Siragadikka Aasai today episode december 28 : இன்றைய எபிசோடில் முத்து ரோகினிடம் உங்க அப்பா மலேசியாவில் இருந்து இங்க வரவே இல்லையே என்று கேட்கிறார். உடனே அண்ணாமலை ஆமாம் நானுமே அதை பத்தி கேட்கணும்னு நினைச்சேன் உங்க அப்பா போன் பண்ணல இங்க வரவும் இல்ல என்னதான் பண்றாரு என்று கேட்க ரோகிணி அவர் பிசினஸ் விஷயமா டூர் போய் இருக்காரு என்று சொல்கிறார்.
பிறகு மனோஜ் ஏதோ மசாலா வாசம் வருது என்று சொல்ல ஆமாம் இந்த வீட்ல யாருக்கு என்ன தேவைன்னு எல்லாம் கரெக்டா நடக்குது ஆனா மீனாக்கு என்ன தேவைன்னு யாருமே கேட்கறது இல்ல அதனால தான் நான் மீனாவுக்கு தந்தூரி சிக்கன் வாங்கிட்டு வந்து இருக்கேன் என்று சொல்கிறார். உடனே விஜயா அது என்ன அவன் பொண்டாட்டிக்கு மட்டும் வாங்கிட்டு வந்து இருக்கான்..
அந்த மனசு தான் சார் கடவுள்.. போண்டா மணியின் மொத்த கடனையும் அடைத்த விஜயாகாந்த்.! வியந்த ரசிகர்கள்
அதுவும் வெளியே இருந்து வாங்கிட்டு வந்திருக்கான் இதெல்லாம் என்னங்க புது பழக்கம் என்று அண்ணாமலை இடம் சொல்ல.. அவன் பொண்டாட்டிக்கு அவன் வாங்கிட்டு வந்து இருக்கான் இதுல என்ன இருக்கு என்று அண்ணாமலை ஃப்ரீ ஆக விட்டு விடுகிறார். பிறகு ரூமுக்கு போய் முத்து தட்டில் சிக்கனை வைத்து மீனாவை சாப்பிட வைக்கிறார்.
மீனா இதெல்லாம் எதுக்கு நான் உங்ககிட்ட கேட்டனா வேணாமென்று சொல்கிறார்.. நாள் முழுக்க வேலை செய்ற இதெல்லாம் சாப்பிடணும் என்று முத்து சாப்பிட வைக்கிறார். அடுத்த நாள் காலையில் மீனா வாசல் தெளித்து கோலம் போடுவதற்காக வெளியே வந்திருக்கிறார். அப்பொழுது முத்துவும் அங்கு வந்து மீனாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் குடுகுடுப்பு காரர் அங்கு வந்து நல்ல காலம் பொறக்குது உங்க வாழ்க்கை இனிமே நல்லா இருக்க போகுது என்று முத்து மீனாவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். பிறகு ஊரிலிருந்து பாட்டி மீனாவுக்கு போன் பண்ணி எப்படி இருக்க என்று கேட்கிறார். அப்பொழுது நான் ரவிக்கு ஒரு பொண்ணு பார்த்து வச்சிருக்கேன் உன்ன மாதிரியே நல்ல குணமான பொண்ணு என்று சொல்ல..
மீனா பாட்டி ரவிக்கு கல்யாணம் ஆயிடுச்சு என்ற உண்மையை சொன்னதும் பாட்டி என்னது கல்யாணம் ஆயிடுச்சா என்கிட்ட சொல்லவே இல்லையே பொண்ணு யாரு என்று கேட்க மாமாவோட ஆபீஸ்ல உயர் அதிகாரியா வாசுதேவன் ஒருத்தர் வேலை பார்த்தாரு அவருடைய பொண்ணு தான் என்று சொல்ல அந்த வாசுதேவன் ஒரு விளங்காதவன்.
அவனோட பொண்ணையா அண்ணாமலை கட்டி வச்சிருக்கான் என்று கேட்க இல்ல ரெண்டு பேரும் லவ் பண்ணி அவங்க எல்லாம் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க இத தாங்கிக் கொள்ள முடியாமல் மாமாவுக்கு நெஞ்சு வலி வந்து ஹாஸ்பிடல் எல்லாம் சேர்த்து இருந்தாங்க என்று சொல்ல பாட்டி இவ்வளவு நடந்து இருக்கு என்கிட்ட இருந்து மறச்சிட்டிங்க இல்ல விஜயா தான் என்னை மதிக்க மாட்டான் நீ கூட என்கிட்ட சொல்லவில்லை என் பையன் எப்படி இருக்கானோ என்று பதறி அடித்து பாட்டி உடனே கிளம்பி வீட்டிற்கு வருகிறார்.. இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது..