Siragadikka aasai today episode December 08 : இன்றைய எபிசோடில் மனோஜ் ரோகினியிடம் ஸ்ருதிகிட்ட லிமிடா இருந்துக்கோ என்று சொல்ல ரோகினி அவளால நமக்கு நிறைய காரியம் ஆக வேண்டியது இருக்கு என சொல்லும் போது நமக்கு தேவைன்னா உங்கப்பா செய்ய மாட்டாரா?
அவங்க அப்பாவிட உங்க அப்பா தான பெரிய பணக்காரர் என்று மனோஜ் கேட்பதற்கு ரோகிணி எல்லாத்தையுமே நான் அப்பாகிட்ட கேட்க முடியுமா ஸ்ருதியால நமக்கு கொஞ்சம் காரியம் ஆக வேண்டியது இருக்கு அதே சமயம் நான் லிமிட் இருக்கிறேன் என்று ரோகினி சொல்கிறார். மீனா – ஸ்ருதியை பார்த்து அழகா இருக்கீங்க இன்னைக்கு தான் கல்யாணம் பொண்ணு மாதிரி இருக்கீங்க என்று சொல்கிறார்.
உடனே விஜயா வந்து இங்க என்ன பண்ணிட்டு இருக்க உன்ன பால் தான காச்ச சொன்ன பாதாம் பிஸ்தா முந்திரி குங்குமப்பூ எல்லாம் வச்சிருக்க, அதை போட்டு சுண்ட காட்சி வை என்று சொல்கிறார் மீனாவும் அதே போல் காட்சி வைத்துவிட்டார் பிறகு கிச்சனுக்கு வந்த முத்து பாலை பார்த்து நமக்காக தான் மீனா வச்சிருப்பாள் என்று நினைத்து குடித்துவிட்டு இந்த பால குடிச்சதும் தெம்பா இருக்கு என்று சொல்கிறார்.
உடனே விஜயா அதை ஏண்டா குடிச்ச அது ரவி ஸ்ருதிக்கு போட்டு வச்சது என்ன சொல்வதற்கு அவங்களுக்கெல்லாம் பாலு ஒரு கேடா என்று திட்டுகிறார் அடுத்து முத்து மொட்டை மாடியில் இருக்கும் போது ரவி மேலே வந்து முத்துவிடம் பேச வருகிறார் அப்பொழுது முத்து நீ எதுக்கு இங்க வந்த, உன்னால தான் அப்பா லாக்கப்ல இருந்தாரு அவருக்கு உடம்பு சரியில்லாமல் போனது.
வெறும் 25 நாள் நடித்து சூப்பர் ஹிட் படம் கொடுத்த ரஜினி.! யாராலும் மறக்க முடியாத படம்
எல்லாமே உன்னால் தான் என்று முத்து ரவியை பார்த்து சொல்ல உடனே ரவி நான் என்ன பண்ண உன்னோட கோபத்தால் தான் இப்படி ஆச்சு நீ குடிச்சிட்டு வந்து அன்னைக்கு பெரிய அண்ணிய அடிச்ச அதனால தான் அப்பாவுக்கு இப்படி ஆயிடுச்சு என்று சொல்கிறார்.. பழியய என் மேல போடுறியா என்று முத்து ரவியிடம் சண்டை போட அப்பொழுது மனோஜின் மேலே வந்து உன்னோட கோபத்தால் தான் இப்படி ஆயிடுச்சு.
என்று முத்துவிடம் சண்டை போடுகிறார் உடனே முத்து திருட்டு பசங்க ரெண்டு பேரும் கூட்டு சேர்ந்துட்டீங்களா என்று ரெண்டு பேரிடமும் சண்டை போடுகிறார் அடுத்து அண்ணாமலை வீட்டிற்கு வந்ததும் விஜயா ரவி ஸ்ருதிக்கு சாந்தி முகூர்த்தத்திற்கு நேரம் குறிச்சி இருக்கேன், வாங்க ஆசீர்வாதம் பண்ணி அனுப்பி வைக்கலாம் என்று சொல்ல முத்து எங்க அவனையும் கூப்பிடுங்க..
எல்லோரும் சேர்ந்து தான் இவங்களை ஆசீர்வாதம் பண்ணனும் என்று சொல்வதற்கு விஜயா மனோஜ் ஸ்ருதி எல்லோரும் முத்து வந்தா திட்ட தான் போறான் அவனை கூப்பிட வேண்டாம் என்று சொல்கின்றனர் ஆனால் அண்ணாமலை அவனும் தான் வரணும் மீனா நீ போய் கூப்பிட்டு வாம்மா என்று சொல்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.