Siragadikka Aasai : இன்றைய எபிசோடில் ரவி, ஸ்ருதி கிட்ட நம்ம ரெண்டு பேருடைய அப்பாக்குள்ள பிரச்சனை இருக்கு அதனால நம்ம பேசறது சரி வராது என்று சொல்ல உங்க அப்பா சொன்னா என்கிட்ட பேசறது நிறுத்திடுவியா என்று கேட்டுக் ஸ்ருதி கொண்டிருக்கிறார்.
பிறகு எனக்கு பசிக்குது நான் இன்னும் சாப்பிடவில்லை என்று ஸ்ருதி சொல்வதால் ரவி சரி வா ரெஸ்டாரண்டுக்கு போகலாம் என பைக்கில் கூட்டிட்டு போகிறார். அடுத்து முத்து சாப்பிடுவதற்கு வீட்டில் என்ன இருக்கு என்று பார்க்கிறார் ஒன்னும் இல்லை அதனால் மீனாவிற்கு ஃபோன் பண்ணி எனக்கு பசிக்குது..
நான் சாப்பிட வரட்டா என்று கேட்க வாங்க என்று சொல்லிவிட்டு மீனா முத்துவிற்காக சமைத்துக் கொண்டிருக்கிறார். அடுத்து மனோஜ் ஒரு கஸ்டமருக்கு கார் ஓட்டி காமித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அந்த கஷ்டமர் அந்த பக்கமா போங்க அங்க தான் எங்க வீடு இருக்கு என்று சொல்வதும் மனோஜும் வேற வழியில்லாமல் அவங்க வீட்டுக்கு செல்கிறார்.
அங்கு போனால் அந்த கஷ்டமரின் மனைவி மட்டன் மீன் எல்லாம் வாங்க வேண்டும் என்று சொல்வதும் அவர் மனோஜை கூப்பிட்டு மார்க்கெட் போய் மீன் மட்டன் எல்லாம் வாங்கிட்டு வந்து கொடுத்துட்டு போ என்று சொல்ல மனோஜ் இதெல்லாம் நான் செய்ய முடியாது போயா என்று சொல்கிறார். அதனால் அந்த கஸ்டமர் நான் உன்னோட ஓனர் கிட்ட பேசிக்கிறேன் நீ கெளம்பு என்று கோபமா சொல்லிவிடுகிறார்.
பின்பு ஒர்க் ஷாப்பில் மேனேஜர் மனோஜை பார்த்து அந்த கஸ்டமர் சொன்ன வேலையே நீ செய்ய வேண்டியது தானே அவர வச்சு 30 லட்சம் சேல் பண்ணலாம்னு நினைச்சேன் இப்படி பண்ணிட்டியே என மனோஜை திட்டி வேலையை விட்டு அனுப்பி விட்டார். அடுத்து ஸ்ருதி ஒரு மரத்தடியில் ரவி இடம் பைக்கை நிறுத்த சொல்லி..
இந்த இடம் ஞாபகம் இருக்கா நம்ம ஃபர்ஸ்ட் டைம் மீட் பண்ண இடம் என்று சொல்லி பேசிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது ஸ்ருதி எனக்கு உன் மேல வந்த ஃபீலிங் யார் மேலயும் வந்ததில்ல ஐ லவ் யூ என்று சொல்லிவிட்டு ரவிக்கு முத்தமும் கொடுத்து விட்டார் இதனை அந்தப் பக்கமாக வந்த ஸ்ருதியின் அப்பா அம்மாவும் பார்த்து விட்டனர்.
பிறகு சுருதி நான் உன்ன லவ் பண்றேன் உன்னோட பதிலுக்காக வெயிட் பண்றேன் என்று ரவியிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார் ஸ்ருதியின் அம்மா நம்ப மானத்தையே வாங்கிடா, ரோட்ல வச்சு அந்த ரவி கூட என்ன பண்ணிக்கிட்டு இருக்கா அவ வரட்டும் இன்னைக்கு பாத்துக்கிறேன் என்று சொல்கிறார்.
பிறகு ஸ்ருதியின் அப்பா இதை வேற வழியில் தான் டீல் பண்ணனும் என்று அண்ணாமலைக்கு போன் பண்ணி உன் கிட்ட கொஞ்சம் பேசணும் வீட்டுக்கு வாங்க என்று கூப்பிடுகிறார் அதற்கு அண்ணாமலை எனக்கு இப்ப வேலை இருக்கு, எங்க, எப்ப பேசலாம் என்று நானே சொல்கிறேன் என சொல்லிவிட்டு போனை வைத்து விடுகிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.