Siragadikka Aasai September 09 : இன்றைய எபிசோடில் லட்சுமி அம்மாவை டிஸ்சார்ஜ் பண்ணலாம் என டாக்டர் சொல்லிவிட்டனர். பிறகு நர்ஸ் முத்து கிட்ட இந்த பில்ல பே பண்ணிடுங்க என்று சொல்கிறார். பில் அமௌன்ட் 18 ஆயிரம் வருகிறது லக்ஷ்மி அவ்ளோ பணம் என் கிட்ட இல்லை என சொல்வதும்..
நான் வீட்டுக்கு போய் பணம் எடுத்துட்டு வந்து பில் கட்டுகிறேன் என்று சொல்லிவிட்டு முத்துவும் மீனாவும் வீட்டுக்கு செல்கின்றனர். பிறகு மீனா முத்து கிட்ட இந்த அம்மா பேசுறதே சரியில்லை, எது கேட்டாலும் யோசிச்சு யோசிச்சு பதில் சொல்றாங்க அவங்க பொண்ண பத்தி நமக்கு தெரிய கூடாதுன்னு நினைக்கிறாங்க என்று சொல்கிறார்.
ஆனால் முத்து அதெல்லாம் ஒன்னும் இருக்காது என்று சொல்லி மீனாவை வீட்டுக்கு கூட்டிட்டு போறார், அவுங்க திரும்பி வரதுக்குள்ள நம்ம டிஸ்சார்ஜ் ஆயிடனும் என்று பில் கட்டிவிட்டு ரோகிணி இவர்களை கூட்டிகிட்டு வேறொரு பக்கமாக கிளம்புகிறார். அடுத்து முத்துவும் மீனாவும் ரூமுக்கு வந்து பார்க்கும்போது லட்சுமி அம்மா அங்கு இல்லை ரிசப்ஷனில் போய் கேட்க..
அவங்க ரிலேஷன் ஒரு பொண்ணு வந்து டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு போய்ட்டாங்க என்று சொல்ல மீனா அது ஏன் அவங்க பொண்ணா இருக்க கூடாது நம்ம கிட்ட அவங்களுக்கு ரிலேஷன் யாரும் இல்லனாங்க, இப்போ ஒரு பொண்ணு வந்து கூட்டிட்டு போயிருக்காங்க இதுல ஏதோ சந்தேகம் இருக்கு என்று மீனா சொல்ல முத்து பேசாம வா அவங்க சொந்தக்காரங்க வந்து கூட்டிட்டு போய்ட்டாங்க ரொம்ப நல்லது என்று சொல்லி வீட்டுக்கு போகின்றனர்.
ரோகிணி வித்யா வீட்டிற்கு அவங்க அம்மா மற்றும் கிருஷை கூட்டிட்டு போய் விட்டு இங்கேயேதான் இருக்கணும் நான் அப்பப்ப வந்து உன்னை பார்த்துக்கிறேன் என்று சொல்லி விட்டுட்டு போகிறார். அடுத்து அண்ணாமலை வீட்டிற்கு வந்ததும் ஹாஸ்பிடல் சேர்த்த விஷயம் எல்லாத்தையும் அவரிடம் சொல்கின்றனர்.
பிறகு அண்ணாமலை வாசுதேவன் கொடுத்தார் என ஒரு லட்சம் பணத்தை விஜயாவிடம் கொடுக்கிறார்.. அடுத்து ஸ்ருதி ரவி கிட்ட போன் பண்ணி பேசிட்டு இருக்காங்க சரி நான் வீட்டுக்கு கிளம்புறேன் போன வை என்று ரவி சொல்ல ஹேர் போன்ல டிரைவ் பண்ணிகிட்டே நம்ம பேசிக்கிட்டே போகலாம் என்று வீடு வரையும் போனில் பேசிக் கொண்டே போகின்றனர் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது..