அப்பாவை பற்றி கீழ்த்தரமாக பேசிய மனோஜ்.. கோபம் தலைக்கேறி விரலை முறித்த முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடு

siragaikka aasai
siragaikka aasai

Siragadikka Aasai :  இன்றைய எபிசோடில் ரவி முத்துவிடம் நாளைக்கு என்னுடைய ரெஸ்டாரண்டுக்கு அணிய கூட்டிகிட்டு வா நான் பார்ட்டி அரேஞ்ச் பண்றேன் என்று சொல்கிறார். முத்துவும் அடுத்த நாள் பார்ட்டிக்கு கிளம்புகிறார் மீனாவிடம் ரவி சொன்னால பார்ட்டிக்கு போக கிளம்பு என்று சொல்வதற்கு நாம ஏன் போகணும்.

அது புருஷன் பொண்டாட்டி போற பார்ட்டி அதான் உங்க அண்ணனும் அண்ணியும் போறாங்க இல்ல நான் வரலை என்று சொல்கிறாள். பின்பு முத்து கிளம்பு நம்மளும் போயிட்டு வரலாம் என்று சொன்னவுடன் மீனாவும் கிளம்புகிறார் நான்கு பேரும் ரெஸ்டாரெண்டுக்கு வந்துள்ளனர். ரவி இவர்களுக்கு சாப்பாடு எடுத்துட்டு வந்து வைக்கிறார் நான்கு பேரும் பேசிக் கொண்டே சாப்பிடுகின்றனர்.

அப்பொழுது ரோகிணி முத்து விடம் உங்களுக்கு எப்படி கல்யாணம் ஆச்சு என்று சொல்லுங்கள் என கேட்கின்றனர். அதற்கு முத்து முதலில் மனோஜ்க்கு தான் மீனாவை பொண்ணு பார்த்தாங்க, கல்யாண நேரத்துல அப்பாவோட ரிட்டயர்மென்ட் காச எடுத்துட்டு மனோஜ் ஓடிட்டா அதனால நான் மீனாவ கல்யாணம் பண்ற மாதிரி ஆயிடுச்சு என்று சொல்வதற்கு ரோகினி..

அப்போ இது பரிதாப கல்யாணமா என்று நக்கலாக பேசுகிறார். அடுத்து மனோஜும் மீனாவ கல்யாணம் பண்ணி இருந்தா என் வாழ்க்கையே போயிருக்கும் எங்க அப்பனால தான் எல்லாம், என் திறமையை நம்பி பணம் கொடுக்காமல் மீனாவ கல்யாணம் பண்ணா தான் பணம் கொடுப்பேன் என்று மிரட்டினார்.

அவர் சரியான மஞ்ச மாக்கான் என்று சொல்லுவதும் முத்துவிற்கு கோபம் வந்து மனோஜை போட்டு அடித்து விரலை முறித்து விட்டார். பின்பு ரோகிணி மனோஜை ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்கிறார். முத்து மீனாவிடம் நான் மனோஜ அடிச்சது கரெக்ட் தானே என்று கேட்க..

நீங்க அடிச்சது சரிதான் ஆனால் பரிதாபக் கல்யாணமுன்னு சொல்லும்போது ரெண்டு பேரும் சிரிச்சாங்களே அப்பவே அடிச்சி இருக்கணும் என்று மீனா சொல்கிறார் பிறகு வீட்டிற்கு செல்கின்றனர் அங்கு விஜயா ஏண்டா இப்படி மனோஜ அடிச்ச என்று முத்துவிடம் சண்டை போடுகிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது..