சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து மீனாவுக்கு திருமண நாள் என்பதால் அனைவரும் புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் முதலில் மனோஜ்சை பேச சொல்கிறார்கள் அப்பொழுது மனோஜ் முதல்ல நீ எனக்கு தேங்க்ஸ் சொல்லணும் என்னால தான் உனக்கு கல்யாணம் நடந்துச்சு உனக்கெல்லாம் யாரு பொண்ணு தருவா என அசிங்கப்படுத்துகிறார் இதனால் மற்றவர்களும் கோபப்படுகிறார்கள்.
அடுத்து ரோகிணியை பேச சொல்ல ரோகிணி ஒரு ஹஸ்பண்ட் திருத்துற வேலை மனைவிக்கு இருக்கு அதை சரியா பார்க்கவில்லை என்பது போல் பேசுகிறார் அதற்கு அனைவருக்கும் வருத்தமாக இருக்க பிறகு ரவி பேச பாசிட்டிவாக பேசுகிறார் உடனே அனைவரும் கைத்தட்டி கொண்டாடுகிறார்கள். அடுத்ததாக ஸ்ருதி பேசுகிறார் அப்பொழுது சுருதி முத்துவை கார்னர் பண்ணி பேசுவது போல் பேசுகிறார்.
உடனே முத்து நீயும் என் மேல தான் அன்பு எறிவியா பரவாயில்ல நான் தாங்கிக்கொள்கிறேன் என்பது போல் பேசுகிறார். அதுமட்டுமில்லாமல் ஸ்ருதி மீனாவை புகழ்ந்து பேசுகிறார் மீனா ரொம்ப நல்லவங்க என்ன ரொம்ப கேர் பண்ணி பார்த்துப்பாங்க அடுத்ததாக விஜயா பேசுகிறார் விஜயா பேசும்பொழுது அவனுக்கு மொழம் வாய் பேசுறானா இவ ஜான் வாய் பேசுவா ஆனாலும் ரொம்ப கெட்டிக்காரி. யார் என்ன சொன்னாலும் கண்டுக்காம தான் வேலை உண்டுன்னு முன்னேறி போயிட்டே இருப்பா என விஜய்யா திட்டுவது போல் புகழ்ந்து தள்ளுகிறார்.
அதன் பிறகு மீனா பேசும் பொழுது அவர் ஆரம்பத்துல ரொம்ப நல்லவரா தான் இருந்திருக்காரு இடையில ஏற்பட்ட சில மனக்கசப்பால தான் இப்படி மாறிட்டாரு அது என்னன்னு இதுவரைக்கும் என்கிட்ட சொல்லவே இல்ல ஒருவேளை என்ன இன்னும் முழுசா பொண்டாட்டியை ஏத்துக்களையாட்டுக்கு என மீனா மீனா பேச உடனே முத்து ஆமா நீ இப்ப முக்கா பொண்டாட்டி தான் என்ன பேசுகிறார்.
அடுத்த காட்சியில் சத்தியா வீட்டிற்கு வருகிறார் அப்பொழுது மீனாவின் அம்மாவை பேச சொல்வதற்கு முன்பு சத்யா வந்து விடுகிறார் சத்யா அக்காவுக்கு மாமாவுக்கும் என்னால முடிஞ்ச சுயமா சம்பாதித்து டிரஸ் எடுத்து கொண்டு வந்தேன் என கூறுகிறார்கள் உடனே முத்து அடிப்பது போல் போய் சட்டை எடுத்து போட்டுக் கொண்டு நல்லா இருக்கா மச்சான் என கிண்டல் அடிக்கிறார் சத்யா எப்படியாவது பிரச்சனை செய்யலாம் என வந்துள்ளார் ஆனால் அதற்கு இடம் கொடுக்காமல் முத்து தரமான பதிலடி கொடுத்தார்.