கோலாகலமாக நடந்த திருமண நிச்சயதார்த்தம்.. வருங்கால மனைவியுடன் சிறகடிக்க ஆசை முத்துவின் வைரல் போட்டோ

விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியலான சிறகடிக்க ஆசைக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் முத்து மீனா ஜோடியின் கெமிஸ்ட்ரி வெகு பிரபலம்.

அவர்களின் ஜோடி பொருத்தத்தை ரசிக்காத அவர்களே இருக்க முடியாது. இதுவே இந்த சீரியலின் வெற்றிக்கு காரணமாக இருக்கிறது. அதேபோல் முத்து கதாபாத்திரத்தில் நடிக்கும் வெற்றி வசந்த் சோசியல் மீடியாவில் எப்போதுமே ஆக்டிவாக இருப்பார்.

அவரை பல ரசிகர்கள் பாலோ செய்து வரும் நிலையில் கடந்த வாரம் தன்னுடைய காதலியை அவர் அறிமுகப்படுத்தி இருந்தார். அதன்படி விஜய் டிவியின் பொன்னி சீரியலில் ஹீரோயினாக நடிக்கும் வைஷ்ணவி தான் அவருடைய காதலி.

இருவருக்கும் விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கப் போவதாக வெற்றி வசந்த் அறிவித்திருந்தார். அதன்படி தற்போது அவர்களுடைய நிச்சயதார்த்த போ சோசியல் மீடியாவை கலக்கி வருகறது. பாரம்பரிய முறைப்படி வைஷ்ணவி பட்டுப்புடவையிலும் வெற்றி வசந்த் வெள்ளை சட்டை பேண்ட் என கலக்கலாக இருக்கின்றனர்.

இருவர் முகத்திலும் காதல் கைகூடி விட்டர் சந்தோஷம் அப்பட்டமாக தெரிகிறது. அதேபோல் மோதிரம் மாத்தி நிச்சயதார்த்தம் செய்து கொண்ட போட்டோவை பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே விஜய் டிவி பிரபலங்கள் நிஜ வாழ்க்கையிலும் தம்பதிகளாக மாறி இருக்கின்றனர். சரவணன் மீனாட்சி ஜோடியில் தொடங்கி ராஜா ராணி சஞ்சீவ் ஆலியா மானசா வரை கியூட் ஜோடிகளாக உள்ளனர். அந்த வரிசையில் தற்போது வெற்றி வசந்த் வைஷ்ணவி ஜோடியும் இணைந்துள்ளனர்.