சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகிணி முத்து மற்றும் மீனாவுக்கு தூக்க மாத்திரையை கொடுத்து விடுகிறார் எப்படியாவது மொபைலில் இருக்கும் வீடியோவை எடுக்க வேண்டும் என்ற ஆசையில். அவர்கள் இருவரும் தூங்கியவுடன் பூனை போல் கதவை திறந்து விட்டு வெளியே வருகிறார் அந்த சமயத்தில் விஜயா அருகில் வந்து என்ன ரோகினி இன்னும் தூங்கலையா என கேட்கிறார்.
அதற்கு ரோகிணி இல்ல தூக்கம் வரல அதனாலதான் டீ போட்டு குடிக்கலாம் என்று நினைத்தேன் டீ தூள் எங்க இருக்குன்னு தெரியல என சொல்லி சமாளிக்கிறார். அப்பொழுது விஜயா அந்த மீனா எதுக்கு சிரிச்சா அந்த முத்துவும் சிரிச்சா ஏதாவது உனக்கு தெரியுமா நீ ஏதாவது கேட்டியா என கேட்கிறார், இல்ல ஆன்ட்டி அவங்க சிரிச்சாங்கன்னா பின்னாடி அழ போறாங்கன்னு அர்த்தம் நீங்க ஏன் அதை பத்தி ஒரி பண்ணிக்கிறீங்க என கூறுகிறார்.
உடனே ரோகிணி எனக்கு தூக்கம் வர மாதிரி இருக்கு நான் போய் தூங்குறேன்னு சொல்லிவிட்டு உள்ளே செல்கிறார் பிறகு விஜயாவும் சென்றவுடன் இவங்க வேற லூசு மாதிரி இடையில வந்துகிட்டு என மீண்டும் ரோகிணி கதவை திறந்து விட்டு போனை எடுக்க முயற்சி செய்யும்பொழுது குண்டு கட்டாக தூக்கி செல்கிறார் மனோஜ். நான் கனவு கண்டேன் பாரிஸில் நாம் இரண்டு பேரும் ஆட்டம் போட்ட மாதிரி எனக் கூறுகிறார். ஜீன்ஸ் படம் பாத்தியா அதனால சொல்றியா என ரோகிணி பேசிவிட்டு எனக்கு தூக்கம் வரல நீ போய் தூங்கு என கூறுகிறார்.
அதற்கு மனோஜ் எனக்கும் தூக்கம் வரல வா ரெண்டு பேரும் ஜாலியா பேசிக்கிட்டு நடக்கலாம் எனக் கூறுகிறார் இதனால் ரோகிணி வீடியோவை எடுக்க முடியவில்லை. மனோஜ் கடைக்கு மனோஜ் வைத்த அடியாள் வந்து மிரட்டி ஐம்பதாயிரம் கேட்கிறார்கள். அதற்க்கு கரணம் முத்து அந்த அடியாளை அடித்ததால் ஹாஸ்பிட்டல் பில் 50000 வந்துடுச்சி என கேட்கிறார்அனால் மனோஜ் தர மறுப்பதால் கடையில் உள்ள பொருளை தூக்கி செல்கிறார்கள்.
அடுத்த காட்சியில் சீதா பூ கட்டிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது ஒருவர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க சீதா கிளம்பியதும் சீதாவின் அம்மாவிடம் வந்து சீதாவை எங்களுக்கு ரொம்ப பிடித்து விட்டது அவரை கல்யாணம் பண்ணிக்க என்னுடைய பையன் கொடுத்து வைத்திருக்க வேண்டும் இந்த காலத்தில் இப்படி ஒரு பெண் கிடைக்க நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என கூறுகிறார்.
அதற்கு சீதாவின் அம்மா என்னுடைய மூத்த மகள் மாப்பிள்ளை இடம் கேட்டு விட்டு சொல்கிறேன் என கூறி அனுப்பி வைக்கிறார் உடனே மீனாவுக்கு போன் செய்து இது மாதிரி சீதாவை பெண் கேட்டு வந்தார்கள் உங்களிடம் கேட்டு சொல்கிறேன் என கூறினேன் என்ற தகவலை கூறுகிறார். உடனே மீனா நான் அவரிடம் கேட்டு சொல்கிறேன் என பேசிவிட்டு போனை வைக்கிறார். மற்றொரு பக்கம் விஜயா கிளாஸ் எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது நடந்துகிட்டே போய் மோதி கொள்கிறார் உடனே அனைவரும் சிரிக்கிறார்கள்.
அதற்கு விஜயா பார்வதியிடம் அந்த மீனவால் தான் எனக்கு பிரச்சனையே எனக் கூறி எதற்காக மீனா சிரித்தால் என கேட்க சொல்கிறார் மீனாவுக்கு போன் செய்த பார்வதி என்ன விஷயம் என கேட்க அதற்கு மீனா அது ரகசியமாகவே இருக்கட்டும் எனக் கூறி விடுகிறார்.