வீட்டுக்கு வந்த ரவி – ஸ்ருதி.. விஜயாவின் திட்டத்தை சுக்குநூறாக உடைத்த முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

Siragadikka aasai December 02
Siragadikka aasai December 02

Siragadikka Aasai today episode December 2 : முத்து மீனாவிடம் நீ இன்னைக்கு பெரிய சாதனை பண்ணி இருக்க, இப்பதான் எனக்கு ஏத்த மாதிரி நீ கொஞ்சம் கொஞ்சமா மாறிக்கொண்டு இருக்க என்று மீனாவிடம் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்..

அடுத்த நாள் காலையில் விஜயா மீனாவிடம் கேசரி வடையெல்லாம் செய்ய சொல்கிறார் மீனா ஏன் அத்தை யாராவது வராங்களா என்று கேட்க விஜயா அதெல்லாம் உனக்கு எதுக்கு செய்ய சொல்றத மட்டும் செய் என்று சொல்கிறார். பிறகு முத்து இன்னும் சவாரிக்கு போகலையா அவனுக்கு சீக்கிரம் சாப்பாடு கொடுத்து போக சொல்லு என்று சொல்லிவிட்டு..

இதுக்கு பேரு டிரஸா.. ரம்யா பாண்டியன் புகைப்படத்துக்கு குவியும் லைக்ஸ்

விஜயா முத்து விடம் உனக்கு சவாரிக்கு நேரம் ஆகுது சாப்பிடு என்று விஜயா சாப்பாடு வைக்கிறார் அதை பார்த்து முத்து எங்க அம்மாவா இப்படி பண்றாங்க என்று ஷாக் ஆகிறார். அடுத்து முத்து மீனா கிட்ட மதியம் சாப்பிட வீட்டுக்கு வருவேன் என்று சொல்ல எதுக்கு அலைஞ்சிட்டு இருக்க முத்துவுக்கு மதியத்துக்கு டிபன் கட்டி கொடுத்துடு என்று விஜயா சொல்ல பிறகு மீனாவும் மதிய சாப்பாட்டையும் முத்துவிற்கு கொடுத்துள்ளார்..

பிறகு விஜயா முத்துவை சீக்கிரம் போ என்று துரத்திக் கொண்டே இருக்கிறார் முத்துவும் எல்லோரிடமும் நான் சவாரிக்கு போயிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு கீழே இறங்கி விட்டு திடீரென்று மேலே ஓடி வந்து அப்பா வயிறு ஒரு மாதிரி இருக்கு வலிக்குது என்று சொல்லி பாத்ரூம் உள்ள போகிறார்.

ஆனால் விஜயா எங்கு உள்ள போற வழியில போய்க்கலாம் போ என்று சொல்ல  முத்து இதெல்லாம் எங்க வெளிய போவாங்க நகருங்க என்று பாத்ரூம் குள்ளே போகிறார் பிறகு விஜயா எல்லோரிடமும் ரவி ஸ்ருதி வீட்டுக்கு வராங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது ரவி, ஸ்ருதி, சுதா மூன்று பேரும் அண்ணாமலை வீட்டிற்கு வருகின்றனர்.

உருவாக்கியவன் நீயே திமிராய் இரு.. உண்மையும், சத்தியமும் வெல்லும்.. அமீருக்கு ஆதரவு கொடுத்த சேரன்

விஜயா வாங்க சம்மந்தி என்று எல்லோரையும் கூப்பிடுகிறார் ஆனால் அண்ணாமலை பழசை எல்லாம் நினைத்துப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்.. பிறகு விஜயா முதல் முறையா இந்த வீட்டுக்கு வரிங்க இருங்க என்று மீனாவையும் ரோகிணியையும் ஆரத்தி எடுக்க சொல்கிறார்..  ரவி அப்பா எப்படி இருக்கீங்க உடம்பு இப்ப எப்படி இருக்கு, மனோஜ் எப்படி இருக்க என்று எல்லோரையும் நலம் விசாரிக்கிறார். இதோடு இன்றைய எபிசோட் முடிந்துள்ளது