Siragadikka aasai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் வாரம் வாரம் விஜய் டிவியின் டிஆர்பியில் சிறக்கடிக்க ஆசை சீரியலின் ரேட்டிங் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ரோகிணி மனோஜின் திருமணம் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது.
அதாவது ரோகிணி தனக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருக்கிறான் என்பதை மறைத்து மனோஜை திருமணம் செய்து கொள்ள தயாராகி இருக்கிறார். இது தெரியாத விஜய்யாவும் ரோகிணி நல்ல பெண் என நினைத்து வரும் நிலையில் கோவிலில் திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் எப்படியாவது ரோகினியின் உண்மை முகத்தை அனைவருக்கும் தெரிய வைத்து திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக ரோகிணி உடன் வேலை பார்த்து வந்த நபர் நினைக்கிறார். அந்த நபரை ரோகிணி அவருடைய மனைவியிடம் போட்டுக் கொடுக்க இதனால் வேலையும் போய் உள்ளது.
அவளால் தான் என்னுடைய வேலை போச்சு என்ற கோபத்தில் கோவிலுக்கு காரில் வருகிறார். அதாவது, தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மணமேடையில் மனோஜம் ரோகிணியும் மாலையும் கழுத்துமாக உட்கார்ந்திருக்க இந்த நபர் அவ தப்பிக்க வழியே இல்ல அந்த மேடத்து கிட்ட சொல்லி என்ன வேலையை விட்டு தூக்கினால.
இப்ப அவரை யாரு காப்பாத்த வர்றான்னு பாக்குறேன் எனக் கூறி ரோகினியின் போட்டோவை வாட்ஸ் அப்பில் அனுப்புகிறார். அவன் பொய் சொல்றான் இங்க வரமாட்டான் என ரோகிணிக்கு அவருடைய தோழி ஆறுதல் கூற பிறகு அவன் வரானா இல்லையா போய் பாரு என ரோகிணி அனுப்பி வைக்கிறார். இந்த நேரத்தில் சரியாக அவரும் கோவிலுக்கு வந்து விடுகிறார் இதனால் ரோகிணி அதிர்ச்சி அடைய இதோடு ப்ரோமோ நிறைவடைகிறது.