Siragadikka Aasai : இன்றைய எபிசோடில் விஜயா நைட்டு ஒரு மணிக்கு மீனாவின் அம்மாவுக்கு போன் பண்ணி பொண்ண கட்டி கொடுத்துட்டா அதோட உங்க கடமை முடிந்ததா, ஆடி மாசம் வந்துச்சு, இது மீனாவுக்கு கல்யாணம் ஆகி முதல் ஆடி மாசம் இந்த மாசத்துல பொண்ணு அம்மா வீட்ல இருக்கணும் என்கின்ற எண்ணம் இல்லையா வந்து கூட்டிட்டு போங்க இல்லன்னா நானே அனுப்பி வச்சிடுவேன் என்று சொல்கிறார்.
அதற்கு மீனாவின் அம்மா காலையில் வந்து கூட்டிட்டு போறோம் என்று சொல்கின்றனர் பிறகு காலையில் விஜயா மீனா கிட்ட ரெண்டு வாரத்திற்கு தேவையான இட்லி மாவு அரைச்சு பிரிட்ஜில் வைத்துவிடு என்று சொல்கிறார் மீனாவும் அதனை செய்கிறார் பிறகு மீனாவின் அம்மாவும் சீதாவும் இங்கு வருகின்றனர்.
அப்போது ரவி சீதா கிட்ட நைட்டு சாட் பண்ணும்போது வரேன்னு சொல்லவே இல்லையே என்று கேட்கிறார், பிறகு மீனாவின் அம்மா அண்ணாமலை கிட்ட ஆடி மாசத்துக்கு மீனாவ வீட்டுக்கு கூட்டிட்டு போலாம்னு வந்திருக்கோம் என்று சொல்கிறார். அதற்கு அண்ணாமலை இந்த காலத்துல ஆடி அழைப்பு எல்லாம் தேவையில்லை என்று சொல்கிறார்.
பிறகு அண்ணி தான் நைட்டு ஒரு மணிக்கு போன் பண்ணி மீனாவ வந்து கூட்டிட்டு போங்க என்று சொன்னதாக மீனாவின் அம்மா கூறுகிறார். உடனே அண்ணாமலை விஜயா கிட்ட உனக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை வர வர நீ வேண்டாத வேலை எல்லாம் செய்ற என்று திட்டுகிறார்.
பிறகு மீனாவின் அம்மா ரோகிணியை பார்த்து நீங்களும் ஆடிக்கு போறீங்களா என்று கேட்கிறார் அதற்கு ரோகிணி எங்கே என கேட்க நீங்களும் புதுசா கல்யாணம் ஆனவங்க, முதல் ஆடி மாசம் அவங்க அம்மா வீட்டுக்கு போகணும் என்று சொல்வதும் ரோகிணி மலேசியாவில் இதெல்லாம் இல்லை என்று சொல்கிறார்.
அடுத்து முத்து வந்ததும் மீனாவுடைய அம்மா முத்து கிட்ட மீனாவ நாங்க ஆடிக்கு வீட்டுக்கு கூட்டிட்டு போறோம் என்று சொல்கிறார். ஏன் என கேட்க இந்த மாசம் புருஷன் பொண்டாட்டி சேர்ந்து இருக்க கூடாது பிரிஞ்சி தான் இருக்கணும் என்று சொல்ல நாங்க பிரிஞ்சு தான் இருக்கோம் நேத்து கூட கீழ தனியா பாய் போட்டு தான் தூங்கினேன் இதில் என்ன புதுசா பிரிச்சு வைக்கிறீங்க என்று கேட்கிறார்.
அடுத்து முத்து ஏன் ஆடி மாசத்துல பிரிச்சு வைக்கிறாங்க என்று அவங்க அப்பாவிடம் கேட்பதற்கு அதற்கு ஒரு அறிவியல் ரீதியான காரணம் இருக்கு ஆடி மாசத்தில் கருத்தெரிச்சா சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கும் அப்ப ரொம்ப வெயில் சுட்டு எரிக்கும் குழந்தைகள் தாங்காது.
அதனாலதான் பெரியவங்க சம்பிரதாயம் என்று சொல்லி ஆடி மாதத்தில் பிரிச்சு வைக்கிறாங்க என்று சொல்கிறார். பிறகு மீனா வீட்டில் உள்ள எல்லோரிடமும் சொல்லிவிட்டு சாமி கும்பிட்டு விட்டு அவங்க அம்மா கூட சொல்கிறார். முத்துவும் மீனாவை வழி அனுப்பி வைக்கிறார் இதோட இன்றைய எபிசோட் முடிந்துள்ளது.