சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வரும் மீனா சமீபத்தில் ஒரு நேர்காணலில் தன்னுடைய சோக கதையை கூறியுள்ளார். மீனாவின் அப்பா ஒரு தின கூலி தொழிலாளி அவர் வேலை செய்துதான் அனைவரையும் காப்பாற்றி வந்துள்ளார். மீனா குடும்பத்தில் மூத்த பெண் வீட்டில் உள்ள அனைவரையும் கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு இருந்துள்ளது.
பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது நல்ல மதிப்பெண் எடுத்துள்ளார்.மேலும் ஆசிரியர்கள் இவர் படிப்பிற்கு உதவி செய்தார்கள். மதிப்பெண் அதிகமாக இருந்ததால் பி டெக் படிப்பதற்கு முயற்சி செய்தார் ஆனால் போதிய காசு இல்லாததால் அவர் சேர விரும்பும் கல்லூரியில் அந்த சேர்மன் மதிப்பெண்ணை பார்த்துவிட்டு அவரே உதவி செய்தார்.
இப்படி வாழ்க்கையில் அரும்பாடு பட்டு தான் அனைத்தையும் பெற்று வந்துள்ளார். பிறகு வேலைக்கு சேர்ந்தார், வேலையில் சேர்ந்து கொண்டிருக்கும் பொழுது மாடலிங் துறையை தேர்வு செய்து அவ்வப்பொழுது மாடலிங் செய்து வந்துள்ளார். அப்படிதான் இவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த கோமதி பிரியா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்க ஆரம்பித்தார் ஆரம்ப காலகட்டத்தில் இவரின் ஆடிஷனை பார்த்த பலரும் இவர் அப்பாவிப் போல் இருக்கிறார் இந்த கதாபாத்திரத்திற்கு செட்டாகுமா? என கேள்வி எழுப்பினார்கள் ஆனால் சிறகடிக்க ஆசை சீரியலில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
தனக்கு கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு தன்னுடைய நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த மக்களையும் கவர்ந்து இழுத்து உள்ளார். தற்பொழுது கோமதி பிரியாவால் சிறகடிக்க ஆசை சீரியல் டி ஆர் பி யில் நல்ல ரேட்டிங் பெற்றுள்ளது. கோமதி பிரியாவுக்கு இன்று பிறந்தநாள் என்பதால் அழகான புடவையில் கோவிலுக்கு சென்றுள்ளார். அந்த புகைப்படத்தினை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம். சீரியலில் இருப்பது போன்றவை நிஜத்திலும் ரொம்ப அழகாக, அமைதியான குடும்பப் பாங்கான பெண்ணாகவே இருக்கிறார்.