Siragadikka aasai: விஜய் டிவியில் சமீபத்தில் தொடங்கப்பட்டு வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கும் முக்கியமான சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலுக்கு வாரம் வாரம் ரசிகர்களின் ஆதரவு அதிகரித்துக் கொண்டே செல்வதனால் கண்டிப்பாக டிஆர்பியில் முன்னணி வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இந்த வார ப்ரோமோ வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தற்பொழுது மனோஜ் ரோகினியின் திருமணம் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் நடைபெற்று முடிந்துள்ளது. இவ்வாறு ரோகினி இந்த வீட்டிற்கு வந்த பிறகு விஜயாவின் ஆட்டம் கொஞ்சம் ஓவராகவே இருந்து வருகிறது தொடர்ந்து மீனாவை குத்தி காட்டி பேசி வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் விஜயா மனோஜ் ரோகினிக்கு சாந்தி முகூர்த்தம் நடைபெற வேண்டும் என்பதற்காக ரூமை அலங்காரம் செய்ய வேண்டும் என மீனாவிடம் சொல்ல இந்த நேரத்தில் பாட்டி முத்து மீனாவிற்கும் நடைபெற வேண்டும் என கூறுகிறார் ஆனால் அது எப்படி முடியும் ஒரே நேரத்தில் இதுபோன்று நடக்க கூடாது என விஜயா சொல்ல பிறகு மீனா எனக்கு இப்பொழுது வேண்டாம் ரோகிணி மனோஜ்க்கு நடக்கட்டும் என்ன சொல்கிறார்.
பிறகு இவர்கள் சென்றவுடன் ரோகினி விஜயாவிடம் அவங்களுக்கு முதலில் சாந்தி முகூர்த்தம் நடக்கட்டும் எங்களுக்கு அப்புறமா பாத்துக்கலாம் என சொல்ல அதற்கு விஜயா, மனோஜ் ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் அண்ணாமலை பாட்டி இருவரும் மீனா முத்துவிற்காக சில சடங்குகளை செய்கின்றனர்.
அதாவது தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் முத்து மீனா இருவரும் பானையில் உள்ள தண்ணீரில் மோதிரத்தை போட்டு தேடவிருக்கிறார்கள் அதில் இருக்கும் மோதிரத்தை முத்து கண்டுபிடித்து விடுகிறார். பிறகு அப்பளத்தை மாற்றி மாற்றி தலையில் உடைத்துக் கொள்கின்றனர். இவ்வாறு திருமணம் நடைபெறும் பொழுது செய்ய வேண்டிய சில சம்பிரதாயங்களை தற்பொழுது செய்து வைக்கிறார்கள் இதோடு ப்ரோமோ நிறைவடைகிறது.