Siragadikka Aasai : இன்றைய எபிசோடில் விஜயா மீனா விட உன் தங்கச்சி சின்ன பொண்ணு மாதிரியா நடந்துக்குறா, அவ எதுக்கு தேவை இல்லாம ரவி கிட்ட அடிக்கடி பேசுறா, நான் ஊர்ல இல்லாத நேரத்துல ரவியை வீட்டுக்கு வர சொல்லி பேசி இருக்கா என்று கேட்க அவங்க ரெண்டு பேரும் பிரண்ட்ஸ் மட்டும் தான் பாக்குறவங்க..
பார்வைக்கு தான் அது தப்பா இருக்கு என மீனா சொல்கிறார். மீண்டும் விஜயா உங்க அப்பா இந்த வீட்டு மனுஷங்களை பத்தி தெரிஞ்சுக்கிட்டு தான் ட்ரெயின் முன்னாடி வந்து விழுந்து இருக்காரு நாம செத்துட்டா நம்ம பொண்ணுங்களா இவங்க கல்யாணம் பண்ணிப்பாங்க என்று கேவலமாக பேசுவதால் மீனாவால் தாங்க முடியாமல் எங்க அப்பாவ பத்தி எதுவும் பேசாதீங்க..
எங்க அப்பா இருந்திருந்தா இந்த நிலைமைக்கே நாங்க வந்து இருக்க மாட்டோம் என்று மீனா சொல்வதற்கும் உங்க அப்பா இருந்திருந்தால் யாராவது கரும்பு ஜூஸ் புழியிறவனுக்கு தான் கல்யாணம் பண்ணி கொடுத்து இருப்பாங்க இப்படி ஒரு வாழ்க்கை உனக்கு கிடைச்சிருக்காது ஒழுங்கா இருந்தா இந்த வீட்ல இரு இல்லனா வீட்டை விட்டு கிளம்பு என மீனாவை திட்டுகிறார்.
இதை தாங்கிக் கொள்ள முடியாமல் மீனா கோவிலுக்கு செல்கிறார் அங்கு மீனாவின் அம்மா கூப்பிடுவதை கூட காதில் வாங்காமல் நேராக சென்று கோவிலை சுற்றி அங்கப் பிரதேசம் செய்து வருகிறார். உடனே சீதா முத்துவிற்கு ஃபோன் பண்ணி வீட்ல என்ன பிரச்சனை மீனா அக்கா திடீர்னு கோவிலுக்கு வந்து அங்க பிரதேசம் செஞ்சிட்டு இருக்காங்க..
என்னன்னு கேட்டாலும் சொல்ல மாட்டேங்கிறாங்க நீங்க சீக்கிரம் வாங்க மாமா என்று கூப்பிடுகிறார். முத்துவும் பதறிப் போய் கோவிலுக்கு வருகிறார். மீனாவிடம் என்ன ஆச்சு வீட்ல யார் என்ன சொன்னாங்க என்று கேட்பதற்கு மீனா எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். பின்பு முத்து மீனாவை வீட்டிற்கு அழைத்து செல்கிறார்.
அங்கு அம்மாவிடம் மீனாவை என்ன சொன்னிங்க இந்த வீட்ல நீ தான் அவளை ஏதாவது சொல்லுவ என்று கேட்க உங்க அம்மாகிட்ட சண்டை போடுங்க எனக் கோலி மூட்டி அழைச்சிட்டு வந்துட்டாளா நீயே அவளை திட்டுற உன்ன விட நான் ஒன்னும் அதிகமா திட்டிவிடவில்லை என்று விஜயா சொல்வதற்கு நான் என்ன வேணாலும் சொல்லலாம்..
ஆனா நீங்க மீனாவை ஏதாவது சொன்னா நான் பார்த்துகிட்டு இருக்க மாட்டேன் அவளை இனிமேல் ஏதும் சொல்ற வேல வச்சுக்காதீங்க என வான் பண்ணுகிறார். பிறகு மீனாவை ரூமில் விட்டு விட்டு முத்து சவாரிக்கு செல்கிறார். அடுத்து ரோகினி விஜயாவும் பைனான்ஸ்க்கு வட்டி கட்ட சொல்கிறார்கள் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.