Siragadikka Aasai september 08 : இன்றைய எபிசோடில் மீனாவும், முத்துவும் கிருஷை வீட்டுக்கு தூக்கிட்டு வருகின்றனர். அவனைப் பார்த்து விஜயா என்னது இது என்று கேட்க முத்து அது குழந்தை இது அதுன்னு கேக்குறீங்க என்று கோபப்படுகிறார். பிறகு இவனை எதுக்கு இங்க தூக்கிட்டு வந்தீங்க என்று கேட்க நாங்க ரோட்டில் போயிட்டு இருக்கும்போது இவங்க பாட்டி மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க..
அதனால அவங்கள பக்கத்துல இருக்கிற ஹாஸ்பிடல்ல சேர்த்திட்டு இவன நம்ப வீட்டுக்கு தூக்கிட்டு வந்திருக்கோம் என்று சொல்ல இவனும் இவங்க பாட்டியும் ஏற்கனவே ஒரு தடவை நம்ம வீட்டுக்கு வந்தப்ப தான் நான் வழுக்கி விழுந்த இவங்க தரித்திரம் புடிச்சவங்க இவன முதல்ல தூக்கிட்டு போய் வெளியே போய் விடு என்று பேசிக் கொண்டிருக்கிறார்.
இதனை ரோகிணியும் ரூம் கதவை பாதியாக திறந்து பார்த்துக் கொண்டிருக்கிறார் தன் பையனை விஜயா இப்படி பேசுவது ரோகிணிக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அதனால் அழுது கொண்டிருக்கிறார். பிறகு முத்துவும் மீனாவும் அவங்க பாட்டி கண் முழிக்கிற வரையும் க்ரிஷ் எங்க கூட தான் இருப்பான் என்று அவனைப் போய் முத்து ரூமில் தூங்க வைக்கிறார் மீனா கிருஷ்குக்கு பால் சுட வைக்க போகிறார்.
உடனே ரோகினி ரூமில் இருந்து வெளியே வேகமாக வருகிறார். அப்பொழுது விஜயா ரோகிணி இங்க நடக்கிறத எல்லாம் பாத்தியா என்று சொல்ல வருகிறார் அதற்கு ரோகிணி பார்லர்லஎனக்கு முக்கியமான வேலை இருக்கு கிளைன்ட் வெயிட் பண்றாங்க நான் போகணும் ஆன்ட்டி என்று சொல்லிவிட்டு வேகமாக இறங்குகிறார்.
ஹாஸ்பிடலுக்கு போய் அவங்க அம்மாவ பாத்து அழுது நீ ஏன் சென்னைக்கு வந்த இப்ப எப்படி இருக்க என்று கேட்க எனக்கு இப்பல்லாம் ரொம்ப உடம்பு முடியல, எனக்கு ஏதாவது ஆயிடும் போல பயமா இருக்கு அதனால தான் கிருஷ உன்கிட்ட ஒப்படைக்கலாம்னு வந்த அதுவும் நான் உன் பிரண்டு வித்யா வீட்டுக்கு போலாம்னு தான் இங்க வந்தேன்.
வர வழியில மயக்கம் போட்டு விழுந்து முத்து மீனா என்ன ஹாஸ்பிடல்ல வந்து சேக்குற மாதிரி ஆயிடுச்சு, இப்ப க்ரிஷ் எப்படி இருக்கான் என்று கேட்டு எங்க வீட்ல தான் இருக்கான் என்று ரோகினி சொல்கிறார் பிறகு நர்ஸ் ரோகிணி கிட்ட நீங்க யாரு என்று கேட்க நான் இவங்களோட ரிலேஷன் என்று சொல்வதும் இந்த இன்ஜெக்ஷன் வாங்கிட்டு வாங்க என்று சொல்லுகிறார்.
வெளியே வரும் பொழுது முத்துவும் மீனாவும் கிருஷ கூட்டிக்கிட்டு ஹாஸ்பிடல் வந்துட்டாங்க, அவங்கள பார்த்தது ரோகினி ரூமுக்குள்ள வந்து ஒளிஞ்சிகிட்டாங்க, பிறகு முத்துவும் மீனாவும் லட்சுமி அம்மா கிட்ட உங்க பொண்ணு இங்க இருக்கிறதா சொன்னீங்களே நம்பர் குடுங்க போன் பண்ணி சொல்லலாம் என்று கேட்க, அவ துபாய் போய்ட்டா அவள வழி அனுப்ப தான் நாங்க வந்தோம் என்று போய் சொல்கிறார் பிறகு சரி உங்க பொண்ணுக்கு கல்யாணம் ஆகப்போகுதுன்னு சொன்னிங்களே..
அந்த மாப்பிள்ளை நம்பர் இருந்தா சொல்லுங்க என்று கேட்க என் பொண்ணுக்கு இன்னும் கல்யாணம் ஆகல என்று பொய் சொல்கிறார் பிறகு எனக்கு சரியாயிடுச்சு நான் கிருஷ கூட்டிட்டு ஊருக்கே போயிடுறேன் என்று லட்சுமி அம்மா சொல்றாங்க அடுத்து டாக்டர் வந்து இவங்கள கொஞ்ச நாளைக்கு தனியா விடாதீங்க கூடவே இருந்து ஒரு ஆள் பார்த்துக்கணும் என்று சொல்கிறார் இதை ரோகிணியும் காதல் வாங்கிக் கொண்டிருக்கிறார் இதோடு இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.