சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து ஒரு சவாரி கிடைத்துள்ளது என காரில் அழைத்துச் சென்றுள்ளார். அப்பொழுது காரில் ஒரு நபர் கல்யாணத்தைப் பற்றி கேட்டுக் கொண்டிருக்க முத்து ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் இடையில் பேய் மாதிரி இருப்பாங்க மகாலட்சுமி மாதிரியே இருப்பாங்க என மீனாவைப் பற்றி கூறுகிறார்.
இந்த நிலையில் மீனா வேகமாக பைக்கில் வந்து காரில் மோதி விடுகிறார் உடனே முத்துமீனா இருவரும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். அந்த வழியாக வந்த போலீஸ் மீனாவுக்கு சப்போர்ட் செய்வது போல் பேசிவிட்டு கார் காரரிடம் அதாவது முத்தவிடம் பைன் கட்டு என கூறுகிறார் எதற்காக அவர் பைன் கட்ட வேண்டும் என மீனா போலீசில் கேள்வி கேட்கிறார்.
அதற்கு போலீஸ் உனக்காக தானே பேசுகிறேன் எனக் கூற அதெல்லாம் ஒன்னும் பேச வேணாம் என இருவரும் பேசுகிறார்கள் உடனே முத்து அவ என் ஒய்ஃப் தாங்க விட்டுடுங்க என பேசுகிறார் என்னது என போலீஸ் அதிர்ச்சடைகிறார் உடனே காரில் வந்த நபர் இந்த பேய் மாதிரி பிசாசு மாதிரி என்று சொன்னிங்களே அது இதுதானா என கேட்கிறார் உடனே மீனா முத்துவிடம் சண்டை போடுகிறார்.
மற்றொரு காட்சியில் வீட்டுக்கு வந்த மீனா வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது ஒரு நபர் முதலாளி அம்மா முதலாளி அம்மா என கூப்பிடுகிறான் அதற்கு விஜயா நான் தான் இங்க முதலாளி நீ யாரை கேட்கிற எனக் கேட்க பூ கட்டுவாங்களே அவங்கள பத்தி தான் எனக் கூறுகிறார் உடனே விஜயா முகம் மாறுகிறது. மேலும் கொசுவலை அடிக்க வந்தவர் இன்னும் முதலாளி அம்மா முதலாளி அம்மா என கூறிக்கொண்டே கொசு வலை அடிக்கிறார்.
உடனே வெளியே வந்த அந்த நபரிடம் முத்து விசாரிக்கிறார் நான் சொன்னது போல் செய்தாயா என கேட்க அப்படியே செய்தேன் எனவும் கூறுகிறார் அது மட்டும் இல்லாமல் கோபம் தணிந்ததா என கேட்கிறார் அது தெரியவில்லை ஆனால் உங்கள் மேல் அவங்க கோவமா தான் இருக்கிறார்கள் எனக் கூறுகிறார். மற்றொரு பக்கம் ரோகினி தன்னுடைய அம்மாவை பார்க்க ஹாஸ்பிடல் சென்றுள்ளார் அப்பொழுது அங்கு பேசிக் கொண்டிருக்கும் பொழுது எதர்ச்சியாக மனோஜ் கால் பண்ணுகிறார்.
நம்ம ஷோரூமில் இன்னைக்கு நல்ல சேல்ஸ் நல்ல வருமானம் என கூறுகிறார் உடனே ரோகினி சந்தோஷப்படுவது போல் செய்கிறார். அதுமட்டுமில்லாமல் எங்கு இருக்கிறாய் எப்பொழுது வருவாய் என கேட்க வித்யா ஒரு வேலையாக வரச் சொன்னால் என்று கூறுகிறார். அந்த சமயத்தில் விஜயா ரோகிணியை தேடிக் கொண்டு ஷோரூம்வருகிறார் உடனே மனோஜ் மறுபடியும் ரோகினி இடம் நீ எங்கே இருக்கிறாய் என கேட்க வித்யாவுடன் இருக்கிறேன் எனக் கூறுகிறார். உடனே மனோஜ்க்கு சந்தேகம் வருகிறது.
அப்பொழுது ரோகினிடம் பேசிக் கொண்டிருந்த வித்யா நீ ஏண்டி அப்படி சொன்னா உன் ஷோரூம் ல தான் நான் இருக்கிறேன் எனக்கு கூறுகிறார் உடனே நைசாக எஸ்கேப்பாக பார்க்கிறார் உடனே ரோகினி எங்கே உன்னோடுதான் இருக்கிறேன் என கூறினார் என கூறுகிறார் மனோஜ் இதனால் வித்யா முழித்துக் கொண்டு எனக்கு ஆபீஸ்ல இருந்து ஒரு கால் வந்துவிட்டது நான் கிளம்புகிறேன் என சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
இப்படி ரோகிணி வசமாக சிக்கிக்கொண்டார் மற்றொரு பக்கம் அல்வா வாங்கி கொடுத்து மீனாவை முத்து கரெக்ட் செய்கிறார் ஏனென்றால் மீனாவை பேய் மாதிரி என முத்து கூறியதால் அவர் கோவத்தில் இருந்தார் அதனால் இப்பொழுது சமாதானம் செய்து கொண்டிருக்கிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது.