சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் அண்ணாமலை வீட்டில் உள்ள அனைவரும் கிளம்பி கொண்டிருக்கும் பொழுது கூப்பிடுகிறார் உங்களிடம் பேச வேண்டும் என சொல்கிறார் உடனே அண்ணாமலை என்ன சொல்லப் போகிறார் என அனைவரும் எதிர்பார்ப்புடன் இருக்க. நான் ஒரு முடிவு செய்து இருக்கிறேன் மூணு பேருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு ஆனா ரெண்டு பேரு ரூம்ல இருக்காங்க ஒருத்தன் மட்டும் மாடியிலேயும் ஹால்லையும் படுகிறது எனக்கு அவ்வளவா சரிப்பட்டு வரல அதனால் மாடியில் ஒரு ரூம் மேல கட்டப் போகிறேன் என பேசுகிறார்.
உடனே ஒரு ரூம் ஏன் கட்டிக்கிட்டு ஒரு ப்ளோரே கட்டிடலாமே என சுருதி பேசுகிறார் அது மட்டும் இல்லாமல் ரோகினியும் ரூம் மட்டும் கட்டகூடாது அட்டாச் பாத்ரூமும் கட்டணும் என பேசுகிறார் இப்படி ஆளாளுக்கு ஒன்னு பேசிக் கொண்டிருக்க முத்து அதெல்லாம் வேணாம் அப்பா ரூம் மட்டும் கட்டிக்கலாம் என பேசுகிறார். மீனாவும் ஆடம்பர செலவு தேவையில்லை ரூம் மட்டும் போதும் என கூறுகிறார்.
உடனே ரூம் கட்டுவதற்கு ஏது காசு என கேட்க அதற்கு அண்ணாமலை என் பென்ஷன் பணத்தில் லோன் போட்டு கட்டிக் கொள்ளலாம் என கூறுகிறார் உடனே முத்து அதெல்லாம் வேணாம் அதுக்கெல்லாம் அவசரமே கிடையாது உங்க கிட்ட காசு இருக்கிற வரைக்கும் தான் உங்களுக்கு மரியாதை என்பது போல் கூறுகிறார் பாட்டியும் அதையே சொல்கிறார் அதனால் மூணு பேரும் சம்பாதிச்சு கட்டிக் கொள்ளட்டும் என திட்டவட்டமாக கூறுகிறார்.
இதுக்கு என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு இருக்கிறது ரெண்டு ரூம்தான் அந்த ரெண்டு ரூம்லயும் மூணு ஜோடியும் மாத்தி மாத்தி படுத்துக் கொள்ளட்டும் என ஐடியா கொடுக்கிறார் பாட்டி இதனால் மனோஜ் ரோகினி முகம் வாடுகிறது அதேபோல் ஸ்ருதியும் சொல்ல முடியாமல் தவிக்கிறார். இடையில் புகுந்த விஜயா அவங்க ரெண்டு பேரும் பணக்கார வீட்டு பொண்ணுங்க அவங்க எப்படி வெளியில தூங்க முடியும் என பேசுகிறார்.
இப்படிப் பேச இதுதான் முடிவு என பாட்டி சொல்கிறார் அது மட்டும் இல்லாமல் இந்த வாரம் ரோகிணியும் மனோஜ் வெளியில் படுக்க வேண்டும் இத்தனை நாளா முத்துவும் மீனாவும் வெளியில படுத்து இருந்தாங்களா அவங்க ரூமில் படுக்கட்டும் என கூறி விடுகிறார்.அடுத்த காட்சியில் மனோஜ் ரோகிணி ரோகினியின் தோழி வித்யா அனைவரும் கடையை பார்க்கப் போகிறார்கள். அப்பொழுது வித்யா ரோகினி இடம் கேடி வேலை பார்க்கும் ஸ்கூல் ஒன்று ஆரம்பித்துக் கொள்ளலாம் அவ்வளவு கேடி வேலை பார்க்கிறாய் என பேசுகிறார்.
