எங்களுக்கு மட்டும்தான் ஆடி மாசமா. உங்க செல்ல மருமகளுக்கு இல்லையா.! மனோஜ் ரோகினியையும் பிரித்த முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடு

Siragadikka Aasai
Siragadikka Aasai

Siragadikka Aasai : இன்றைய எபிசோடில் மீனா ஆடி மாசத்திற்காக அவங்க அம்மா வீட்டுக்கு வந்துள்ளனர் அங்கு பக்கத்தில் இருப்பவர்கள் மீனா விடம் எப்படி இருக்க என்று நலம் விசாரிக்கின்றனர். ரொம்ப நாள் கழித்து இங்கு வந்திருப்பதால் மீனா அவங்க அம்மா மடியில் படுத்து பேசிக் கொண்டிருக்கின்றார்.

அடுத்து ஸ்ருதி ரவிக்கு பலமுறை போன் பண்ணி பார்க்கிறார். ஆனால் ரவி போனை அட்டென் செய்யவில்லை அதனால் ரெஸ்டாரன்ட் இருக்கு போன் பண்ணி ரவி கிட்ட குடுங்க என்று சொல்ல ரவி நான் இங்க இல்லன்னு சொல்லுங்க என்று சொல்கிறார். பிறகு சுருதி நேராக ரெஸ்டாரண்ட் இருக்கு வருகிறார்.

அங்கு வேலை பார்ப்பவரிடம் சேஃப் ரவி எங்கே என்று கேட்க அவர் வீட்டுக்கு போயிட்டார் என்று சொல்வதும் திரும்ப ஸ்ருதி ரவிக்கு போன் பண்ணி பாக்குறாங்க போன் இங்கேயே இருக்கு, அதனால ஸ்ருதி போன எடுத்துக்கிட்டு வீட்ல போய் நானே கொடுத்துடுறேன் என்று கிளம்புகிறார்.

உடனே ரவி ஓடிவந்து ஸ்ருதி போன குடு என்று கத்துகிறார் ஆனால் ஸ்ருதி போனை எடுத்துக்கிட்டு செல்கிறார். பிறகு வீட்டில் விஜயா ரோகினியிடம் நீதான் இந்த வீட்டு முதல் வாரிச கொடுக்கணும் அதனால தான் மீனாவை அவங்க அம்மா வீட்டுக்கு அனுப்பி வச்சேன் என்று சொல்கிறார். நைட்டு முத்து வீட்டுக்கு வந்தது மீனா என்று கூப்பிடுகிறார்.

அண்ணாமலை மீனா தான் அவங்க அம்மா வீட்டுக்கு போய்ட்டாலே சாப்பிட்டு தூங்கு என்று சொல்கிறார் முத்து சாப்பிட என்ன இருக்கு என்று பார்க்கும்போது உப்புமா கல்லு மாதிரி இருக்கு அதனால முத்துக்கு சாப்பிட பிடிக்கல பிறகு ரோகிணியை பார்த்த முத்து இவங்க ஆடிக்கு போகலையா என்று அம்மாவிடம் கேட்கிறார்.

மேலும் உனக்கு தான் புடிச்ச மருமகளாச்சே, இவங்க மேல உனக்கு அக்கறையே இல்லையா ஆடி மாசத்துல ரெண்டு பேரும் ஒண்ணா இருந்தா வெயில் காலத்துல குழந்தை பிறக்கும் என்று சொன்னிங்களே என்று சொல்ல பிறகு விஜயா ரோகினியை என் ரூமில் படுக்க வைத்துக் கொள்கிறேன் என்று கூப்பிட்டு போகிறார். அடுத்து முத்துக்கு தூக்கம் வரவில்லை..

உடனே மொட்டை மாடிக்கு பாயை எடுத்துக் கொண்டு செல்கிறார் அங்கு ரவியும் பக்கத்தில் பாய் போட்டு படுகிறார் அப்பொழுது ரவி கிட்ட முத்து மீனா இருந்தா ஏதாவது சண்டை போடுவா, பேசிக்கிட்டே இருப்பா, இப்ப அவ இல்லாம தனியா இருக்கிற மாதிரி இருக்கு அதான் ரூம்ல தூக்கமே வரல என்று சொல்கிறார் இதோட இந்த எபிசோடு முடிந்துள்ளது.