Siragadikka Aasai september 11 இன்றைய எபிசோடில் சுருதியும் ரவியும் ஃபோனில் பேசிக்கொண்டே இருக்கின்றன அப்பொழுது ஸ்ருதியோட அப்பா போனை பார்த்துவிட்டு அவன் அந்த அண்ணாமலை பையன் கூட தான் பேசிட்டு இருக்கா என்று சொல்வதும் சுருதியோட அம்மாவும் அவ திருந்தவே மாட்டாளா எனக் கோபப்படுகிறார்.. அடுத்து முத்து வீட்டிற்கு போலீஸ் வருகிறது..
அவர்களைப் பார்த்து விஜயா என்ன முத்துவ பார்க்க வந்தீங்களா முத்து வீட்ல இல்லை என்று சொல்ல, நான் மனோஜ் பாக்க தான் வந்தேன் என்று பணம் மோசடி விஷயத்தில் ஜீவா என்கின்ற ஒரு பொண்ணு மேல கேஸ் கொடுத்து இருந்தீங்க இல்ல அந்த பொண்ணோட டீடைல் எல்லாம் கொஞ்சம் வேணும் அதுக்காக தான் வந்தேன் என போலீஸ் சொல்கின்றனர்.
அப்பொழுது மீனாவை பார்த்து நீ என்னமா இந்த வீட்ல இருக்க என்று கேட்க அண்ணாமலை என்னோட மருமகள் தான் என்று சொல்வதும் பரவாயில்லையே இந்த வீட்டுப் பைக்கை உன் தம்பி திருடனா அத மன்னிச்சு இந்த இந்த வீட்டு மருமகள் ஆக்கிட்டாங்க என்று பேசுகிறார். அப்பொழுது என்ன விஷயம் என்று போலீஸிடம் விஜயா கேட்க..
இந்த பொண்ணோட தம்பி சத்யா தான் முத்து ஓட பைக்கை திருடனது என்று சொல்ல விஜயா இதெல்லாம் நடந்திருக்கா.. உங்க குடும்பம் பூ கற்ற குடும்பம்னு நினைச்சேன் ஆனா திருட்டு குடும்பமா இருக்கு என்று மீனா குடும்பத்தை பற்றி தப்பாக பேசுகிறார் உடனே மனோஜும் நல்ல வேலை இந்த குடும்பத்தில் இருந்து நான் தப்பிச்சிட்டேன் என நக்கலாக சொல்கிறார்.
அண்ணாமலையும் மீனா கிட்ட போலீஸ் சொல்றதெல்லாம் உண்மையா என்கிட்ட கூட மறச்சுட்ட இல்லம்மா என்று சொல்கிறார். பிறகு மீனா ஒன்னும் சொல்ல முடியாமல் கூனி குறுகி போய் நிற்கிறார் அடுத்து அவங்க அம்மா மீனாவுக்கு போன் பண்ண வீட்டில் நடந்த விஷயங்களை மீனா அவங்க அம்மாவிடம் சொல்கிறார்.. மாமாவும் என்கிட்ட இதெல்லாம் மறச்சிட்டீங்களே என கேட்டார்.
எனக்கு ரொம்ப கஷ்டமா போயிடுச்சு என மீனா அழுகிறார். பிறகு சத்யா வீட்டிற்கு வந்ததும் அவரது அம்மா உன்னால தான் இப்ப அக்கா வீட்ல பிரச்சனை நீ மாமாவோட பைக்க திருடுன விஷயம் இப்ப அவங்க அத்தைக்கு தெரிஞ்சு மீனாவ ரொம்ப காயப்படுத்துறாங்க என்று திட்டிக் கொண்டிருக்கிறார். இதோட இந்த எபிசோடு முடிந்துள்ளது.