விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியல் 29/6/23 இன்றைய எபிசோட்..

siragadikka aasai
siragadikka aasai

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில் முத்து சம்மதம் சொல்லிட்டானா என அன்னத்தின் அக்கா பாட்டியிடம் கேட்க எல்லாம் உங்க இஷ்டம் என்று சொல்லிட்டான் என்று பாட்டி சொல்ல விருப்பம் இல்லாம எப்படி நான் என்று கேட்க எல்லாம் போக போக சரியாயிடும் எல்லாம் நடக்க வேண்டிய நேரத்துல சரியா நடக்க வேண்டும் எனப் பாட்டி சொல்ல அன்னத்தின் அக்கா அதுவும் சரிதான் என கூறுகிறார்.

இதனை அடுத்து மீனா வந்து பாட்டி சாப்பாடு வெந்துடுச்சு நான் வடிக்கிறேன் என்று சொல்ல பிறகு முத்து வெளியே போயிட்டு வரேன்னு என சொல்லிவிட்டு கிளம்ப பாட்டி நில்லுடா நீ வெளியே போகக்கூடாது என தடுத்து நிறுத்த ஓ மீனா கிட்ட சொல்லிட்டு போகணுமா என பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே மீண்டும் கிளம்புகிறார். அப்பொழுது பாட்டி உனக்கு நாள் குறிச்சிருக்கு வெளியே போகக்கூடாது என தடுக்கிறார்.

இப்ப சாயங்காலம் தானே பாட்டி இப்ப என்ன இருக்கு நான் போய் பிரண்ட்ஸ் பாத்துட்டு வரேன் என்ன சொல்ல உன்னுடைய பொண்டாட்டி சம்மதம் சொன்னா நீ போகலாம் என கிளம்புகிறார். பிறகு முத்து மீனாவிடம் தொடர்ந்து கெஞ்சி கொண்டிருக்க பிறகு மீனா பாட்டியிடம் அவர் ரொம்ப கெஞ்சுறாரு போயிட்டு வரட்டும் பாட்டி என சொல்ல பாட்டியும் போயிட்டு சீக்கிரமா வரணும் என அனுப்பி வைக்கிறார்.

பிறகு தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்க கல்யாணம் பண்ணாதீங்க என பேசும் முத்து பிறகு தன்னுடைய நண்பனுக்கு போன் செய்து இன்சுரன்ஸ் கட்டிடியா என்றெல்லாம் விசாரிக்கிறார். இதனை அடுத்து மறுபுறம் ரவி சுருதியை வரைந்து அனுப்பி தன்னுடைய போட்டோவை பார்த்து எவ்வளவு மிஸ் பண்ற மாதிரியே இருக்கு நேர்ல பார்க்க அழகா தான் இருக்கா என்று யோசிக்கிறார்.

பிறகு தன்னைத்தானே அடித்துக் கொள்ளும் ரவி வலிக்குது வேற வழி ஏதாவது யோசிக்கலாம் என்று பிளான் போட்டு தலையில் கட்டுடன் ஒரு போட்டோவை எடுத்து ஸ்ருதிக்கு அனுப்பி போன் செய்து உனக்கு ஒரு போட்டோ அனுப்பி இருக்கேன் பாரு என சொல்ல ஸ்ருதியி அதனை பார்த்து சந்தோஷப்படுகிறார். மேலும் ரவி நீ சொன்ன மாதிரியே அவன் ரவுடியா தான் இருக்கான் அவனை அடிச்சதும் நாலஞ்சு பேர கூட்டிட்டு வந்துட்டான் எல்லாரையும் அடிச்சு ஓட விட்டுட்டேன் ஆறு மாசத்துக்கு அவன் எழுந்திருக்கவே மாட்டான் என்று கூற சுருதி இப்ப நீ எனக்கு ரொம்ப க்ளோஸ் ஆயிட்ட நீ மட்டும் நேரில் இருந்தா உன்னை ஹக் பண்ணி தேங்க்ஸ் சொல்லி இருப்பேன் என சொல்ல மேலும் நீ எந்த ரெஸ்டாரண்ட்ல வேலை செய்ற நான் உன்னை வந்து பார்க்கிறேன் என்ன சொன்னதும் நான் இப்போ வீட்ல இருக்கேன் அவங்கள அடிச்சு எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு அதனால ரெஸ்ட் எடுக்க வீட்டிற்கு வந்து விட்டேன் என்று சொல்லி சமாளித்து விடுகிறார்.

இதனை அடுத்து முத்து வீட்டிற்கு வந்தவுடன் பாட்டி பெட் எல்லாத்தையும் தட்டி தூசி தட்டி ஏற்பாடுகளை செய்கிறார் அப்பொழுது முத்துவிற்கு மீனா பரிமாற முருங்கை கீரை முருங்கைக்காய் அனைத்தையும் முருங்கையில் செய்து வைத்து சாப்பாடை பரிமாற எல்லா முருங்கக்காயும் போட்டு வச்சிட்டீங்களா அந்த முருங்கை மரம் பாவம் என சொல்கிறார்.

பிறகு மீனாவை நக்கலாக பேச அதற்கு பாட்டி முத்துவை அடித்து அவ உனக்கு கிடைத்த பொக்கிஷம் அவ இல்லன்னா பிரேக் இல்லாத மாதிரி போய் முட்டிகுவ என அறிவுரை சொல்ல மீனா சந்தோஷப்படுகிறார். பிறகு பாட்டி தூங்கிக் கொண்டிருக்க முத்து நைசாக எழுந்து வெளியே செல்ல முயற்சிக்க பாட்டி முத்துவை தடுத்து நிறுத்த உடனே முத்து வெளியில் போயிட்டு வந்துடறேன் பாட்டி என கெஞ்சுகிறார். பிறகு மீனா விடம் அனுமதி கேட்டுவிட்டு செல்லும் முத்து என கூற மீனாவிடம் கேட்க மீனா எதுவும் சொல்லாமல் உள்ளே செல்ல புடவையை பிடித்து இருக்கிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.