண தில்லாலங்கடி வேலை அனைத்தும் தெரிய வரப்போகிறது என தெரிகிறது மேலும் மீனா அப்பாவியாக இருப்பதால் அவருக்கு சப்போர்ட்டாக சுருதி நியாயம் கேட்டு பேச போகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது.