கண்ணீர் விட்டு அழுத முத்து.! சத்யா பேச்சை கேட்டு கிட்டு தவறான முடிவெடுத்த மீனா.. அதிரடி திருப்பங்களுடன் சிறகடிக்க ஆசை..

siragadikka aasai february 16
siragadikka aasai february 16

siragadikka aasai : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா சத்யாவை பார்த்து ஹாஸ்பிட்டலில் பேசிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது சத்யா மரியாதை இல்லாமல் முத்துவை அசிங்க அசிங்கமாக பேச முத்து கோபத்துடன் வெளியே செல்கிறார். முத்து சென்றவுடன் சாத்தியா சிட்டிக்கு கால் செய்து  ஹாஸ்பிடலுக்கு மாமா வந்தார் எனக் கூற ஏதாவது பிரச்சனையா சொல்லு ஆளுங்கள வச்சு தட்டி விடுறேன் என பேச அதெல்லாம் ஒன்னும் இல்ல நான் சிக்கி கிட்டோம்  என பேசுகிறார். பணம் அடிச்சது cctv ல பார்துடான்ங்க.

அப்பொழுது சிட்டி வீட்ல சொல்லிட்டாங்களா என கேட்க அதெல்லாம் ஒன்னும் சொல்லல அப்புறம் இனிமே சொல்ல மாட்டான் விட்ரு என பேசுகிறார்கள். அடுத்த காட்சியில் முத்து கார் செட்டுக்கு வந்து தன்னுடைய நண்பரிடம் புலம்பி கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் தண்ணி அடித்து விட்டு யாருக்காகவும் நம்ம பரிதாப படக்கூடாது யார் மேலயும் பாசம் வைக்க கூடாது பாசம் வச்சா இப்படித்தான் நடக்கும் என முத்து தன்னுடைய நண்பரிடம் புலம்புகிறார்.

டேய் அர்ஜுன் உண்மை என்னைக்கும் ஜெயிக்கும்டா வசமா மாட்டிக்கிட்டியா.. ஆதாரத்துடன் நிரூபித்த தமிழ்.. விழி பிதுங்கி நிற்கும் கலிவரதன் .

அழுது கொண்டே முத்து பேசுவதால் அவருடைய நண்பர் ஆறுதல் கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் அந்த சின்ன பய என்ன அந்த கேள்வி கேட்கிறான் கார் டிரைவர் தானே நீ என்ன பெருசா சம்பாதிக்க போற என அசிங்க அசிங்கமாக பேசினான் என அழுது கொண்டே சொல்கிறார். அடுத்த காட்சியில் சத்யா ஆப்ரேஷன் காக முப்பதாயிரம் கட்ட சொல்கிறார்கள் அதற்காக அனைவரும் பணத்திற்காக போன் பண்ணி பார்க்கிறார்கள் அப்பொழுது டாக்டரிடம் பேசிப் பாருங்கள் என ஒருவர் கூற உடனே டாக்டர் இடம் மீனா பேசப் போகிறார்.

இந்த சத்தியா காலேஜ் ஸ்டுடென்ட் தானே அவன் ஒழுங்கா காலேஜ் போறானா படிக்கிறானா ஆனா பைக்ல இருந்து விழல அவன் எங்கேயும் அடிதடிக்கு போயிருக்கான் கையை போட்டு முறுக்கி இருக்காங்க என பேசுகிறார் டாக்டர் உடனே மீனா அதிர்ச்சியடைந்து என்ன சொல்றீங்க என கேட்க ஆமா அவன ஒழுங்கா கவனிச்சுக்கோங்க என பேசுகிறார்.

ஆள விடுங்கடா சாமி என கட்டின பொண்டாட்டியை விவாகரத்து செய்த 5 நடிகைகள்…

உடனே சத்யா வந்ததும் அவரிடம் எப்படிடா கீழே விழுந்த என மீனா விசாரிக்கிறார் உடனே மீனா விடம் என் கைய புடிச்சு முறுக்கிட்டாங்க என  பேசுகிறார் சத்யா அதுமட்டுமில்லாமல் மாமா தான் குடி போதையில்  இது  மாதிரி செய்துவிட்டார் எனக் கூற மீனாவுக்கு கோவம் வந்து முத்துவிடம் கேள்வி கேட்கிறார் என்ன நடந்தது என்று தெரியாமல் மீனா முத்துவை கேள்வி கேட்பதால் உண்மை வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.