என்ன ஆட்டம் போட்ட வசமா மாட்டிகிட்டியா… ரோகினியை படுத்தி எடுக்கும் விஜயா… குஷியில் முத்து

siragadikka aasai april 10
siragadikka aasai april 10

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து மனோஜிடமிருந்து பணத்தை ஆட்டையை போட்டு போன ஜீவாவை அழைத்து வருகிறார் ஏனென்றால் ரோகிணி பரிகாரம் செய்வதற்காக குடும்பத்தில் உள்ள அனைவரும் இருக்க வேண்டும் என்பதற்காக தான் முத்து வருகிறார். உள்ளே சென்று பார்த்த முத்துவுக்கு அதிர்ச்சி  ஆனாலும் முத்து சந்தோஷமாக இருக்கிறார் ரோகிணி சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

அப்பொழுது விஜயா இங்க வா இதுதான் முக்கியமா செய்யணும் என கையை நீட்டி சூடத்தை கையில் வைத்து ஏற்றிவிட்டு சாமிக்கு காட்டுகிறார் இதனால் ரோகிணி துடித்து அழுகிறார். அடுத்த காட்சியில் ரோகினியை சாமி கும்பிட சொல்கிறார் அப்பொழுது விஜயா நல்லா விழுந்து கும்பிடு என கூற சாமி கும்பிட்டவுடன் போகலாமா என கேட்க இல்லை இனிமேதான் மெயின் பரிகாரமே இருக்கு என கூறி விநாயகரிடம் இருந்து ஆரம்பிக்கலாம் என கீழே விழுந்து உருள சொல்கிறார்.

இதை அனைத்தையும் முடித்த பிறகு அப்பாவின் பெயர் கேட்க அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள் ரோகிணியும் முழித்துக் கொண்டிருக்கிறார் பிறகு யோசித்து பெயர் சொல்ல உடனே ஐயர் நட்சத்திரம் கேட்கிறார் நட்சத்திரத்தை தவறாக சொல்ல மீனா சந்து கேப்பிள் சரியாக சொல்கிறார். அது மட்டும் இல்லாமல் முத்து பரிகாரம் முடிஞ்சிடு்ச னிமே நான் களம்புறேன் என கூறிவிட்டு கிளம்புகிறார்.

அந்த சமயத்தில் மனோஜ்க்கு போன் வருகிறது மனோஜ் வெளியே சென்று போன் பேசிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது ஜீவா அவணைப் பார்த்து பயந்து போய் காரில் உள்ளே உட்காருகிறார் ஆனால் மனோஜ் ஃபோன் பேசிக் கொண்டிருப்பதை ஜீவா பார்த்துக் கொண்டு பதுங்கி உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் முத்து வருகிறார் முத்து காரை எடுத்துக்கிட்டு கிளம்புகிறார்.

ரோகிணி தன்னுடைய தோழியிடம் நடந்த அனைத்தையும் கூறிக் கொண்டிருக்கிறார் ஆனால் அவரின் தோழி நீ விரதம் இருக்கிறது உண்மைதான் அதனால நீ சாப்பிடக்கூடாது சிக்கன் பீஸ் சாப்பிட கூடாது நீ உன் வேலையை பாரு என்பது போல் பேசி விடுகிறார்.வீட்டுக்கு வந்த ரோகினி கை கால் வலிக்கிறது எனக் கூற மனோஜ் பிடித்து விடுகிறார் உடனே விஜயா வந்து நீ அவள் பக்கத்திலேயே போகக்கூடாது அவ விரதம் எடுக்கிறாள் என பேசுகிறார்.

அடுத்த காட்சியில் சுருதி பசிக்கிறது நான் ஏதாவது ஆர்டர் பண்ணுகிறேன் உங்களுக்கு வேணுமா என கேட்க மீனா அதெல்லாம் வேண்டாம் நானே சமைச்சுட்டேன் வாங்க சாப்பிடலாம் என பேசுகிறார். ஆனாலும் சுருதி எனக்கு மீன் சாப்பிட வேண்டும் என்பது போல் இருக்கிறது எனக் கூற அசைவம் சாப்பிடக்கூடாது மாலை போட்டு இருக்காங்களே என அனைவரும் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த சமயத்தில் முத்து வருகிறார் எப்ப பாரு துணி கடை விளம்பரத்துல வர மாதிரி இருக்கீங்க பார்லர் அம்மா ஆனா இப்ப வீட்ட தொடச்சி போட்ட துணி மாதிரி துவண்டு இருக்கீங்களே எனக் கமெண்ட் அடிக்கிறார் இதனால் ரோகிணி கோவப்படுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது. அடுத்த நாள் ரோகிணி சாப்பிட உட்கார்ந்து கொண்டிருக்கிறார் ஆனால் சாப்பிடக்கூடாது விரதம் எடுக்கிறார்கள் உப்பு எதுவுமே இல்லாம தான் சாப்பிடணும் அது மட்டும் இல்லாம அவங்களே சமைச்சு தான் சாப்பிடணும் என சொல்லி விடுகிறார் முத்து இதனால் விஜயாவும் ஆமா இப்பல்லாம் சாப்பிடக்கூடாது என ரோகிணி எழுந்திருக்க சொல்கிறார் இத்துடன் ப்ரோமோ வீடியோ முடிகிறது.