விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோடு ஸ்ருதியிடம் செயினை ரவி திருப்பி கொடுத்த நிலையில் இதனால் சுருதி மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். இது என்னுடைய அப்பா எனக்கு வாங்கி கொடுத்தது திரும்பி தந்ததற்கு ரொம்ப தேங்க்ஸ் என கூறிவிட்டு கிளம்ப அப்பொழுது ரவி இனிமேல் பார்க்க முடியுமா என கேட்க எதை நான் டப்பிங் செய்வாயா என கேட்க இல்லை உன்னை பார்க்க தான் என சொல்ல நான் தான் உன்னுடைய ரெகுலர் கஸ்டமர் ஆய்ட்டேனே அடிக்கடி பார்க்கலாம் என கூறி விடுகிறார்.
இதனை அடுத்து மறுபுறம் மீனா முத்து இருவருக்கும் முதலிரவு ஏற்பாடுகளை பாட்டி மிகவும் பிரம்மாண்டமாக செய்து வரும் நிலையில் பெட்டில் முழுவதும் பூவை தூவி விட்டிருக்கிறார். எதற்கு பாட்டி இவ்வளவு பூவை பெட்டில் போட்டு இருக்கீங்க எனக்கு ஒரு மாதிரி இருக்கு என கூற இதனை அடுத்து திருமணத்தின் பொழுது நடந்த கதை ஒன்றை பாட்டி கூறுகிறார் இதனை எல்லாம் கேட்டுவிட்டேன் மீனா சிரித்துக் கொண்டிருக்கிறார்.
மேலும் மைனரு வேட்டி கட்டி பாடலுக்கு முத்துவுடன் டூயட் பாடுவது போல் கனவு காண இதனை எல்லாம் சுற்றி நின்று அனைவரும் பார்த்து சிரிக்கிறார்கள். எனவே மீனா வெட்கப்படுகிறார் இதனை அடுத்து முத்துவிடம் அடி வாங்கிய வட்டிக்காரர் பணம் கொடுத்தவர்களிடம் மரியாதை இல்லாமல் பேச அதற்கெல்லாம் காரணம் முத்து தான் அவனை சும்மா விடக்கூடாது என திட்டம் போடுகிறார்கள்.
எனவே முத்துவிடம் இருக்கும் காரை பறிக்க பிளான் போட செல்வத்துக்கு போன் செய்து பாண்டிச்சேரி போக வேண்டும் என்று சொல்லி பேசுகிறார். இதனை அடுத்து செல்வம் முத்துக்கு ஃபோன் செய்து பாண்டிச்சேரி சவாரி குறித்து பேசிவிட்டு ஒரு நாளைக்கு 8000 கிடைப்பதெல்லாம் பெரிய விஷயம் எனக் கூற அவருடன் வந்த நண்பர்கள் சரக்கு பாட்டிலை காரில் ஏற்றுகிறார்கள்.
அப்பொழுது செல்வத்திடம் திராட்சை என பொய் சொல்லி இருக்கும் நிலையில் பிறகு வட்டிக்காரன் போலீசுக்கு போன் செய்து இதனை போட்டு கொடுக்கிறார். இதனால் முத்து காரை இழந்து முத்து என்னுடைய காலில் வந்து விழனும் அப்பொழுதுதான் நான் சந்தோஷப்படுவேன் என கூற இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.