அடித்துக் கொள்ளும் மீனா சுருதி.. சந்தோஷத்தில்குதிக்கும் விஜயா.. சிறகடிக்க ஆசை

siragadikka aasai september 3
siragadikka aasai september 3

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா ஸ்ருதியின் அம்மாவிடம் ஸ்ருதி எனக்கு மரியாதை கொடுப்பதே கிடையாது அந்த மீனாவுடன் சேர்ந்துக்கிட்டு என்னை ஒரு மாதிரி பேசுகிறாள் என வத்தி வைக்கிறார் அதனால் ஸ்ருதியின் அம்மா மீனாவிடம் சென்று என் மகள் வாழ்க்கையில் விளையாடாத அவ்வள வாழ விடு என திட்டி விடுகிறார். இதனால் மீனாவுக்கு கோவம் வருகிறது. மீனாவும் பதிலுக்கு பேசுகிறார்.

அந்த சமயத்தில் முத்து வருகிறார் சுருதியின் அம்மா உன்னை எதுக்கு பார்க்க வந்தார்கள் என கேள்வி கேட்க சும்மா வந்தாங்க பார்த்தாங்க கிளம்பிட்டாங்க என கூறுகிறார் ஆனாலும் முத்துவுக்கு சந்தேகம் வர பக்கத்தில் உள்ள பூக்கடை அக்கா உண்மையை கூறுகிறார் அவங்க மகள் வாழ்க்கையை இவர்தான் கெடுக்கிறார் என்று திட்டிட்டாங்க எனக் கூற உடனே முத்து மீனவ அழைத்துக் கொண்டு கிளம்புகிறார்.

உடனே வீட்டிற்கு சென்ற முத்து, மீனா , சுருதி ரவியை பார்த்து சண்டை போடுகிறார்கள். உங்க வாழ்க்கைய மீனா கெடுத்தாளா எப்படி நீங்க இந்த மாதிரி பேசலாம் உங்க அம்மா கிட்ட என்ன வேணாலும் சொல்லுவீங்களா என திட்டிக் கொண்டு இருக்கிறார். அந்த சமயத்தில் விஜயா இவர்கள் சண்டை போட்டுக் கொள்வதை வேடிக்கை பார்த்து சந்தோஷப்படுகிறார். அப்பொழுது அண்ணாமலை வர ஏன் காத்திக் கொள்கிறார்கள் என கேட்கிறார்.

இந்த மீனாவால் தான் ஏதாவது சண்டை வந்து இருக்கும் அதனாலதான் அடிச்சிக்கிறாங்க என விஜயா கூறியுள்ளார். உடனே அண்ணாமலை ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என அதிர்ச்சடைகிறார் சண்டை போட்டுக் கொண்டே முத்து ரவி என அனைவரும் வர அண்ணாமலை என்ன ஆச்சு என கேட்கிறார் அதற்கு முத்து நான் கீழ கார் கிளீன் பண்ண போகிறேன் என அழுத்தமாக கூறிவிட்டு செல்கிரார்.

அதனை புரிந்து கொண்ட அண்ணாமலை கீழே செல்கிறார் அப்பொழுது எதற்காக சண்டை போட்டுக் கொள்கிறீர்கள் என முத்து இடம் கேட்கிறார் அதற்கு சண்டை கிடையாது அம்மாவை சந்தோஷப்படுத்துவதற்காக சண்டை போடுவது போல் நடிக்கிறோம் என கூறுகிறார். அதற்கான காரணம் சுருதியின் அம்மாவிடம் நம்ம அம்மா சுருதி மீனா இருவரும் சந்தோஷமாக இருப்பது பிடிக்கவில்லை அதனால் ஏதேதோ சொல்லியுள்ளார்கள் அதனால் தான் இந்த சண்டை எனக் கூறுகிறார்  .

மற்றொரு பக்கம் ரோகினிக்கு உடனடியாக கால் வருகிறது தன்னுடைய அம்மாவை பார்க்க செல்கிறார் அவருக்கு என்னாச்சு என கேட்க சின்னதாக அட்டாக் வந்துள்ளது எனக் கூறுகிறார்கள் இதனால் ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் எபிசோட் முடிகிறது.