உடம்பு முடியவில்லை என்று சொல்லியும் மீனாவை சமைக்க வைக்கும் விஜயா.. வீட்டுக்கு வந்ததும் முத்து பார்த்த வேலை – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடு

Siragadikka asai
Siragadikka asai

Siragadikka Aasai : இன்றைய எபிசோடில் ரோகிணியும் விஜயாவும் பைனான்ஸ்க்கு வட்டி கட்டி விட்டு வரும் போது ஷாப்பிங் செய்துவிட்டு வீட்டுக்கு வருகின்றனர். வீட்டுக்கு வந்ததும் ரோகிணி எனக்கு ரொம்ப பசிக்குது அத்தை என்று சொன்னவுடன் விஜயா கிச்சனில் போய் பார்க்கிறார் அங்கு எதுவும் சமைத்து வைத்திருக்கவில்லை..

உடனே மீனா ரூமுக்கு போய் பார்த்தா மீனா டயர்டா படுத்து தூங்கிட்டு இருக்காங்க என்ன இந்த நேரத்துல படுத்து இருக்கு அதுவும் சமைக்காம எழுந்திருச்சு போய் சமையல் செய் என்று சொல்கிறார். மீனா எனக்கு உடம்பு ரொம்ப டயர்டா இருக்கு அத்தை என்று சொல்வதையும் கேட்காமல் போய் சாப்பாடு செய் என்று அதட்டுவதால் பிறகு மீனா போய் சமைச்சு டைனிங் டேபிளில் வைத்துவிட்டு திரும்பவும் வந்து படுத்து கொண்டார்.

மனோஜ், ரோகினி, விஜயா மூன்று பேரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். பிறகு முத்து வீட்டிற்கு வருகிறார். மீனாவை பார்த்து என்ன ஆச்சு ஏன் படுத்து இருக்க உடம்பு முடியலையா, சாப்பிடாம படுத்திருக்க, உன்னை யாருமே சாப்பிடுன்னு சொல்லலையா என கேட்கிறார். பிறகு முத்து வெளியே வந்து அவங்க அம்மா அண்ணி இடம் இதெல்லாம் யாரு சமைச்சா மீனா தானே, மூணு பேரும் நல்லா சாப்பிடுறிங்களே, அவள ஒரு வார்த்தை சாப்பிட்டியானு கேட்டீங்களா..

உடம்பு முடியாதவளை பார்த்துக்க கூட இங்கு யாருமே இல்லை என்று கத்திவிட்டு பிறகு மீனாவிடம் சென்று உனக்கு நான் கசாயம் போட்டு எடுத்துட்டு வரேன் என சொல்லி விட்டு கிச்சனுக்கு போகிறார். ஆனால் எப்படி கசாயம் போடுவது என்று தெரியாமல் செல்வத்திற்கு போன் பண்ணி மீனாவுக்கு உடம்பு சரியில்ல கஷாயம் போடணும் எப்படி என கேட்டு அதன்படி கசாயம் செய்து போய் மீனா கிட்ட கொடுக்கிறார்.

மீனா அதை குடித்துவிட்டு வாமிட் பண்ணுகிறார் காலையில் இருந்து எதுவும் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் குடிக்கிறதால வாமிட் வருது என்று சொன்னவுடன் அப்ப நா ஃபர்ஸ்ட் சாப்பிடு, அப்புறமா கசாயம் குடிக்கலாம் என முத்து மீனாவிற்கு தோசை எடுத்துட்டு வந்து ஊட்டி விடுகிறார். இதைப் பார்த்து மீனா ரொம்ப எமோஷனலாகி முத்துவை கட்டி பிடிக்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.