ஆடி மாசத்தை காரணமாக வைத்து முத்து, மீனாவை பிரிக்க நினைக்கும் விஜயா – பரபரப்பான கட்டத்தில் சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடு

Siragadikka Aasai
Siragadikka Aasai

Siragadikka Aasai : இன்றைய எபிசோடில் அண்ணாமலையின் பென்ஷன் பணம் கிடைத்ததற்கு விஜயா எல்லா ரோகிணி வந்த நேரம் தான் என்று சொல்கிறார் உடனே முத்து அப்பா கஷ்டப்பட்டு உழைச்சாரு அதனால அவருக்கு அந்த பணம் கிடைச்சு இருக்கு, இதுல பார்லர் அம்மா என்ன பண்ணாங்க..

அப்படினா அவங்க மனோஜ் எடுத்துட்டு போனா 27 லட்சத்தையும் கொடுக்க சொல்லுங்க என்று அம்மாவிடம் சொல்கிறார். பிறகு இந்த நல்ல விஷயத்தை பாட்டி கிட்ட சொல்ல வேண்டும் என போன் பண்ணி அண்ணாமலை என்னுடைய பென்ஷன் பணம் திரும்ப கிடைச்சுச்சு என்று சொல்லுகிறார்.

உடனே பாட்டி எல்லாம் மீனா வந்த நேரம் தான், நடக்க வேண்டிய சம்பர்தாயெமெல்லாம் ஒழுங்கா நடந்தால் நல்லதே நடக்கும் மீனாவுக்கு தாலி பிரித்து கோத்ததால தான் உன்னோட பென்ஷன் பணம் கிடைத்தது என்று சொல்கிறார். மேலும் முத்து கிட்ட சீக்கிரம் மீனா போல ஒரு மகாலட்சுமியே பெத்துக்கொடு என்றும் பாட்டி சொல்கிறார்.

அதற்கு முத்து பெண் குழந்தை எல்லாம் வேணாம் அவங்களை சமாளிக்கிறது எல்லாம் ரொம்ப கஷ்டம் அதனால தான் என்னவோ கடவுள் பெண்களை இரண்டு வீட்டில் வாழுற மாதிரி படச்சுருக்காரு, என்று பேசிக் கொண்டிருக்கிறார். பிறகு நைட்டு தூங்கும் போது மீனாவும் முத்துவும் தலகாணியால் அடித்துக்கொண்டு சிரிச்சு பேசிகிட்டு இருக்காங்க, இவங்களோட சிரிப்பு சத்தம் வெளியே கேட்டு விஜயா ரெண்டு பேரும் என்ன இவ்வளவு சந்தோஷமா இருக்காங்க.

போற போக்க பாத்தா மீனாக்கு தான் ஃபர்ஸ்ட் குழந்தை பிறக்கும் போல என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். பிறகு ரோகினி இடம் விஜயா இந்த வீட்டு முதல் வாரிச நீ தான் பெற்றுக் கொடுக்கணும்னு சொல்லி இருக்கேன் ஞாபகம் வச்சிருக்கியா என்று சொல்கிறார் மேலும் மனோஜ் எங்கே என்று ரோகினியிடம் கேட்க..

அவர் தூங்கிட்டு இருக்காரு என்று சொல்வதும் விஜயா அவனுக்கு ஒன்னும் தெரியாது நீ தான் அவனுக்கு எடுத்து சொல்லி புரிய வைக்கணும் என்று சொல்கிறார். பிறகு முத்துவும் மீனாவும் சிரிச்சு பேசிட்டு இருந்ததை கேட்டு விஜயாவால் தூங்க முடியாமல் நைட்டு ஒரு மணிக்கு பார்வதிக்கு போன் பண்ணி முத்துவும் மீனாவும் இப்ப சேர்ந்துட்டாங்க..

அவங்கள பிரிக்க ஏதாவது வழி சொல்லு என்று கேட்கிறார். உடனே பார்வதி இது ஆடி மாசம் தானே இந்த ஒரு காரணம் போதுமே, கொஞ்ச நாளைக்கு இவங்கள தனியா இருக்க வைக்க என்று சொல்கிறார் இதை கேட்டு விஜயா ரொம்ப சந்தோஷப்படுகிறார் இதோட இந்த எபிசோட் இருந்துள்ளது.