Siragadikka Aasai : இன்றைய எபிசோடில் சுதாகர் வந்ததை நினைத்து மீனாவின் அம்மா நல்லவேளை மாப்பிள்ளை இங்க இருந்தாரு இல்லன்னா என்ன நடந்திருக்குமோ என்று சொல்கிறார். அடுத்த நாள் காலையில் அண்ணாமலை வாக்கிங் சென்றுள்ளார் அங்கு வாசுதேவனும் அவரது மனைவியும் அண்ணாமலையை பார்க்க வருகின்றனர்.
வாசுதேவன் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என்று உன் பையன் என் பொண்ணு கூட பேசிகிட்டு இருக்கான். என்ன பழி வாங்கறதுக்காக நீ தான் உன் பையன அனுப்பி வச்சிருக்கியா உன் பையன கண்டிச்சி வச்சுக்கோ என்று சொல்கிறார். அதற்கு அண்ணாமலை முதல்ல உன் பொண்ணு கிட்ட சொல்லிவை என்று பதிலுக்கு சொல்கிறார்.
பிறகு அண்ணாமலை ரவியிடம் உன் வேலை எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு என்று கேட்டுவிட்டு உனக்கு தெரியும் இல்ல வாசுதேவன் என் பென்ஷன் பணத்தை நிறுத்தி வைத்துக்கொண்டு எவ்வளவு பிரச்சனை பண்ணார், எல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கு இல்ல அவரோட பொண்ண உனக்கு தெரியுமா என்று கேட்கிறார்.
ரவி தெரியும் பிரின்ட் தான் அப்பா என்று சொல்ல பார்த்து நடந்துக்கோ அவங்க சவகாசம் நமக்கு தேவை இல்லை என்று எச்சரிக்கிறார். பிறகு வீட்டிற்கு முத்து வருகிறார். உடனே விஜயா அந்த பூ கட்டுறவன் நமக்கு பயந்து முத்துவை அனுப்பி வச்சிட்டா என்று நினைக்கிறார்.
ஆனால் கூடவே மீனாவும் வருவதை பார்த்து ஷாக் ஆகி ஆடி மாசம் இன்னும் முடியல அதுக்குள்ள ஏன் வந்த என்று கேட்கிறார். அதற்கு முத்து என் பொண்டாட்ய நான் கூப்பிட்டு வந்தேன் உனக்கு என்னமா என சொல்கிறார். அண்ணாமலையும் மனோஜ் ரோகினி இங்க தான இருக்காங்க அவங்கள மாதிரி இவங்களும் இருந்திருப்பாங்க விடு என சொல்கிறார்.
பிறகு மீனா முத்து கிட்ட என்ன எதுக்கு கூப்பிட்டு வந்தீங்க என்று கேட்க அந்த சுதாகரை நான் அடிச்சிட்டேன்ல எப்படியும் திரும்ப வருவான் அதனால தான் உன்ன இங்க கூட்டிட்டு வந்தேன் என்று சொல்கிறார். பிறகு மளிகை சாமான் டெலிவரி வந்திருக்கு பில் 7000துக்கு மேல வருவதால் எப்பவும் இவ்வளவு அதிகமா வராதே இப்ப என்ன இவ்வளவு பில் வருது என்னென்ன வாங்கி இருக்காங்கன்னு பார்க்கலாம் என எல்லாத்தையும் முத்து செக் பண்ணுகிறார்.
அதில் ஆலிவ் ஆயில், பாதாம், பிஸ்தா, முந்திரி இந்த மாதிரி எல்லாம் இருக்கு உடனே இதெல்லாம் எதுக்கு என்று கேட்க ரோகிணி தான் வாங்க சொன்னா என்று சொல்வதும் முத்து மனோஜ் ரூம் கதவைத் தட்டி இரண்டு பேரையும் வெளிய கூப்பிட்டு இதெல்லாம் எதுக்கு என சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.