விஜயா, மனோஜை கதரவிட்ட மீனா.. முத்துவுக்கு கட்டம் கட்டிய ரோகிணி.. சிறகடிக்க ஆசை பரபரப்பான எபிசோட்..

siragadikka aasai meena action
siragadikka aasai meena action

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா மற்றும் விஜயா மற்றும் மனோஜை பெல்டால் அடித்து கதற விடுகிறார் பிறகு நீண்ட நேரம் ஆகி அடி வாங்கிக் கொண்டிருக்கும் மனோஜ் ரோகிணி வந்தவுடன் ரோகிணி பின்னால் ஒளிந்து கொள்கிறார் பிறகு ரோகிணிக்கும் அடி விழுகிறது அதன் பிறகு ரோகிணி மன்னிப்பு கேட்பதால் மீனா விட்டு விடுகிறார் உடனே விஜயாவை பார்க்க விஜயா சிலை போல் கீழே விழுகிறார்.

ஆனால் இது எல்லாம் மீனா நினைத்துப் பார்க்கிறார் உடனே விழுந்து விழுந்து சிரிக்கிறார் என்ன ஏது என்று புரியாமல் மனோஜ் மன்றம் விஜயா முழிக்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் மீனாவிடம் எதற்காக சிரிக்கிறாய் என கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால் மீனா சொல்ல மறுக்கிறார். அந்த சமயத்தில் ரோகினி மீனா என்னாச்சு என கேட்க ரோகினி இடம் சொல்ல மறுக்கிறார்.

மேலும் முத்து வரும்பொழுது மனோஜ் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருக்க என்னாச்சு என கேட்க உன் பொண்டாட்டி எதுக்கு சிரிக்கிறான்னு தெரியல விழுந்து விழுந்து சிரிக்கிற என விஜயா கூறுகிறார் உடனே முத்து மீனாவிடம் கேட்க விஜயா மற்றும் மனோஜ் முகத்தை மீண்டும் பார்த்து சிரிக்கிறார். சிரித்துவிட்டு ரூமுக்குள் ஓட போகிறார் அப்பொழுது முத்து என்ன என கேட்கிறார் முத்துவிடம் காதில் நடந்ததை கூறுகிறார்.

உடனே முத்துவும் விழுந்து விழுந்து சிரிக்க விஜயா கோபப்பட்ட அண்ணாமலையிடம் முறையிடுகிறார் அண்ணாமலை என்ன என கேட்க அது ரகசியமாகவே இருக்கும என கூறிவிட்டு மீண்டும் ுத்து சிரிக்கிறார். சுருதி தன்னுடைய அம்மா வீட்டிற்கு போனதால் சுதா சந்தோஷப்படுகிறார் அதுமட்டுமில்லாமல் இவளை இங்கேயே பர்மனெண்டாக இருக்க வைக்க வேண்டும் என பிளான் பண்ணுகிறார்கள்.

அப்பொழுது ரவி வந்து ஸ்ருதியை பார்க்க வேண்டும் என கேட்க ரூமுக்கு செல்கிறார் ரவி அங்கு சுருதி கோவமாக இருக்க பிறகு டைமண்ட் ரிங்கை கொடுத்து சமாதானப்படுத்துகிறார். இருவரும் சமாதானமாக வீட்டிற்கு செல்ல இருக்கிறார்கள் இதனை சுதாவிடம் சொல்ல இன்னும் இரண்டு நாள் தங்கி விட்டு செல்லலாமே எனக் கூறுகிறார்கள் எங்க வீட்டுக்கு போகிறோம் எனக் கூறிவிட்டு அனைவரும் செல்கிறார்கள்.மற்றொரு பக்கம் ரோகிணி வித்யாவுக்கு போன் செய்து எப்படியாவது அந்த வீடியோவை எடுத்தாக வேண்டும் என பேசிக் கொள்கிறார்கள் அதற்குள் அந்த பிஏ வீட்டுக்கு வந்தாலும் வந்து விடுவான் என வித்யா பயமுறுத்துகிறார்.

உடனே ரோகிணி அதற்கு தான் எனக்கு ஒரு பிளான் இருக்கிறது அவங்க குடிக்கும் பாலில் தூக்க மாத்திரையை கலந்து விடப் போகிறேன் அவர்கள் தூங்கிவிட்ட உடன் முத்து மொபைலில் இருக்கும் வீடியோவை எடுத்து விடலாம் என ரோகிணி முத்துவுக்கு கட்டம் கட்டுகிறார். உடனே வித்யா பார்த்து டி கொஞ்சம் டோஸ் அதிகமானாலும் வேற மாதிரி ஆகிவிடும் என பயமுறுத்துகிறார் அதெல்லாம் எனக்கு நல்லா தெரியும் என்பது போல் கூறுகிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது.