வேலை போன விஷயத்தை ரோகினியிடம் மறைக்கும் மனோஜ், விஜயா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடு

Siragadikka aasai
Siragadikka aasai

Siragadikka Aasai : இன்றைய எபிசோடில் மனோஜ் வேலை போன விஷயத்தை தன் அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு விஜயா உங்களை நம்பி தானே வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து வட்டிக்கு வாங்கி இருக்கோம் அந்த பைனான்ஸ் காரன் வரே ஒரு மாதிரியான ஆளு, இப்ப இப்படி சொல்றியேடா என கோபப்படுகிறார் இதற்கு மனோஜ் இதை இப்படி ரோகினி கிட்ட சொல்றதுன்னு தெரியலமா என்று சொல்ல..

விஜயா யாருக்குமே தெரியக்கூடாதுன்னு சொல்லிட்டு இருக்க, முக்கியமா உனக்கு வேலை போன விஷயம் ரோகிணிக்கு தெரியக்கூடாது இது தெரிஞ்சா அவ ரொம்ப வருத்தப்படுவா சொல்லாதே வேற வேலை பார்த்துகிட்டு அப்புறம் சொல்லிக்கலாம் என்று சொல்கிறார். அப்பொழுது ரோகினி அங்கு வருகிறார். ரோகினி இடம் மனோஜ் உன் பிரண்டோட பார்லருக்கு போறேன் என்று சொன்னியே போயிட்டு வந்துட்டியா என்று கேட்க அதெல்லாம் போய்ட்டு வந்துட்டேங்க..

நீங்க பார்லருக்கு வருவீங்கன்னு தெரிஞ்சிருந்தா நான் போய் இருக்க மாட்டேன், ஆமா நீங்க ஏன் பார்லர் வந்தீங்க ஏதோ பேசணும்னு சொன்னீங்களே என்னவென்று கேட்க, வேலை சீக்கிரம் முடிந்தது சேர்ந்து லஞ்ச் சாப்பிடலாம் என்று தான் வந்தேன் என்று பொய் சொல்கிறார். பிறகு அண்ணாமலையும் வீட்டிற்கு வருகிறார். அவர் விஜயாவிடம் மதியம் ஏன் சமைத்து வைக்கல என்று கேட்க நீங்கதான் யூனியன் ஆபீஸ்ல சாப்பிட்டு வரேன் என்று சொல்லிட்டீங்க..

அதனால தான் இருந்த சாப்பாட நான் சாப்பிட்டுவிட்டு தூங்கிட்டேன் என்று சொல்கிறார். உடனே மதியம் சாப்பிட முத்து வீட்டுக்கு வந்தான் சாப்பிட ஒன்னும் இல்லாததால போயிட்டான் அவனுக்கு போன் பண்ணி சாப்டியான்னு கேட்கிறேன் என அண்ணாமலை முத்துவிற்கு போன் பண்ணுகிறார் முத்து மீனா வீட்டில் நல்லா சாப்பிட்டு விட்டு தூங்கிக் கொண்டிருக்கிறார்.

பிறகு தன் அப்பாவிடம் மீனா வீட்டுக்கு வந்தேன் மீனா நல்லா மீன் குழம்பு வெச்சிருந்தா இங்கேயே சாப்பிட்டு விட்டேன் என்று சொல்கிறார் பிறகு அண்ணாமலை நைட்டு வருவியா என்று கேட்க, தெரியலப்பா நான் பாத்துட்டு சொல்றேன் என சொல்கிறார் இதைக் கேட்டு விஜயா முத்து மீனா வீட்டுக்கு போய் இருக்கானா ஆடி மாசம் ஒண்ணா இருக்கக் கூடாதுனனு தானே பிரிச்சி வச்சோம் இப்ப அங்க இருக்கன்னு சொல்றான் என்று கேட்க ஒரு நாளாவது அவன் நல்ல சாப்பாடு சாப்பிட்டு வரட்டும் என அண்ணாமலை சொல்கிறார்.

பிறகு முத்துவிற்கு சவாரிக்கு டி நகர் போக போன் வருது அதனால் முத்து தூக்கத்திலிருந்து எழுந்து விட்டார். பிறகு நான் நாளைக்கு போகிறேன் என்று மீனா வீட்டிலே இருந்து விட்டார். அங்கு பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் முத்துவிடம் பேசுவதற்கு வருகின்றனர் எல்லோரிடமும் ஜாலியாக காமெடி செய்து முத்து பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் மீனாவின் அம்மா மட்டும் இது சம்மந்தி அம்மாவுக்கு தெரிஞ்சா நம்மளை தான் திட்டுவாங்க என சோகத்தில் இருக்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது