மீனா செய்த பைத்தியக்காரத்தனத்தால் தப்பித்த மனோஜ், விஜயா… முத்துவுக்கு வந்த கோபம்…

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா கொடுத்த தங்க நகையை எடுத்துக் கொண்டு புதிய நகை வாங்கலாம் என கடைக்கு சென்று உள்ளார்கள். அப்பொழுது நகையை செக் பண்ணி கடைக்காரர்இது கவரிங் நகை என கூறுகிறார் இதனால் முத்து கோபப்படுகிறார் அதுமட்டுமில்லாமல் கடைக்காரர் சட்டையை பிடித்து அடிக்க கை ஓங்குகிறார் உடனே மீனா தடுத்து நிறுத்தி நாங்க தங்க நகை தான் எடுத்துக் கொண்டு வந்தோம் எனக் கூற கடையின் முதலாளி நீங்க தங்க நகை தான் எடுத்துக் கொண்டு வந்தீர்களா அது உங்களுக்கு நல்லா தெரியுமா என கேட்கிறார் சிசிடிவி இருக்கிறது யாரும் அப்படி மாற்றிவிட முடியாது எனவும் கூறுகிறார்.

உடனே நகையை வாங்கிக் கொண்டு முத்து மற்றும் மீனா இருவரும் வீட்டிற்கு செல்கிறார்கள் இதனை உடனடியாக கேட்க வேண்டும் என முத்து துடிக்க ஆனால் மீனா பாட்டியோட பிறந்தநாள் வருவதால் கொஞ்சம் அமைதியாக இருங்கள் இரண்டு நாள் கழித்து கேட்டுக் கொள்ளலாம் என கூறுகிறார் ஆனால் முத்து முடியாது அந்த மனோஜ் அடிச்சா கண்டிப்பாக உண்மை வெளியே வந்து விடும் என கூறுகிறார்.

ஆனால் மீனா தலையில் சத்தியம் வாங்கிக் கொள்கிறார் முத்துவிடம் கண்டிப்பாக சொல்லக்கூடாது என கூறி விடுகிறார். பாட்டியின் பிறந்தநாளுக்காக வீட்டில் பலூன் ஊதி அனைவரும் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது விஜயா பதட்டத்துடன் இருக்கிறார் எங்கு நாம் மாட்டிக் கொண்டோமோ என முடித்துக் கொண்டிருக்கிறார்.

முத்துமீனா இரண்டு பேரும் வீட்டிற்குள் வர விஜயா மற்றும் மனோஜ் இருவரும் பார்க்கிறார்கள் திரு திரு என முழிக்கிறார்கள் உடனே முத்து பலூன் ஊதி மனோஜ் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது வெடித்து விடுகிறார். இப்படித்தான் பிரஷர் தாங்க முடியாமல் ஒருநாள் வெடிக்க போகிறது என பேசுகிறார் முத்து.

அதேபோல் மனோஜ் அந்த முத்து ஏதாவது கேட்டானா என ரோகினி இடம் கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்லையே நீ ஏன் முத்து பத்தி கேட்டுக் கொண்டிருக்கிறாய் என பேசுகிறார். அதற்கு மனோஜ் நான் குளிக்க போய்ட்டு வந்து வருகிறேன் என உள்ளே செல்கிறார் அந்த சமயத்தில் க்ரிஷ் கால் செய்து ரோகினி இடம் பேசிக் கொண்டிருக்கிறார். உடனே மனோஜ் யாரைச் செல்லம் என்று கூறினாய் என கேட்க அது என்னுடைய பிரண்டு என கூறி சமாளிக்கிறார் ரோகிணி.

மேலும் இப்படியே சென்று கொண்டிருக்க அடுத்த நாள் பாட்டி வந்து விடுகிறார் பாட்டிக்காக பலரும் எனக்கு செய்யலாம் என பேசிக் கொண்டிருக்கிறார்கள் ஸ்ருதி மொபைல் வாங்குவதாகவும் ரவி கேக் செய்வதாகவும் கூறியுள்ளார் இத்துடன் எபிசோட் முடிகிறது நாளை எபிசோடில் பாட்டி எனக்கு யார் நல்ல பரிசு தருகிறார்களோ அவர்களுக்கு நான் ஒரு நல்ல சர்ப்ரைஸ் தரப் போகிறேன் என கூறுகிறார்கள் இத்துடன் எபிசோட் முடிகிறது.