Siragadikka aasai serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அறிமுகமாகி டிஆர்பியில் முன்னணி வகித்து வரும் முக்கியமான சீரியல்தான் சிறகடிக்க ஆசை. வாரவாரம் இந்த சீரியலுக்கு டிஆர்பி ரேட்டிங் அதிகரித்துக் கொண்டே இருப்பதனால் விறுவிறுப்பான காட்சிகளுடன் சீரியல் தொடங்க ஆரம்பித்திருக்கிறது.
அந்த வகையில் தற்பொழுது இந்த தொடரில் ரோகிணி மனோஜ் திருமணம் நடக்குமா? நடக்காதா? என்ற பரபரப்பான எபிசோடுகளுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. ரோகிணி ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருப்பதை மறைத்து மனோஜை திருமணம் செய்து கொள்கிறார்.
ரோகிணி பணக்காரப் பெண் என நினைத்து விஜயாவும் மனோஜ்க்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்படும் நிலையில் இந்த திருமணத்தை நிறுத்த வில்லன் தினேஷ் காரில் வந்து கொண்டிருக்கிறார். ரோகினியினால் தினேஷ் தனது மனைவிட மாட்டியதோடு மட்டுமல்லாமல் அவருடைய வேலையும் போயிருக்கிறது.
எனவே எப்படியாவது ரோகினியை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தினமும் சேர்ந்து வருகிறார். அதற்காக ரோகினிக்கு திருமணம் நடக்கும் கோவிலுக்கு முத்து ஓட்டும் வாடகை காரில் தான் தினேஷ் வருகிறார். அப்போது ரோகிணி நான் எப்பொழுது கூப்பிட்டாலும் வந்து தான் ஆக வேண்டும் உங்க கூடவும் அவளை ஷேர் பண்றேன் ரூம் மட்டும் போடுங்க என தினேஷ் போனில் நண்பருடன் பேசிக் கொண்டிருப்பதை கேட்டு முத்து கடுப்பாகிறார்.
எனவே வெளியில் தினேஷை இறக்கி அடித்து நொறுக்குகிறார் அதன் பிறகு முத்து திருமணம் நடக்கும் கோவிலுக்கு சென்று அப்பொழுது மீனாவை முத்துவின் அம்மா மோசமாக பேசியதைப் பற்றி முத்து விடம் கூறுகிறார். எனவே மேலும் கடுப்பான இவர் கோவிலுக்குள் சென்று திருமணத்தை நிறுத்தி அம்மா பேசியது தவறு என சொல்லவில்லை என்றால் தாலியை எடுத்துக் கொண்டு ஓடி விடுவேன் என கூறி சண்டை போடுகிறார். ஆனால் மீனா குறிக்கிட்டு சமாதானப்படுத்துகிறார் இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.