siragadikka aasai serial january 26 : சிறகடிக்க ஆசை சீரியலில் பொங்கல் பண்டிகையை கொண்டாடி முடித்துவிட்டு அனைவரும் வெளியே கட்டில் போட்டு இயற்கை காற்று வாங்கி கொண்டு இருக்கிறார்கள். அப்பொழுது மீனா வெத்தலையை எடுத்துக் கொண்டு வருகிறார் உடனே பாட்டி அதனை ரோகினி இடம் கொடுத்து அனைவருக்கும் கொடு என கூறுகிறார்.
அப்படியே வெத்தலையை மடிச்சு மலேசியா மாமா வாயில் போடும்போது அனைவரும் பார்க்கிறார்கள் இவர் மலேசியாவில் இருந்து வந்தவர் போல தெரியவில்லை என முத்து வெத்தலையை நல்லா போடுறீங்க போல என பேசுகிறார். அது மட்டும் இல்லாமல் கும்பகோணம் வெத்தலை அங்கேயும் பேமஸ் என சொல்லி சமாளிக்கிறார் அடுத்த காட்சியில் மனோஜை பார்த்து அப்புறம் மாப்பிள்ளை வேலை எல்லாம் எப்படி போகுது என கேட்கிறார்.
அதற்கு முத்து வேலை தேடுறது எப்படி போகுது என்ன கேளுங்க என கூறுகிறார் உடனே விஜயா அவன் படிச்ச படிப்புக்கு சரியான வேலை கிடைக்க மாட்டேங்குது அதனால ஒரு பிடிப்பு இருந்தால் அவன் முன்னுக்கு வந்துருவான் பிசினஸ் பண்ணுனா முன்னுக்கு வந்துருவான் என பேசுகிறார் உடனே மனோஜ் எழுந்து வந்து எனக்குன்னு ஒரு பிசினஸ் இருந்தா நல்லா இருக்கும் நான் அதை ரெண்டே வருஷத்துல நல்லா டெவலப் பண்ணிடுவேன் எனக் பேசுகிறார்.
மறைந்த பவதாரணி பாடிய பாடல்களில் இன்று வரை மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் அழியாத பாடல்கள்.!
இப்படியே பேசிக் கொண்டிருக்கும் பொழுது ரோகினி ஓட அப்பா ஏன் வரலை என கேட்க அதற்கு ஒரு கதை கூறுகிறார் மலேசியா மாமா அதாவது ரோகினி அம்மா கேன்சரால் ரத்த ரத்தமாக வாந்தி எடுத்து இறந்து விட்டார் அதனால் ரோகிணியின் அப்பா ஒரு இளம் வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்த கோபம் தான் ரோகிணிக்கு என பேசுகிறார் அதற்கு அதில் என்ன தப்பு இருக்கு சம்மந்தி என விஜயா பேச உடனே விஜயாவுக்கு புரியிற மாதிரி நீங்க திடீர்னு செத்துப் போயிட்டா சம்மந்தி இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டா உங்க பசங்க ஏத்துப்பாங்களா என பேசுகிறார்.
அந்த சமயத்தில் ரோகினிக்கு போன் வருகிறது அவங்க அம்மா பேசுகிறார். உடனே அவங்க அம்மாவிடம் நான் அப்புறம் பேசுகிறேன் என சொல்லிவிட்டு போகிறார் அப்பொழுது கோபப்பட்டு எங்க அம்மா இன்னும் சாகல என பேசுகிறார் இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள் பிறகு ரோகிணி, இல்ல எங்க அம்மா இன்னும் என் கூடவே இருக்கிற மாதிரி இருக்கு என பேசுகிறார்.
அடுத்த காட்சியில் உள்ளே உட்கார்ந்து அனைவரும் கரும்பு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது மீனா நமக்கு புடிச்சவங்க நம்மள விட்டு போயிட்டா ரொம்ப கஷ்டமா தான் இருக்கும் அது எனக்கும் தெரியும் அதனால தான் மாமாவை நான் அப்பாவா நினைச்சுக்கிட்டேன் என பேசுகிறார் அதற்கு ரோகிணியிடம் விஜயா நானும் உனக்கு அம்மா மாதிரி நீ ஏன் என்னை மாமியாரா பாக்குற அம்மாவா பாரு என பேசுகிறார் உடனே பாட்டி மூணு மருமகள் இருக்கிறார்கள் அவர்களுக்கு நீ அம்மாவா இருக்கணும் அப்பதான் சந்தோஷம் என்ன பேச.
இளையராஜாவின் அன்பு மகள் பவா தாரணி உடல் நலக்குறைவால் திடீர் மரணம்.! அதிர்ச்சியில் திரை உலகினர்..
சுருதியிடம் உனக்கும் நான் அம்மா மாதிரி தான் என பேச உடனே மீனா ஒருத்தி இருக்கா என கூறுகிறார் அப்பொழுது அவருக்கு தான் அம்மா இருக்கிறாரே என விஜயா கூற உடனே சுருதி எனக்கும் அம்மா இருக்காங்க ஒரு அம்மாவே போதும் நீங்க ஆண்டியாவே இருங்க ஒரு அம்மா கிட்டயே என்னால திட்டு வாங்க முடியல என பேசுகிறார்.
அதற்குள் மலேசியா மாமா பேச்சு கேட்க அவர் கரும்பு கடிப்பதற்கு ஒரு எக்ஸ்பிளநேஷன் கொடுக்கிறார் கரும்பையே உன்னால கடிக்க முடியே மாப்பிள நல்லி எலும்பு எப்படி கடிப்ப என பேசுகிறார். மாமாவை போய் ரெஸ்ட் எடுங்க என கூற இல்ல நான் ஏற்கனவே தூங்கி எழுந்துட்டேன் நான் ஊரை சுத்தி பார்க்க போறேன் என பேசுகிறார் அதற்கு முத்து வாங்க நான் ஊரை சுத்தி காமிக்கிறேன் என அழைத்து செல்கிறார்.
ஆனால் அவருடன் மனோஜை அனுப்பி வைக்கிறார் ரோகிணி வெளியே சென்ற மாமா ஏதேதோ உளற உடனே முத்துவின் நண்பன் சரக்குக்கு கேளு எனக்கு கூறுகிறார் அதற்கு முத்துவும் மலேசியா மாமா வந்திருக்கார் என்று சொன்னது உங்கள பாக்க ஓடோடி வந்துட்டான் என பேசுகிறார் உடனே சுத்தி சுத்தி நல்லா பாத்துக்கோ நான்தான் என மலேசியா மாமா கூறுகிறார் இதனால் அனைவரும் சிரிக்கிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.