ஆடி மாசம் என தெரிந்தும் மீனா வீட்டுக்கு போன முத்து.. விஜயாவுக்கு தெரிஞ்சா கச்சேரி தான் – விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடு

Siragadikka aasai
Siragadikka aasai

Siragadikka Aasai :  இன்றைய எபிசோடில் முத்து வீட்டுக்கு சாப்பிட வரேன் என்றதால் மீனா ஆசையாக மார்க்கெட்டுக்கு போய் மீன் வாங்கிட்டு வருகிறார் மீனாவின் அம்மா ஏன் மீன் எல்லாம் என்று கேட்க அவர் சாப்பிட வரேன்னு சொன்னார் அதனால தான் என்று சொல்வதும் மாப்பிள்ளை இங்கே வரக்கூடாது.

இது அவங்க அம்மாவுக்கு தெரிஞ்சா பிரச்சனை பண்ணுவாங்க ஆடி மாசத்துல ரெண்டு பேரும் சேரக்கூடாதுன்னு தானே தனித்தனியாக கூப்பிட்டு வந்தோம் இப்ப அவர் இங்க வரேன்னு சொல்றாரே என்று கேட்க சாப்பிட வரேன்னு சொல்றவரை எப்படி வரக்கூடாதுன்னு சொல்றது அவரு இங்க வர வேணாம் என்றால் நானும் என் வீட்டிலேயே போய் சமைச்சு கொடுத்திருக்கிறேன் என்று மீனா சொல்கிறார்.

உடனே மீனாவின் அம்மா சரி மாப்பிள்ளை வரட்டும் ஆனா சாப்பிட்டு உடனே போயிடுனும் என்று சொல்கிறார். பிறகு மீனா சீதா எல்லோரும் சேர்ந்து சமைக்கின்றனர். அடுத்து மனோஜ் வேலை போன விஷயத்தை ரோகினி இடம் சொல்ல பார்லருக்கு வருகிறார் ஆனால் அங்கு ரோகிணி இல்லை உடனே ரோகிணிக்கு போன் பண்ணுகிறார்.

மனோஜ் அப்பொழுது ரோகிணி அவர் வீட்டில் கிருஷ்க்கு சாப்பாடு ஊட்டி கொண்டு இருக்கிறார் எங்க இருக்க ரோகிணி பார்லருக்கு வந்த நீ ஆள் இல்லை என்று கேட்க மனோஜ் கேட்க வேறொரு பார்லருக்கு வந்து இருக்கேன் என்று சொல்ல பிறகு மனோஜ் சரி ரோகிணி வீட்டுக்கு வந்ததும் வேலை போன விஷயத்தை சொல்லிக்கலாம் என்று வீட்டிற்கு செல்கிறார்.

முத்து மீனா வீட்டுக்கு சாப்பிட வருகிறார் தடபுடலாக மீனா விருந்து வைக்கிறார். மீன் குழம்பு, மீன் வருவல் என எல்லாத்தையும் முத்து சாப்பிட்டு விட்டு சூப்பராக இருந்தது என்று சொல்கிறார் பிறகு டயடா இருக்கு கொஞ்ச நேரம் தூங்கிட்டு போகிறேன் என்று சொல்லி அங்கே முத்து தூங்குகிறார். மனோஜ் வீட்டுக்கு வந்ததும் விஜயாவிடம் வேலை போன விஷயத்தை சொல்கிறார்.

எப்படி ஆச்சு என்று கேட்க கஸ்டமர் என்ன மீன் வாங்கிட்டு வா கறி வாங்கிட்டு வா இந்த மாதிரிலாம் வேலை சொல்றாரு என்று நடந்தவற்றை மனோஜ் கூறுகிறார் பிறகு விஜயா உங்களை நம்பி தானே வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து பைனான்ஸ்க்கு வட்டி வாங்கி கொடுத்து இருக்கேன் இப்ப இந்த வேலையும் போச்சா என ரொம்ப அப்செட் ஆகி மனோஜை திட்டி விட்டு செல்கிறார் இதோட இந்த எபிசோடு முடிந்துள்ளது.