பெத்த குழந்தையை பார்க்க வந்து முத்துமீனாவிடம் சிக்கி கொண்ட ரோகிணி..

siragadikka aasai may 31
siragadikka aasai may 31

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவை அழைத்துக் கொண்டு முத்து ஹாஸ்பிடலுக்கு வந்துள்ளார் அப்பொழுது ஹாஸ்பிடலில் காமித்து விட்டு வெளியே வரும் பொழுது முத்து மீனாவிடம் இனிமே நீ எந்த வேலையும் செய்யக்கூடாது மூணு நாளைக்கு ரெஸ்ட் எடுக்கணும் தேவையில்லாம போய் பாத்திரம் விளக்குற சமைக்கிறேன் என்று ஓடினால் அவ்வளவுதான் அதுக்கப்புறம் தான் என் சவாரி எல்லாம் விட்டுட்டு உன் கூடவே இருக்கணும் உனக்காக நான் மட்டும் தான் இருக்கேன் என பேசுகிறார் முத்து.

இப்படி பேசிக் கொண்டே வரும் பொழுது க்ரிஷ் அடிபட்டு ஹாஸ்பிடலுக்கு வருகிறார் அப்பொழுது மீனா முத்து இருவரும் பார்த்துவிட்டு அவர்களை ஹாஸ்பிடலில் சேர்க்கிறார்கள் அது மட்டும் இல்லாமல் அந்த ரோகிணியின்   அம்மா மிகவும் அழுது கொண்டிருக்கிறார் அவருக்கு ஆறுதலாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

உடனே முத்து மீனா தனியாக சென்ற பொழுது ரோகினி அம்மா கடையில் இருக்கும் ரோகிணிக்கு கால் செய்து கிரிஸ்க்கு அடிபட்டதை கூறுகிறார் அது மட்டும் இல்லாமல் எந்த ஹாஸ்பிடல் என்ற விவரத்தையும் கூறுகிறார் மேலும் முத்துமீனா இங்கு இருப்பதாகவும் அவர்கள் போனவுடன் நான் போன் பண்ணுகிறேன் வா எனவும் கூறுகிறார். அங்கு ரோகினி என்னாச்சு குழந்தையை கூட உன்னால பார்த்துக்க முடியாதா என ரோகிணி அழுது கொண்டிருக்க எப்படியாவது ஹாஸ்பிடல் போக வேண்டும் என பிளான் போடுகிறார்.

உடனே மனோஜிடம் என்னிடம் ஒரு ஐடியா இருக்கிறது நமக்கு மத்த பொருளோடு ஃப்ரியா வர கிட்டு எல்லா ஹாஸ்பிடலுக்கும் நம்ம டெலிவரி பண்ணலாம் ஃப்ரீயா அதன் மூலம் மத்த பொருளை வாங்கும்பொழுது நம்ம கடையிலேயே வாங்க சொல்லலாம் என பேசுகிறார் அதற்கு மனோஜ் சூப்பர் ஐடியா உன்கிட்ட இருந்து நான் நிறைய கத்துக்கணும் என பேசிக்கொண்டு இருக்கும் பொழுது ரோகிணி கிட்ட எடுத்துக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு கிளம்புகிறார்.

ஹாஸ்பிடலுக்கு உள்ளே சென்று மேனேஜரிடம் பேசிவிட்டு ஒரு ஒரு வார்டாக அவரே டெலிவரி செய்கிறார் அப்பொழுது மீனா முத்து   கிருஷ் வார்ட்டில்  இருந்து வெளியே வர ரோகிணி நீங்க என்ன இங்க பண்றீங்க என விசாரிக்கிறார் உடனே அடிபட்ட விவரத்தை சொல்ல என்னாச்சு என பதட்டத்துடன் ரோகிணி கேட்கிறார் நீ எதுக்கு பதட்டப்படுகிறாய் என முத்து பதில் கேள்வி கேட்க குழந்தை ஆச்சு அதனால கேட்டேன் என்ன பேசுகிறார்.

நாங்க அந்த அம்மாவுக்கு சாப்பாடு வாங்க போறோம் நீங்க குடுத்துட்டு நீங்க வீட்டுக்கு கிளம்பு என முத்து பேசிவிட்டு செல்கிறார் உள்ளே சென்று ரோகிணி க்ரிஷை பார்த்து கதறி அழுகிறார் முத்து மீனா வர்ற டைம் ஆயிடுச்சு நீ கிளம்பு நான் பார்த்துக்கிறேன் என பேசுகிறார்கள் உடனே ரோகிணி வெளியே வரும் நேரத்தில் முத்து மீனா உள்ளே வருகிறார்கள் அப்பொழுது ரோகிணியை பார்த்து நீங்க என்ன கிளம்பலையா என பேசுகிறார்.

அதுமட்டுமில்லாமல் நீங்க கிளம்பலையா என ரோகினி கேட்க அந்த அம்மாவுக்கு யாருமே இல்லாதனால நாங்க பாத்துட்டு வரோம். நீங்க கிளம்புங்க என பேசுகிறார் மேலும் அந்த அம்மாவுக்கு யாருமே இல்ல ஒரே ஒரு அத்த மட்டும் தான் அவங்கள பாரின்ல சம்பாதிக்க போயிருக்காங்க சின்ன குழந்தைய விட்டுட்டு அப்படி என்ன சம்பாதிக்க வேண்டிய நிலைமை என்ன முத்து திட்ட ரோகினிக்கு கோபம் வருகிறது.

பிறகு ரோகினி சொல்லிவிட்டு கிளம்புகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.