உன்னால தான் என் புள்ளைக்கு இப்படி ஆகிடுச்சு.. மருமகள் முன்னாடி விஜயாவை திட்டிய பாட்டி – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

Siragadikka Aasai
Siragadikka Aasai

Siragadikka Aasai today episode december 29 : இன்றைய எபிசோடில் பாட்டி ஊரில் இருந்து அண்ணாமலை வீட்டிற்கு வந்து விஜயாவிடம் என் பையனுக்கு நெஞ்சில் ஆபரேஷன் எல்லாம் பண்ணி இருக்கீங்க என்கிட்ட சொல்லவே இல்ல, ரவிக்கும் நான் இல்லாமலே கல்யாணம் பண்ணி வச்சிட்டீங்க என்று கோபப்பட்டு கத்துகிறார்.. பிறகு மனோஜூம் ரோகிணியும் வருகின்றனர்.

அவர்கள் எப்படி இருக்கீங்க பாட்டி என்று கேட்க என்னோட பையனுக்கு உடம்பு சரியில்லாத மறைச்சிட்டீங்க என்று கோபப்படுகிறார்.. பிறகு முத்து வீட்டிற்கு வந்து பாட்டியை பார்த்ததும் பாட்டி எப்படி இருக்க உன்ன தூக்கி எவ்வளவு நாளாச்சு என்று சந்தோஷமாக பேச வரும்போது பாட்டி முத்துவை ஓங்கி கன்னத்தில் அறைந்து..

ஒரே வருடத்தில் 18 திரைப்படங்களில் நடித்த அசத்திய விஜயகாந்த்..! இதோ முழு லிஸ்ட்.

என்கிட்ட பேசாத அப்பாக்கு உடம்பு சரியில்லாத என்கிட்ட மறைச்சிட்ட என்று கேட்க அப்பா தான் சொல்ல வேணாம்னு சொன்னாரு என்று முத்து சொல்கிறார் பிறகு இந்த வீட்ல மீனாவுக்கு மட்டும் தான் என் மேல அக்கறை இருக்கு அவ தான் சொன்னா என்று பாட்டி சொல்கிறார்.

அடுத்து ரவி பாட்டியிடம் இது தான் என்னோட பொண்டாட்டி என்று ஸ்ருதியை சொல்ல உங்க அப்பா அம்மா என்ன உன்ன வளத்தாங்க இப்படி ஓடிப் போய் கல்யாணம் பண்ணி இருக்க என்று கேட்க, ஸ்ருதி நாங்க வீட்ல சொன்னோம் அவங்க ஒத்துக்கல அதனால நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டோம், என்று பாட்டியிடம் பதிலுக்கு பதில் பேசுவதற்கு ரவி அமைதியா இரு என்று ஸ்ருதியை சொல்கிறார்..

எங்கள விட்டுட்டு போயிட்டியே அண்ணா.. விஜயகாந்தின் உடலை பார்த்து கதறி அழுத சத்யராஜ்.!

பிறகு பாட்டி அண்ணாமலையை பார்த்து உனக்கு ஒரு காய்ச்சல் கூட வராமல் எப்படி எல்லாம் பொத்தி பொத்தி வளர்த்தேன் இந்த விஜயா கிட்ட உன்னை தாரை வாத்து கொடுத்ததுக்கு அப்புறம் தான் உனக்கு இந்த மாதிரி நிலைமை, உன்ன அவ சரியா பாத்துக்கல அதனாலதான் நெஞ்சு வலி வந்திருக்கும் என்று சொல்கிறார்..

அடுத்து ரூமுக்கு போய் முத்து மீனாவிடம் காலையில குடுகுடுப்பைக்காரன் சொன்னது சரியா போச்சு உன் வாயை கட்டி போடணும் ஏன் பாட்டிகிட்ட உண்மைய சொன்ன என்று கேட்க மீனா பாட்டி ரவிக்கு பொண்ணு பார்த்து வச்சிருக்கேன்னு சொன்னாங்க அவங்க பொண்ணு வீட்டுக்காரங்களோட நம்ம வீட்டுக்கு வந்து ரவிக்கு கல்யாணம் ஆனது தெரிஞ்சா அவங்க தானே அசிங்கப்படுவாங்க..

அதனால தான் உண்மைய சொன்னேன் என்று சொல்ல முத்து சரி ஒன்னோட காரணம் நியாயமா தான் இருக்கு இருந்தாலும் பாட்டி என்னை அடிச்சிடுச்சி பேசமாட்டேன்னு சொல்லிடுச்சு நானும் அது கிட்ட பேச மாட்டேன் என்று முத்து சொல்கிறார். அடுத்து பாட்டி ஸ்ருதியை கூப்பிட்டு உனக்காக புடவை வாங்கி சாமி பாதத்தில் வைத்து எடுத்துட்டு வந்து இருக்கேன் என்று கொடுப்பதற்கு ஸ்ருதி தேங்க்ஸ் பாட்டி இதுவரை ரவி கூட எனக்கு டிரஸ் வாங்கி தந்ததில்ல..

நீங்க தான் ஃபர்ஸ்ட் டைம் புடவை வாங்கி கொடுத்து இருக்கீங்க என்று சந்தோஷப்படுகிறார்.. பிறகு விஜயாவிடம் உனக்கெல்லாம் ஒன்னும் வாங்கிட்டு வரல நீ என் பையன சரியா பாத்துக்கல அதனாலதான் அவனுக்கு இப்படி நடந்து இருக்கு என்று விஜயாவை திட்டுகிறார் இதோடு இன்றைய எபிசோட் முடிந்துள்ளது.