கடந்த ஒரு வாரமாகவே சீரியல் நடிகை ஸ்ருதி நாராயணனின் சர்ச்சை தான் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வந்தது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வரும் ஸ்ருதி நாராயணன் பட வாய்ப்புக்காக ஒரு இயக்குனருடன் வீடியோ கால் மூலம் பேசியதாக கூறப்படுகிறது.
அதனை யாரோ ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டு ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் அதிர்வலையை உருவாக்கி உள்ளார்கள். இந்த சம்பவம் சின்னத்திரை மற்றும் சினிமா துறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
ஸ்ருதி நாராயணன் அந்த இயக்குனர் இடம் பேசிய வீடியோ காட்சிகள் ஒரு வாரமாக வைரல் ஆகி வந்தது. பட வாய்ப்பு தருவதாக கூறி அந்த இயக்குனர் ஸ்ருதி நாராயணனை தவறாக செயல்களை செய்ய வற்புறுத்தியதாக தெரிகிறது தொடர்ச்சியாக மூன்று வீடியோக்கள் வெளியானதால் திட்டமிட்ட சதி என பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்தார்கள்.
இந்த வீடியோ வெளியானதும் ரசிகர்கள் இரு தரப்பாக பிரிந்து தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வந்தார்கள் பட வாய்ப்புக்காக பெண்களை இப்படி சீரழிப்பதா எனவும் ஒரு தரப்பு ரசிகர்கள் கருத்து தெரிவித்தார்கள் மற்றொரு தரப்பு ரசிகர்கள் பட வாய்ப்புதானே அதற்கு இப்படி போய் செய்ய வேண்டுமா எனவும் ஸ்ருதி நாராயணனை விமர்சித்து வந்தார்கள்.
அந்த வீடியோவில் ஸ்ருதி நாராயணன் முகம் தெளிவாக தெரிந்தாலும் அந்த இயக்குனர் யார் என்ற அடையாளம் இதுவரை தெரியவில்லை. இருவரும் குற்றவாளிகள் என்றாலும் ஒருவர் மட்டுமே தெரிய வந்துள்ளது இது குறித்து சமூக வலைதளத்தில் விவாதங்கள் நடைபெற்று வருகிறது இதனையில் சுருதி நாராயணன் தன்னுடைய twitter பக்கத்தில் 15 படங்களுக்கு மேல் இயக்கிய முன்னணி இயக்குனர் ஒருவர் தான் இதை செய்தார்.
இந்த பதிவை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் காத்திருங்கள் அந்த நபரின் முகத்திரையை நான் கிழிக்காமல் விட மாட்டேன் எனவும் பதிவிட்டுள்ளார் இவர் இவ்வாறு கூறியுள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் சுருதி நாராயணனுக்கு மிகப் பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. அதை திரும்பி பெற வழியில்லை என்று அவர் நினைப்பதாக ரசிகர்கள் கூறுகிறார்கள். கண்டிப்பாக அவர் பெயரை வெளியிட்டு அவரின் முகத்திரையை கிழிக்க வேண்டும் எனவும் ரசிகர்கள் சுருதி நாராயணனுக்கு வேண்டுகோள் வைத்து வருகிறார்கள்.
பட வாய்ப்பு என்ற பெயரில் பெண்களை சூறையாடும் இயக்குனர்கள் இதுபோல் சில இழிவான செயல்களை செய்து வருகிறார்கள் இவர்களைப் போல் உள்ள நபர்களை வெளி உலகத்திற்கு காட்டினால் மற்ற நடிகைகள் ஆவது தப்பிக்கலாம் என ஒரு தரப்பு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் ஒரு சில ரசிகர்கள் இருவருமே தப்பு செய்தவர்கள் தான் ஆனால் வரை மட்டும் தண்டிப்பது மிகப்பெரிய குற்றம் என குரல் கொடுத்து வருகிறார்கள்.