மனோஜ் மூஞ்சில் தண்ணீர் எடுத்து ஊற்றிய முத்து.. குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க துடிக்கும் ஸ்ருதியின் அம்மா.. வார்த்தையாலே மீனாவை குத்தி கிழிக்கும் விஜயா..

siragadikka aasai may 27 episode
siragadikka aasai may 27 episode

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் காலையில் கடைக்கு போக வேண்டும் என்று கூட தெரியாமல் தூங்கிக் கொண்டிருக்கிறார் இதனால் விஜயா கொஞ்சுவது போல் எழுப்பிக் கொண்டிருக்கிறார் அதேபோல் ரோகினியும் எழுப்பிக் கொண்டிருக்கிறார் அதே சமயத்தில் வீட்டில் உள்ள அனைவரும் வந்து விடுகிறார்கள் உடனே ஸ்ருதி வேலை நினைப்பு இருந்தா யாருக்கு தான் தூக்கம் வரும் ஆனால் இப்படி தூங்குறாருஎன பேச ரோகிணி அவருக்கு டயர்டா இருக்கு அதனால தூங்குறாரு என பேசுகிறார்.

உடனே அப்பா இந்த வீட்டிலேயே ரொம்ப நேரம் தூங்க வேண்டிய ஆளே மீனாதான் அவங்க வேலையும் பார்த்துகிட்டு மத்தவங்களுக்கு ஹெல்ப் பண்றாங்க என பேசுகிறார். இப்படியே பேச முத்து அவனை எழுப்ப என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு என முகத்தில் தண்ணீர் எடுத்து ஊற்றுகிறார். மனோஜ் இப்பொழுது எழுந்து உட்காருகிறார் இதனால் முத்துவை அனைவரும் திட்டுகிறார்கள் அவன் எழுந்திருக்கிறான் எழுந்திருக்கல உனக்கு என்ன பிரச்சனை என விஜயா கேட்க அவன் எழுந்தால் தான் ஒழுங்கா கடைக்கு போவான் அதன் பிறகு தான் 27 லட்சத்தை திருப்பி தருவான் என பேசுகிறார்.

அடுத்த காட்சியில் மீனா சமைத்துக் கொண்டிருக்க மனோஜ்க்கு நெஞ்செலும்பு எடுத்து குழம்பு வை மீன் வறுத்து வை என ஓவராக பேச அதேபோல் ரோகினிக்கு வெஜிடபிள் பிரியாணி செஞ்சு வை என பேசுகிறார் அதற்கு மீனா உங்க பெரிய பிள்ளைக்கு என்னால சமைக்க முடியாது என ஒரேடியாக பேசுகிறார் ஒருநாள் ரூம்ல தூங்கிட்டான்னு இப்படி கேவலமா பண்ணுறியா என விஜயா வாய்க்கு வந்தபடி பேசுகிறார் அது மட்டும் இல்லாமல் ஏன் நீங்க ரெண்டு பேரும் ரூம்ல போய் தான் பண்ணுவீங்களா என அசிங்கமாக பேசுகிறார்.

இதனால் மீனா முகம் சுளிக்கிறார் நிறுத்துங்க உங்க பேச்சை காது கேட்க முடியல என அசிங்கமாக பேசுகிறார் உடனே அழுது கொண்டிருக்கிறார் அடுத்த காட்சியில் கீழே வாசுதேவன் ஏசியை அனுப்பி வைத்துள்ளார் அதனைப் பார்த்த முத்து இங்கே இறக்க கூடாது என சொல்ல அவுங்க அட்ரஸ்க்கு இறக்குங்க என வாசுதேவன் மனைவி சுதாவுக்கு கால் பண்ணுகிறார் அப்பொழுது ac எதற்கு அனுப்பினீர்கள் என கேட்க உங்க வீடு ரொம்ப ஹாட்டா இருக்கு அதனால என பேசுகிறார்.

அதுமட்டுமில்லாமல் நாங்க வந்தப்ப ரொம்ப வேர்த்துது என் பொண்ணு அங்க எப்படி இருப்பா என பேச இத்தனை நாளா நாங்க இங்கதான் இருந்தோம் ஏசி வாங்குனும் என்றால் எங்களுக்கு வாங்க தெரியாதா நீங்க ஒன்னும் இனமா பண்ண வேண்டாம் என முத்து பேசி விடுகிறார் இதனால் சுதாவுக்கு மூஞ்சில அடித்தது போல் ஆகிவிடுகிறது உடனே சுதாவிடம் வாசுதேவன் இந்த ஏசியை இங்கே அனுப்ப தேவ இல்ல மனோஜ் கடைக்கு திருப்பி அனுப்பு அதுக்கப்புறம் பாரு என பேசுகிறார்கள்.

உடனே சுதா ஏசி எடுத்துக்கொண்டு மனோஜ் கடைக்கே செல்கிறார் அங்கேயே ரிட்டன் செய்கிறார் பணம் வேண்டாம் உங்க கடைக்கு கொடுத்த கிப்ட் நினைச்சுக்கோங்க என பேச ஆனாலும் ரோகிணி கொஞ்ச நேரம் இருங்க என்ன சொல்லிவிட்டு பணத்தை எடுத்துக் கொண்டு தருகிறார் ஆனால் அந்த முத்துவுக்கு தான் அறிவே கிடையாது  உங்க வளர்ச்சியை முத்து தடுக்க நினைக்கிறன் என்பது ஒரு சுதா ஏற்றி விடுகிறார் இதனால் மனோஜ் மற்றும் ரோகிணி கொலைவெறியில் இருக்கிறார்கள்..