நீ படிச்ச ஸ்கூல்ல நான் வாத்தியார்டா.. டி ஆர் பி யில் முதலிடத்தை பிடித்த விஜய் டிவி.. அப்போ சன் டிவியின் நிலைமை..

serial trp point
serial trp point

தொலைக்காட்சிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் தொலைக்காட்சிகளில் மிக முக்கிய தொலைக்காட்சியாக பார்க்கப்படுவது சன் தொலைக்காட்சி தான் ஏன் என்றால் இந்த தொலைக்காட்சியில் அதிகமாக சீரியல்களை  ஒளிபரப்பி மக்களை கவர்ந்து வருகிறார்கள்.

அதேபோல் சன்தொலைக்காட்சிக்கும் விஜய் தொலைக்காட்சிக்கும் போட்டிகள் நிலவி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்த நிலையில் கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்களில் மக்கள் தொலைக்காட்சியில் சீரியலை பார்க்கும் நேரத்தை அடிப்படையாகக் கொண்டு வாராவாரம் டிஆர்பி யில் யார் முதலிடம் என்ற விவரத்தை வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த லிஸ்டில் அதிகமாக சன் தொலைக்காட்சி தான் இடம் பிடித்து வந்தது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் ப்ரைம் டைம் சீரியலுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வந்தது டாப் நம்பர் ஒன் இடத்தில் அதிகமாக சன் டிவி தான் இடம் பிடிக்கிறது சில நேரங்களில் விஜய் டிவி வரும்.

இந்த நிலையில் கடந்த வாரத்திற்கான டிஆர்பி லிஸ்ட் வெளியிடப்பட்டது இதில் சன் டிவி தொடர்களை முறியடித்து நம்பர் ஒன் இடத்தை பிடித்தது விஜய் டிவி அதற்கு காரணம் ரசிகர்கள் அதிகம் விரும்பி பார்க்கும் சீரியலான சிறகடிக்க ஆசை தொடர் தான் 8.38 புள்ளிகளை பெற்று டி ஆர் பி இல் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருந்தது.

முதல் இடத்தில் பல வாரங்களாக இருந்த சிங்க பெண்ணே தொடர் 8.27 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது