Siragadikka Aasai : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா ரவிக்கும் சுருதிக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே ஏன் தனித்தனியா இருக்காங்க எனப் பேசிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது ரவியை கூப்பிட்டு அந்த பூக்கடைக்காரிடம் உனக்கு என்ன பேச்சு என கேட்க டீ கேட்டா வேற என்ன நான் இப்ப பேசுனத கேட்கல முன்னாடி எதோ ரகசியம் பேசினியே அதை கேட்டேன் என கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்லை என சொல்லிவிட்டு ரவி கிளம்புகிறார்.
அந்த சமயத்தில் சுருதி நான் முதலில் குடிக்க குளிக்கட்டா இல்ல அவர் குளிக்கிறாரா என்று கேளுங்கள் என கேட்க நானே ஃபர்ஸ்ட் குளிக்கிறேன் என குளிக்க செல்கிறார் ரவி டென்ஷன் ஆகிறார் விஜயா உடனே அண்ணாமலையிடம் இவங்களுக்குள்ள ஏதோ பிரச்சனை அதனால தான் தனித்தனியா பேசிக்கிறாங்க என கூறிக் கொண்டிருக்கிறார் அதற்கு அண்ணாமலை அவங்க பர்சனல் விஷயம் நாம தலையிடக்கூடாது எனக் கூறி விடுகிறார்.
சத்தமே இல்லாமல் சமந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்த நயன்தாரா..! இதுல உள்குத்து இருக்குமோ..
முத்துவுக்கும் மீனாவுக்கும் பிரச்சனை நடக்கும் பொழுது ஏதாவது பேசுனியா இப்ப மட்டும் ஏன் குதிக்கிற என திட்டுகிறார். அடுத்த காட்சியில் மீனாவுக்கு மீனாவின் அம்மா கால் பண்ணி சத்தியா அந்த கந்து வட்டிக்காரன் இடம் வேலைக்கு போகிறான் என கூறுகிறார் நான் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை, நீ உடனடியாக வா எனக் கூற மீனா சென்று நீ வேலைக்கெல்லாம் போகக்கூடாது ஒழுங்கா படிக்கிற வேலைய பாரு என பேசுகிறார்.
அதற்கு சத்யா பணம் இல்லன்னா யாரும் மதிக்க மாட்டாங்க அடுத்தது சின்ன அக்காவுக்கு கல்யாணம் பண்ணனும் அதுக்கு கண்டிப்பா பணம் தேவை நான் மட்டும் சும்மா இருக்க முடியுமா? என்னால முடிஞ்சத நான் செய்றேன் எனக் கூற அதற்கு மீனா நீ படிச்சு முடிச்சிட்டு பெரிய வேலைக்கு போ அப்ப சம்பாரி ஆனா இவன்கிட்ட வேலைக்கு போகாத ஏற்கனவே இவனால தான் நம்ம குடும்பத்துல பிரச்சனை என கூறுகிறார்.
அதற்கு சத்யா சிட்டி இப்ப முன்னாடி மாறி கிடையாது பைனான்ஸ் கம்பெனி வைத்து நடத்துறன் அவன் கரெக்டா கணக்கு காட்டுறான் பணம் கொடுக்காதவங்க கிட்ட அப்பப்ப போய் வசூல் பண்ணுவோம் அவ்வளவுதான் மத்தவங்க எல்லாம் பிரச்சனை கிடையாது தேவை இல்லாம உங்க வீட்டுக்காரர் தான் சண்டை போட்டது என முத்துவை மரியாதை இல்லாமல் பேசுகிறார் சத்யா. இந்த நிலையில் அடுத்த காட்சியில் ரோகிணி மனோஜ் வேலையில்லாமல் ஹோட்டல் வேலைக்கு சென்றதை தன்னுடைய தோழி வித்தியாவிடம் கூறிக் கொண்டிருக்கிறார்.
அந்த சமயத்தில் ரோகினி இடம் பணம் வாங்குவதற்கு ஒருவன் வந்துள்ளான் அதற்கு அந்தப் பேய் வந்திருக்கு எனக் கூற உள்ளே வைத்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள் அவன் கல்யாணி உன் மேட்டர வீட்ல சொல்லிடுவேன் எனக்கு ஐம்பதாயிரம் பணம் வேணும் என கூறிக் கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் பார்லர் ஓனர் உள்ளே வர ஜென்ட்ஸ்க்கு இங்கு அலவுடு கிடையாது எதற்காக உள்ள வச்சு பேசுற என திட்டுகிறார்.
நைட் ரூம்க்கு வரியா பிரபல நடிகையை அழைத்த நடிகர்.! வெளிப்படையாக உண்மையை உடைத்த கிரண்…
உடனே ரோகினி சாரி கேட்டு வெளியே அனுப்பி விடுகிறார் இன்னும் இரண்டு நாட்களுக்குள் பணத்தை ரெடி பண்ணி சொல்லுகிறேன் என பேசி விடுகிறார். மற்றொரு பக்கம் முத்து செல்வம் அனைவரும் பேசிக் கொண்டிருக்க ஆட்டோவில் பெரிதாக வருமானம் கிடையாது அதனால் கொஞ்ச நாள் பாப்போம் வேற ஏதாவது வழி பிறக்கும் என பேசிக்கொண்டு இருக்க சத்யா மற்றும் சிட்டி இருவரும் வருகிறார்கள்.
அப்பொழுது என்ன வாங்குனது பத்தாதா இன்னும் வாங்க வந்திருக்கியா ஸ்பீடு வட்டி நீட்டு வட்டி எல்லாமே கொடுத்துடுவேன் என முத்து மிரட்ட உடனே அது தனி கணக்கு நான் அதை அப்புறம் தனியா டீல் பண்ணிக்கிறேன் இப்போ சத்யா உன்கிட்ட பேசணும் என கூறுகிறார் உடனே சத்தியா பையில் இருந்து பணத்தை எடுத்து முத்து பக்கத்தில் வைக்கிறார். அது என்ன பணம் என்று தெரியவில்லை ஒருவேளை திருடிய அந்த ஒரு லட்ச ரூபாயை திருப்பிக் கொடுக்கிறாரா என்பது நாளைய எபிசோட்டில் தெரியவரும்.