பாட்டி சொன்ன மாஸ்டர் பிளான் வாயைத் திறக்க முடியாமல் மாட்டிக்கொண்டு முழிக்கும் ரோகினி.. முத்துவை டார்ச்சர் செய்யும் மனோஜ்..

siragadikka aasai may 19
siragadikka aasai may 19

சிறகடிக்க  ஆசை சீரியலில் சமீபத்திய எபிசோடில் முத்துவுக்கு திருமணம் நாள் என்பதால் அதனை கோலாகலமாக கொண்டாட முடிவு செய்துள்ளார்கள் அதனை எப்படியாவது சிதைக்க வேண்டும் என சுதா வளையலை வாங்கிக் கொண்டு வந்து மீனாவுக்கு கொடுக்கிறார் உடனே விஜயா யாரோ பெத்த மகளா இருந்தாலும் வளையல் போடுறதுக்கு பெரிய மனசு வேண்டும் நீங்கதான் சரியான சம்மந்தி சில பேர் கையை வீசிக்கிட்டு வருவாங்க என மீனா அம்மாவை விஜயா குத்தி காட்டுகிறார்.

அடுத்த காட்சியில் மீனா  அந்த வளையலை எடுத்து சுருதிக்கு போட்டுவிட்டு இவ என் தங்கச்சி மாதிரி அதனால் இவளுக்கு தான் இது அழகா இருக்கும் என சுதாவுக்கு பதிலடி கொடுக்கிறார் அதே போல் ஏசி இல்லை என சீன் போட அதற்கும் தரமான பதிலடி கொடுக்கிறார்கள் உடனே அசிங்கப்பட்ட சுதா இங்கிருந்து கிளம்புகிறேன் என கூறும் பொழுது அண்ணாமலை ஓடி வந்து தயவு செய்து கிளம்புங்கள் என கூறி விடுகிறார்.

இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் பாட்டி வீட்டில் இரண்டு ரூம் மட்டுமே இருப்பதால் மூன்று ஜோடிகளும் மாத்தி மாத்தி தங்கிக் கொள்ளுங்கள் எனக் கூறுகிறார் இது ரோகிணி மனோஜ்க்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அது மட்டும் இல்லாமல் முதலில் முத்து மற்றும் மீனா இருவரும் உள்ளே போகட்டும் என கூறிவிடுகிறார்.

மனோஜ் கதவை தட்டி சார்ஜர் எடுக்க வேண்டும் பெட் சீட் எடுக்க வேண்டும் என முத்துவை டார்ச்சர் செய்கிறார் வெளியே படுத்துக் கொண்டிருந்த மனோஜ் தூக்கம் வரவில்லை என ரோகிணி இடம் புலம்ப அடுத்த வாரத்துக்கு இதுக்கு ஒரு சொல்யூஷன் கிடைத்து  விடும்  ஏன் என்றால் அடுத்த வாரம் ஸ்ருதி தான் வெளியே படுக்க வேண்டும் அவளால் கண்டிப்பாக வெளியே படுக்க முடியாது கண்டிப்பாக இதனால் ஒரு முடிவு காலம் கிடைக்கும் என கூறுகிறார்.

சுருதி எதையும் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணிக்கொண்டு வெளியே படுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது ஆனால் ரோகினியின் பிளான் சுக்குநூறாக உடையும் எனவும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.