Siragadikka Aasai : இன்றைய எபிசோடில் ரோகிணி தன் மாமியார் விஜயாவிற்கு யோகாசனம் சொல்லிக் கொடுக்கிறார் அப்பொழுது அண்ணாமலை அங்கு வந்து என்ன விஜயா பண்ணிட்டு இருக்க என்று கேட்கிற ரோகிணி எனக்கு முதுகு வலி சரியாக எக்சசைஸ் சொல்லிக் கொடுக்குறா என்று சொல்கிறார்.
பிறகு அண்ணாமலை நான் யூனியன் ஆபீஸ் போயிட்டு வருகிறேன் என்று கிளம்புகிறார் அடுத்து மீனாவை விஜயா கூப்பிட்டு ஸ்ட்ராங்க டீ போட்டு எடுத்துட்டு வா என்று சொல்ல மீனாவும் டீ போட்டு எடுத்துட்டு வராங்க, விஜயா அந்த டீயை குடித்துவிட்டு என்ன டீ கசப்பா இருக்கு என்று மீனா மேல் ஊற்றி விட்டார்.
அதற்கு மீனா டீ நல்லா இல்லை என்றால் என் கையில் கொடுத்திருக்கலாமே ஏன் வேஸ்ட் பண்றீங்க என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் அப்போது ரவி அங்கு வந்து அம்மா நீ பண்றதெல்லாம் ரொம்ப ஓவரு, அண்ணி மேல ஏன் டீய ஊத்துன முத்துக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா என்று சொல்கிறார்.
பிறகு ரவி வேலை பார்க்கும் ரெஸ்டாரண்டில் புதிதாக ஒரு கேக் செய்திருக்கிறார். அதை சாப்பிட்டு பார்ப்பதற்காக ஸ்ருதியை வர சொல்லி இருக்கிறார் ஸ்ருதியும் வந்து கேக் சாப்பிட்டுவிட்டு சூப்பரா இருக்கு, நம்ம ரெண்டு பேரும் பார்ட்னர் ஆகி ஒரு ரெஸ்டாரன்ட் ஓப்பன் பண்ணலாமா என கேட்கிறார்.
ரெஸ்டாரன்ட் ஓபன் பண்றது எல்லாம் சின்ன விஷயமா அதுக்கு எல்லாம் நிறைய காசு தேவை அப்புறம் பாத்துக்கலாம் என சொல்கிறார். பிறகு சுருதி இடம் ரவி முத்து மற்றும் மீனா பிரச்சினையை பற்றி சொல்கிறார் அதற்கு சுருதி அவங்கள சமாதானப்படுத்த உன் ரெஸ்டாரண்ட்டிலே ரெண்டு அண்ணன் அண்ணிகளையும் கூப்பிட்டு ஒரு பார்ட்டி வை என சொல்கிறார்.
இதற்கு ரவியும் நல்ல ஐடியா தான் நான் செய்றேன் என்று சொல்கிறார். அடுத்து ரவி முத்துவை பார்க்க செல்கிறார். அங்கு முத்து நான் இவ்ளோ கடன்ல இருக்கிறதுக்கு காரணமே உங்க அண்ணி மீனாதான் என சொல்வதற்கு அண்ணி உங்களுக்கு நல்லது தான் பண்ணாங்க அண்ணிய தேவை இல்லாம குறை சொல்லாதீங்க என மீனாவை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.