பாம்பே டீலரை ஏமாற்றும் முத்துவின் குடும்பம்.. ரோகினி போட்ட திட்டம் பலிக்குமா.? சிறகடிக்க ஆசை இன்று

siragadikka aasai september 12
siragadikka aasai september 12

விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் இந்த வாரம் ஏகப்பட்ட கலாட்டாக்கள் நடந்து கொண்டிருக்கிறது. பாம்பே டீலரை இம்ப்ரஸ் செய்து லாபம் பார்க்க மனோஜ் ரோகினி இருவரும் வில்லங்கமான திட்டம் போடுகின்றனர்.

அதன்படி தங்களுடைய குடும்பம் பணக்கார வர்க்கத்தை சேர்ந்தது என இஷ்டத்துக்கு பொய் சொல்லி வைத்திருக்கின்றனர். அதை அடுத்து குடும்பத்தினரையும் சம்மதிக்க வைக்கும் மனோஜ் ரோகினி பார்ட்டிக்கு அனைவரையும் தயார் செய்கின்றனர்.

இன்றைய எபிசோடில் விஜயாவில் ஆரம்பித்து ஸ்ருதி வரை அனைவரும் கலக்கலாக மேக்கப் போட்டு பாம்பே டீலரை சந்திக்க தயாராகின்றனர். அதேபோல் முத்து மீனா கூட பணக்காரர்கள் போல மேக்கப் போட்டு ரெடியாகிவிட்டனர்.

அதேசமயம் ரோகினி எப்படியாவது முத்துவின் போனை எடுத்து தேவையான வீடியோவை ஆட்டையை போட பிளான் செய்திருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க மனோஜ் பாம்பே டீலரை தன் குடும்பத்தினருக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார்.

முதலில் முத்து மீனாவை சந்திக்கும் தொழிலதிபர் அவர்களுடைய பிசினஸ் பற்றி கேட்கிறார். இதில் எப்படியோ முத்து சமாளிக்க மீனா உளறி விடுகிறார். ஆனால் மாட்டிக்காமல் இவர்கள் எஸ்கேப் ஆகி விடுகின்றனர்.

அதேபோல் ரவியை சந்திக்கும் பாம்பே டீலர அவர ெஸ்டாரன்ட் பற்றி விசாரிக்கிறார். இங்கும் சுருதி சொதப்ப மனோஜ் எப்படியோ சமாளித்து டீலரை ஏமாற்றி விடுகிறார்.

இப்படியாக இன்றைய எபிசோடில் பார்ட்டி நல்லபடியாக முடிந்து விடுகிறது. ஆனால் பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்ற கதையாக நிச்சயம் பாம்பே டீலருக்கு உண்மை தெரிய வரத்தான் போகிறது. அப்பொழுது மனோஜ் ரோகினியின் நிலைமை திண்டாட்டம் தான் இதுதான் அடுத்தடுத்த எபிசோடுகளில் வர இருக்கிறது.