ரோகினியின் திருட்டு வேலையை தெரிந்து கொண்ட மீனா.. பார்வதி நீ இன்னும் பச்சை குழந்தையாவே இருக்கியே..

siragadikka aasai
siragadikka aasai

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவுக்கு ரோகினியின் திருட்டு வேலை தெரிய வந்துள்ளது ரோகிணியால் மீனா பல சிரமங்களை சந்தித்து வருகிறார் அது மட்டும் இல்லாமல் முத்து மீனா இருவரும் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சந்தோஷமாக இருந்து வந்தார்கள்.

அவர்களின் சந்தோசத்தில் அடிக்கடி மண்ணை அள்ளி போட்டு வருவார் ரோகிணி செய்யும் அனைத்து வேலைகளும் முத்துமீனாவுக்கு தொல்லையாக இருந்து வருகிறது. அப்படி இருக்கும் நிலையில் ரவியை சுருதி தன்னுடைய சீரியல் ஆக்டர்ஸ் பர்த்டேவிற்கு கூப்பிட ரவி வர மறுக்கிறார்.

அதற்கு காரணம் தான் வேலை செய்யும் ஹோட்டலில் புதிதாக ஒரு ஆர்டர் வந்துள்ளதால் அதனை டெலிவரி செய்ய கிளம்புகிறார் ஆனால் அவர் டெலிவரி செய்யும் இடம் ஸ்ருதி செல்லும் இடம் ஒன்றுதான் இருவரும் பர்த்டே பார்ட்டியில் சந்தித்துக் கொள்கிறார்கள் இதனால் பிரச்சனை வெடிக்கிறது.

ஸ்ருதி கோவமாக வீட்டிற்கு செல்கிறார் ரவி எவ்வளவு சொல்லியும் ஸ்ருதி கேட்பது போல் தெரியவில்லை. ஒரு வழியாக ரவி ஸ்ருதிக்கு இடையே சண்டை ஆரம்பித்துவிட்டது அதேபோல் மீனா பூ கொடுக்கும் செல்லும் பொழுது மீனாவை காதலிப்பதாக ஒருவர் வந்து நிற்கிறார் அதனை முத்துவிடம் வீணாக்கூற அவனை அடிப்பதற்கு முத்து பிளான் போடுகிறார்.

பார்வதி வீட்டிற்கு மீனா செல்ல பார்வதி மீனாவை புகழ்ந்து பேசுகிறார் அதுமட்டுமில்லாமல் விஜயா பேசாமல் இருப்பது வருத்தத்துடன் கூறுகிறார். அதன் பிறகு ரோகிணி 2 லட்சம் பணத்தை கொடுத்து வீட்டில் சண்டை வரக்கூடாது என்பதற்காக தான் பணம் கிடைத்து விட்டதாக கூற சொன்னார் என்ற உண்மையை கூறி விடுகிறான் இதனை மீனா கேட்டு அதிர்ச்சடைகிறார்.

ஆனால் இந்த விஷயம் மீனாவிற்கு தெரியாது உடனே பார்வதி உனக்கு தெரியாதா நான் உளறிட்டேன் தயவுசெய்து வீட்டில் சொல்லாத ரோகினி யார்கிட்டயும் சொல்ல கூடாதுன்னு சொன்னா என உண்மையை கூறுகிறார் ஒரு வழியாக ரோகினையும் திருட்டு வேலை மீனாவுக்கு தெரிய வந்துள்ளது.