சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா முதல் கிளாஸில் பாஸ் பண்ணிவிட்டார் டிகிரி முடித்துவிட்டார் என மீனாவிடம் கூறுகிறார் இதனால் மீனா சந்தோஷப்படுகிறார் கண் கலங்குகிறார், அப்பொழுது முத்து அங்கு வந்து போனை வாங்கி பேசுகிறார் முத்துவுக்கும் விஷயம் தெரிய மிகவும் சந்தோஷப்படுகிறார் நீ என்ன வேணாலும் படி நானே படிக்க வைக்கிறேன் என உற்சாகத்துடன் கூறுகிறார்.
மேலும் நன் உடனே கிளம்பி சீதாவை பார்க்க போகலாம் என முத்து கூற வீட்டில் உள்ளவர்களிடம் விஷயத்தை கூறிவிட்டு செல்லலாம் என பேசுகிறார் அப்பொழுது அண்ணாமலை இடம் மீனா சந்தோஷத்துடன் என்னுடைய தங்கை டிகிரி முடித்து விட்டார் என கூறுகிறார் இந்த பெருமைக்கு முக்கிய காரணமே நீதான் நீ விட்டுக் கொடுத்ததால் தான் அவர்களால் படிக்க முடிந்தது என பெருமையாக பேசுகிறார் அண்ணாமலை.
உன் தியாகத்தால் தான் உன் தங்கையும் தம்பியும் படிக்கிறார்கள் என பேசுகிறார். அப்பொழுது விஜயா வர விஜயாவிடம் சீதா டிகிரி முடித்துவிட்டார் என கூறுகிறார் இதனால் விஜயா அதற்கு என்ன இப்ப என பேசுகிறார். இப்ப டிகிரி வாங்குவதெல்லாம் ஒரு கஷ்டமா என ஏலக்கனமாக பேசுகிறார் அதாவது எல்லாம் இருக்கிறவங்க ஈஸியா வாங்கிடலாம் எதுவுமே இல்லாம ஒரு பென்சில் வாங்க கூட ரெண்டு மூணு நாள் ஆகும் அப்படி ஒரு சிச்சுவேஷன்ல இருந்து படிச்சு டிகிரி வாங்கி இருக்கா சீதா என அண்ணாமலை பேசுகிறார்.
அந்த சமயத்தில் மனோஜ் ரோகிணி வர என்ன எல்லாரும் பேசிகிட்டு இருக்கீங்க என கேட்கிறார் அதற்கு சீத்தா டிகிரி வாங்கிவிட்டார் என கூற ரோகினியும் வாழ்த்துக்கள் என கூறுகிறார் ஆனால் மனோஜ் டிகிரி வாங்குவது எல்லாம் ஒரு மேட்டரா ரெண்டு மூணு டிகிரி வாங்கி இருக்கேன் என்ன விட்டால் இன்னும் நாலஞ்சு டிகிரி கூட வாங்கிடுவேன் என பேசுகிறார் நீ டிகிரி வாங்குவதற்கு பின்னாடி அப்பாவோட உழைப்பு இருக்கிறது என முத்து குத்தி காட்டுகிறார்.
அப்பா அவ்வளவு கஷ்டப்பட்டதால தான் நீ இன்னைக்கு ஜாலியா இருக்க இல்லன்னா எவ்வளவு கஷ்டப்படனும் என்று தெரியுமா என பேசுகிறார் அதே போல் அடுத்ததாக ஸ்ருதி வர டிகிரி வாங்கிய சீதாவை பாராட்டுகிறார் அப்பொழுது விஜயா மீண்டும் சீதாவை பற்றி மோசமாக பேச அதற்கு ஸ்ருதி ஒரு புவர் பேமிலியில் இருந்து வேலையும் செஞ்சுகிட்டு அம்மாவுக்கு ஹெல்ப் ஃபுல்லா இருந்துகிட்டு பார்ட் டைம் ஜாப் பாத்துகிட்டு படிச்சிருக்கானா அதை நம்ம பாராட்டணும் நீங்க டிகிரி வாங்கி இருந்தா தானே அதோட அருமை தெரியும் என விஜயா முகத்தில் அடித்தது போல் பேசுகிறார்.
பிறகு சுருதி ரவியிடம் நீ இன்னைக்கு பிரியாணி போட்டு விடு சீதாவுக்கு நம்ம ட்ரீட் வைக்கலாம் என கூறிவிடுகிறார் ரவியும் ஓகே எனக் கூறுகிறார் அடுத்த காட்சியில் ரோகினி மற்றும் மனோஜ் அவர்களுடைய கடையில் இருக்கும் பொழுது வெளியில் சாப்பிட்டது மட்டும் 30 ஆயிரம் ரூபாய் பில் வருகிறது அதனை பார்த்த ரோகினி இப்படி சாப்பிட்டினா எப்படி வீட்டுக்கு ஐம்பதாயிரம் கொடுக்க முடியும் என கேள்வி எழுப்புகிறார்.
அதெல்லாம் பணம் தானாக வரும் என பேசிக்கொண்டிருக்கும் பொழுது கிரெடிட் கார்ட் உங்களுக்கு வந்துள்ளது என கிரெடிட் கார்டு டிபார்ட்மெண்டில் இருந்து ஒருவர் வந்து கூறுகிறார்கள் அப்பொழுது 10 லட்சம் லிமிட் எனவும் சொல்லுகிறார்கள் இதனால் மனோஜ் சந்தோஷப்படுகிறார் அதே போல் ரோகிணியும் சந்தோஷப்படுகிறார்.
அடுத்த காட்சியில் மீனாவின் அம்மா கோவிலில் இருப்பதாக மீனா விடம்கூற முத்து மற்றும் மீனா இருவரும் கோவிலுக்கு செல்கிறார்கள் அப்பொழுது சீதாவை போட்டோ எடுத்துக் கொண்டிருக்கிறார் சத்தியா அப்பொழுது அனைவரும் ஒன்றாக நின்று போட்டோ எடுத்துக் கொள்கிறார்கள் சீதாவை பார்த்து நீ படிக்கணும் என்றால் இன்னும் படி நான் படிக்க வைக்கிறேன் என முத்து கூறுகிறார்.
உன்ன மாதிரி நேர்மையா படிச்சு யாரால் டிகிரி வாங்க முடியும் சில பேரு உதவாக்கரை சுத்திக்கிட்டு இருக்காங்க என சத்யாவை குத்தி காட்டுகிறார் முத்து மேலும் முத்து மீனா சத்யா சீதா என அனைவரும் ஃபோட்டோ எடுத்துக் கொள்கிறார்கள் பிரகு சீதா தன்னுடைய இந்த நிலைமைக்கு காரணம் மீனாதான் என கண்ணீர் விட்டு அழுகிறார். இத்துடன் எபிசோட் முடிகிறது.