siragadikka aasai : காய்கறி வாங்கி நறுக்குவதற்காக வைத்துள்ளார்கள் அதை பார்த்த பாட்டி எல்லாம் ரெடி என விஜயாவிடம் கூற உடனே மீனாவை அழைத்து எல்லாத்தையும் நறுக்கி சீக்கிரம் சமைச்சிடு எனக் கூறுகிறார் அதற்கு பாட்டி எதுக்கு அவர் செய்யணும் என கேட்க அத்தை எங்க வீட்ல அவ தான் சமைப்பா எனக் கூற அவ என்ன உன் வீட்டு வேலைக்காரிய மீனவ சமைக்க சொல்ற என பாட்டி எதிர்த்து கேள்வி கேட்கிறார்.
அதுல அத்தை அவதான மருமக அவதான சமைப்பா என பேச ஓ நீ அப்படியே வரியா அப்போ அந்த வீட்ல உனக்கு மருமக அவ இந்த வீட்ல எனக்கு மருமக நீ தானே நீயே சமையல் எல்லாத்தையும் முடிச்சிட்டு என ஒரேடியாக கூறுகிறார் அப்பொழுது நான் மட்டும் எப்படி சமைக்கிறது என கேட்க அதன் இன்னும் ரெண்டு மருமகள் இருக்கா இல்ல அவளை கூப்பிட்டு சமைக்க சொல்லு எனக் கூற அத்தை அவங்க ரெண்டு பேரும் பெரிய இடத்து ஆளுங்க எனக்கூற என்ன ரெண்டு ஏக்கர் இருக்குமோ அவங்களுக்கு என்ன கோம்பா முளைச்சிருக்கு கூப்பிட்டு வைத்து சமைச்சிடு என பாட்டி கூறி விடுகிறார்.
உடனே ரோகினியை சாம்பார் வைக்க மிளகாய் அரைக்க சொல்கிறார் அதேபோல் ஸ்ருதியை காய்கறியை நறுக்க சொல்கிறார் காய் நறுக்கும் பொழுது கையை நறுக்கி கொள்கிறார் ஸ்ருதி அதேபோல் கை நறுக்கிக் கொண்டதும் அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் பொழுது பாட்டி வந்து சுண்ணாம்பை வைத்து இன்னும் எரிய வைத்து விடுகிறார்.
ஆனால் ரோகிணி பழக்கப்பட்டது போல் அம்மியில் மசாலா அரைக்க இது எப்படி உனக்கு தெரியும் என்பது போல் கேட்க நான் ஒரு வேலையை பார்த்தால் அது அப்படியே கச்சிதமா செய்து விடுவேன் என சமாளித்து விடுகிறார். அடுத்த காட்சியில் சமைக்க போகும் விஜயா எண்ணெய் ஊற்றுகிறார் உடனே கடுகை போடு என ஸ்ருதியிடம் கூற மொத்த கடுகையும் கொட்டி விடுகிறார்.
அதே போல் ஆனியன் போடு என்றவுடன் முழு ஆணியனையும் எடுத்துப் போடுகிறார் இப்படியே செய்து கொண்டிருப்பதால் கேரட்டை கொடுத்த இதை சாப்பிட்டு கொண்டு ஓரமாய் வேடிக்கை மட்டும் பார் என கூறிவிட்டு அனைத்தையும் சமைக்கிறார். சமைத்து முடித்தவுடன் வெளியே எடுத்துக் கொண்டு வருகிறார்.
கசக்கி பிழிந்து தூக்கி எறிந்த நடிகர்.. ஆள விடுங்கப்பா என்னால முடியல சினிமாவை விட்டு ஓடிய நடிகைகள்.
அனைவரும் சாப்பிட உட்கார்கிறார்கள் அப்பொழுது மீனாவும் சாப்பிட உட்காரும்போது நீ ஒன்னு எடுத்து வைக்க வேண்டாம் நாங்க சாப்பிட்டதுக்கு அப்புறம் தான் மீனா சாப்பிடுவா என விஜயா பாட்டியிடம் கூற ஓ அப்போ மீனா தான் முதல்ல உட்கார்ந்து சாப்பிடணும் என பாட்டி கண்டிஷன் போடுகிறார் இதனால் விஜயாவின் முகம் வாடுகிறது.
அதேபோல் முத்து சாப்பாடு தீர்ந்து விட்டது எனக் கூற கேட்கிறார் இப்படியே விஜயாவை பழிக்கு பழி பாட்டி வாங்கிக் கொண்டிருக்கிறார் உடனே சுருதி சாப்பாட்டில் கைவைக்கும் பொழுது வெட்டி கொண்ட கை எரிகிறது அதனால் ஸ்பூனால் சாப்பிடுகிறேன் என கூற விஜயா நானே ஊட்டி விடுகிறேன் என ஊட்டி விடுகிறார்.
இதனை பார்த்த முத்து சும்மா ஊட்டி விடுறாங்க 11 தட்டு அதனால் தான் ஊட்டி விடுறாங்க நாளைக்கு 101 தட்டு மலேசியாவில் இருந்து வந்த இந்த ஊட்டி விடுவது பார்லர் அம்மாவுக்கு திரும்பிவிடும் என முத்து கிண்டல் அடிக்கிறார்.
இதனை பார்த்துக் கொண்டிருந்த பாட்டி அடுத்த பிளான் போடுகிறார் உடனே ஸ்ருதிக்கு பக்கத்தில் மீனாவை உட்கார சொல்கிறார் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள் இத்துடன் எபிசோட் முடிகிறது.