TRP யில் அடிச்சு தூக்க புதிய நடிகரை இறக்கிய சிறகடிக்க ஆசை சீரியல் குழு.! ஆஹா இனிமே காமெடிக்கு பஞ்சமே இருக்காதே..

siragadikka aasai new actor join
siragadikka aasai new actor join

siragadikka aasai : சின்னத்திரையில் சீரியலுக்கு பஞ்சமே இருக்காது அந்த வகையில் டிஆர்பி யில் ஒவ்வொரு தொலைக்காட்சியும் போட்டி போட்டுக்கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். இந்த நிலையில் சன் தொலைக்காட்சிக்கும் விஜய் தொலைக்காட்சிக்கும் எப்பொழுதும் போட்டி நிலவி வருகிறது.

சன் தொலைக்காட்சியை முந்துவதற்கு விஜய் தொலைக்காட்சி எத்தனையோ முறை முயற்சி செய்து வருகிறது. இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் மக்களின் மனம் கவர்ந்த சீரியலாக  பார்க்கப்படும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் டக்கரான ஜோடி என பலரால் பார்த்து ரசிக்கப்படுவது முத்து மற்றும் மீனா என்ற ஜோடி தான்.

26 வயது நடிகையுடன் ரொமான்ஸ் செய்ய சொல்றாங்க வேதனையை பகிர்ந்த ரஜினி.! வைரலாகும் வீடியோ

இந்த ஜோடி தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது இந்த நிலையில் இந்த சீரியல் குடும்ப கதை தான் அழகிய குடும்பம் விறுவிறுப்பான கதைகளும் ஒரே விஷயத்தை இழுக்காமல் அடுத்தடுத்து புதிய திருப்பங்களுடன் இருப்பது கூட்டு குடும்பம் என்பது எவ்வளவு கஷ்டம் அதில் உள்ள சந்தோஷம் என அனைத்தையும் ரசிகர்களுக்கு புரிய வைத்து வருகிறார்கள்.

அப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது பொங்கல் ஸ்பெஷல் எபிசோட் வர இருக்கிறது அதனால் சீரியல் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகிறது இந்த தொடரில் தனது அப்பா ஒரு பெரிய பணக்காரன் என ரோகிணி குடும்பத்தில் பொய் சொல்லி வைத்துள்ளார். அதனால் உங்க அப்பாவை பொங்கல் வரிசை வைக்க வர சொல்லு என விஜயா கூற ரோகிணி முழிக்கிறார். ஆனால் இப்போதைக்கு எங்க அப்பா வர முடியாது எங்க மாமாவை வேணால் வர சொல்லுகிறேன் என கூறுகிறார்.

எதிரிக்கு எதிரி நண்பன்.. தமிழைப் பழிவாங்க மேகனாவுடன் இணைந்த அர்ஜுன்..! நமச்சியை கழுத்தை பிடித்து தள்ளிய தமிழ்

எப்படியாவது பொங்கல் வரிசையை வைத்து இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என ரோகிணி கந்துவட்டி காரனிடம் கடன் வாங்கி ஒரு ஆளை செட்டப் பண்ணி மாமா போல் நடிக்க வைத்துள்ளார் அந்த நபர் நடிகர் ஜெயமணி தான் இவர் திருமதி செல்வம் தொடரில் பூங்காவனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியவர். தற்போது இந்த தொடரில் என்ட்ரி கொடுத்துள்ளார். இனிமேல் காமெடிக்கு பஞ்சமே இருக்காது என பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.