அதுமட்டுமில்லாமல் மாமனார் காசையே ஆட்டைய போட்டு கடையை வாங்கிட்டு இப்ப உன் காசுன்னு சொல்லிட்டியே என பேசுகிறார் மனோஜின் தோழர் நக்கலாக பேசிக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் கடை முதலாளி என்ன பெயர் வைக்கப் போகிறீர்கள் என கேட்க விஜயா என கூறுகிறார் கடையை நல்லா கிராண்டா ஓபன் பண்ண வேண்டும் எனவும் கூறுகிறார்.
உடனே மனோஜின் நண்பன் நடிகைகளை அழைத்து வரலாம் என பேசுகிறார் அதற்கு ரோகினியின் தோழிவித்யா நயன்தாராவையும் சமந்தாவையும் அழிச்சிட்டு வரலாமா என பேசுகிறார் இப்படி பேசிக் கொண்டிருக்க மனோஜ் ஓடிப்போய் முதலாளி சிட்டியில் உட்கார்ந்து இருக்கிறார் அதனைப் பார்த்து மனோஜின் தோழர் கோபத்துடன் பேசுகிறார். இன்னும் கடை கைக்கு மாறவில்லை எனக் கூறுகிறார் ஆனாலும் அதை கேட்காமல் இனிமே இது என் கடை தானே என பேசுகிறார் மனோஜ்.
இந்த நிலையில் மீனாவிடம் வந்து பாட்டி இனிமேல் இதுபோல் நடந்து கொள்ளாத உன்னை வேலை விட்டுட்டு இருந்தாங்கன்னா கொஞ்சமாவது பேசு நீ எதுக்கு அமைதியா இருக்க என பாட்டி கூர் செத்தி விடுகிறார் அதுமட்டுமில்லாமல் விஜயா மாதிரி ஆளுக்கு ரொம்ப மரியாதை கொடுத்தால் இப்படித்தான் நடக்கும் உன்னை கீழே வச்சு அடிச்சி அழுத்திடுவாங்க ஒழுங்கா கொஞ்சமாவது பேச கத்துக்கோ என்பது போல் பேசுகிறார்.
மற்றொரு காட்சியில் வீட்டிற்கு வந்த ரோகினி மற்றும் மனோஜ் AC போட்டுவிட்டு படுக்கப் போகிறார்கள் உடனே ரோகிணி நாம இன்னைக்கு வெளியில படுக்கணும் வா மனோஜ் போகலாம் இல்லனா உன் தம்பி முத்து பிரச்சனை பண்ணி விடுவான் என பேசுகிறார் அதேபோல் மீனா வெளியில் படுக்க போகும் பொழுது கரெக்டான நேரத்துக்கு முத்து வருகிறார் அதற்கு முன்பே சுருதியும் ஏன் இங்கே படுக்குறீங்க நீங்க இன்னைக்கு உள்ள படுக்கணும் என பேசுகிறார்.
மேலும் முத்து நாம எதுக்கு இன்னைக்கு வெளியில படுக்கணும் அவன் தான் படுக்கணும் நான் கூப்பிடுறேன் என ஓடுகாலி பயலே வெளியில் வா என கத்துக்கிறார் உடனே வீட்டில் உள்ள அனைவரும் வந்து என் கத்துறா என கேட்க அவங்க ரெண்டு பேரும் இன்னும் வெளில வரல என கூறுகிறார் உடனே மனோஜ் மற்றும் ரோகினி வெளியே வருகிறார்கள் நாங்க தான் வரமே அப்புறம் எதுக்கு கத்துறீங்க என பேசுகிறார் நான் கூப்பிட்டு தான் நீங்க வரிங்க என முத்து பதிலுக்கு பேசுகிறார் இப்படி மாறி மாறி பேசிக் கொண்டிருக்கிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.